ஈரம்

  என் மழலையின் ஈரம், மணல்வீடு கட்டியதை மழைவந்து கரைத்தபோது அமாவாசையிலும் நிலவுகாண அம்மாவிடம் அடம்பிடித்தபோது !   என் நினைவுகளின் ஈரம், உடன்படித்த என்தோழி ஊருணியில் உயிர்விட்டபோது பாசமுள்ள என் பெரியம்மா மாரடைப்பில் மரணித்தபோது !   என் உணர்வுகளின் ஈரம், சுனாமிகள் மக்களைச் சுருட்டிச் சென்றபோது, பூகம்பங்கள் மனிதர்களைப் புதைத்துக் கொண்டபோது ! என் கனவுகளின் ஈரம், கிராமத்துப் பள்ளிகளில் ஆசிரியையாக இல்லாதது களையெடுக்கும் அழகைக் கண்டுரசிக்க முடியாமலானது !   என் ஆனந்தத்தின் […]

Read More

கணவன்

  ’கண்’ அவன் என்றதால்தான் கணவன் என்று பெயர்பெற்றாயோ? என்னமாயம் செய்தாயோ? ஈன்றெடுத்தோரை மறந்தேன் !   உண்டுகளித்த உடன்பிறந்தோரை நான்மறந்து போனேன் ! சேர்ந்து படித்த சிநேகிதிகளையும் துறந்தேன் !   கடமை அழைத்ததால் – உன் உடைமையான என்னை தனிமையில் விட்டுவிட்டு அயல்நாடு வந்துவிட்டாய் !   அமைதியிழந்த நான் அனலிலிட்ட புழுவானேன் ! அத்தனை உறவுகளும் அந்நியமாகிப் போயின !   உன்னுடன் நானிருந்தவேளை ஒருநாள் கூட நிமிடமாகியது ! நீயில்லாத நேரங்களோ […]

Read More

சாதனை

  காரைக்குடி பாத்திமாஹமீத், ஷார்ஜா   வானத்தை வில்லாக வளைப்பது சாதனையல்ல, வறியவர்களின் ஏழ்மையைக் களைவதே சாதனை !   தண்ணீர்த் தொட்டிகள் அமைப்பது சாதனையல்ல, ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பதே சாதனை !   இலவச உணவு எப்போதும் வழங்குவது சாதனையல்ல, இல்லாதாரின் கனவுகளை நனவாக்குவதே சாதனை !   கொடிகட்டிப் பறப்பது என்றென்றும் சாதனையல்ல, ஏழையொருவனுக்கு எழுத்தறிவித்தலே உயர்ந்த சாதனை !   பெண்மையை அடக்கி ஆள்வது சாதனையல்ல, நன்மதிப்புக் கொடுத்து மேன்மை காண்பதே சாதனை […]

Read More

இயற்கையைப் பார்ப்போம் !

காரைக்குடி பாத்திமா ஹமீத், சார்ஜா   மது ஒழிப்புப் போராட்டம் மனிதர்களுக்குத்தான் ! எந்தவண்டும் மதுவுண்ட மயக்கத்தில் யாருக்கும் கஷ்டங்கள் கொடுப்பதில்லை !   சாதிச் சண்டைகள் என்றென்றும் மனிதர்களுக்குத்தான் ! எந்தச் சேவல்களும் மதத்திற்காக சண்டைகள் போடுவதில்லை !   தீண்டாமை என்பது மனிதர்களுக்குத்தான் எந்தத் தென்றலும் யாரையும் தீண்டாமல் விடுவதில்லை !   ஏற்றத்தாழ்வுகள் என்றென்றும் மனிதர்களுக்குத்தான் ! எந்த மழையும் பணக்காரனுக்கு மட்டும் பெய்வதில்லை !   ஏமாற்றுதலும் எதிரிகளும் மனிதர்களுக்குத்தான் ! […]

Read More

நிழலும் நிஜமும்

  என்ன இந்த வாழ்க்கையென்று அலுத்துக் கொள்ளும் வேளைகளில் நிழலான சில காட்சிகள் என்கண் முன்னால் !   அடுத்தவீட்டு வாசலில் அணைத்தகைக் குழந்தையோடு அழுக்கடைந்த உடையோடு அன்னம்கேட்டிடும் பெண்ணொருத்தி ! வாழ்க்கையின் நிஜம் உணர்த்தினாள் !   கல்லூரியில் படிக்கும்மகனை காலையில் எழுப்பும்போது கனமான அவன் எதிர்காலம் கண்முன்னே நிழலாக !   தெருவிளக்கின் கீழே திறந்தபுத்தகம் கையோடு தேர்விற்காக படிக்கும் திண்ணைவீட்டுப் பையன் ! வாழ்க்கையின் நிஜம் உணர்த்தினான் !   கையில் பெட்டியுடன் […]

Read More

கல்வி

  கல்லாய் இருந்த மனிதனை உயிர்சிலையாய் மாற்றியது கல்வி ! மரமாய் இருந்த மனிதனை உயிர்ச்சிற்பமாய் மாற்றியது கல்வி !   மண்ணாய் இருந்த மனிதனை மாணிக்கமாய் மாற்றியது கல்வி ! மலையாய் இருந்த மனிதனை மரகதமாய் மாற்றியது கல்வி !   காடாய் இருந்த மனிதனை கலை ஓவியமாய் மாற்றியது கல்வி ! பாலையாய் இருந்த மனிதனை சோலைவனமாய் மாற்றியது கல்வி !   பட்டுப்போய் இருந்த மனிதனை பசுமையாய் மாற்றியது கல்வி ! சேற்று […]

Read More

அன்பு

  அடைக்கும்தாழ் தேடுகிறேன் அழிவில்லா அன்பிற்கு ! மடைதிறந்ததுபோல் வரும் அன்பிற்கு தடுக்கும் சுவர் தேடுகிறேன் !   எல்லாம் வல்ல இறைவன் மேல்கொண்ட அன்பு இப்பூவுலகை விட்டு நீங்கிய பின்பும் !   பெற்றோரிடம் கொண்ட அன்பு பிறந்தது முதல், உடன்பிறந்தோரிடம் கொண்ட அன்பு உயிர்த்தெழுந்தது முதல் !   சிநேகிதிகளிடம் கொண்ட அன்பு சேர்ந்து படித்தநாள் முதல் !   கணவரிடம் கொண்ட அன்பு காதலால் கைபிடித்த நாள் முதல் !   பிள்ளைகளிடம் […]

Read More

உறவுகள்

  வாழ்க்கையெனும் கப்பலில் பயணம்நாம் செய்திட துடுப்பாக வேண்டும் உறவுகள் !   வசந்தமான நம்வாழ்க்கை வளமாக அமைந்திட தென்றலாக வேண்டும் உறவுகள் !   முகத்திற்கு முன்சிரித்து முதுகில் நம்மைக் கொல்லும் மூடத்தனமான உறவுகள் வேண்டாம் நமக்கு !   கலங்கிய பொழுது கைகொடுத்து வாழ்க்கைச் சக்கரம் இனிதாய்ச் சுழல அச்சாணியாக வேண்டும் உறவுகள் ! தொடக்கத்தில் வந்த உறவுகள் தொலைந்து போகலாம், பாதியில் வந்த உறவுகள் மனதில் என்றென்றும் பதிந்து நிற்கலாம் !   […]

Read More

அன்புள்ள அம்மா

காரைக்குடி பாத்திமா ஹமீது ஷார்ஜா கண்ணீரைப் பெரிதாக நீ நினைத்திருந்தால் கள்ளிப்பால் இல்லாமல் என் கதை முடிந்திருக்கும் !   வேதனைகளைப் பெரிதாக நீ எண்ணியிருந்தால் நெல்மணிகள் இல்லாமல் நான் நீர்த்துப் போயிருப்பேன் !   பெண்தானே என்று நீ கருதியிருந்தால் மண்ணோடு மண்ணாக நான் மடிந்து போயிருப்பேன் !   சோதனைகள் பல கடந்து சுகமாக என்னைப் பெற்றெடுத்தவளே,   சிறப்பாக இம்மை மறுமை கல்வி கொடுத்து சீராக என்னை வளர்த்தெடுத்தவளே,   படைத்தவனைக் காண […]

Read More