சேனா ஆனா – ஓர் இலக்கணம்

( ஏம்பல் தஜம்முல் முகம்மது  ) ஆனா ஆவன்னா தமிழுக்கு உயிரெழுத்து சேனா ஆனா? கல்விக்கு உயிரெழுத்து! பலதுறைக் கல்விக்கு உயிரெழுத்து புள்ளியுள்ள எழுத்து மெய்யெழுத்து. சேனா ஆனாவே பெரிய புள்ளி ! மெய்யாகவே வழங்குகிறார் அள்ளி ! அதனால் அவரைக் குறிக்கும் மேலான எழுத்திரண்டும் புள்ளி தேவைப்படாத மெய்யெழுத்து ! மெய்யானவரைக் குறிக்கும் மெய்யெழுத்து ! வள்ளல் இனத்திலும் வல்லினம் உண்டு. சேனா ஆனாவோ மெல்லினம்; நல்லினம் எப்போதும் நடுநிலையான மார்க்கப்படியே நடப்பதால் இவரும் இடையினம் […]

Read More

மத நல்லிணக்கம்

மனுஷனாக வாழ்வதற்கே சமயங்கள் மனிதனின் விருப்பத்திற்கும் அறிவுக்கும் தக்கவாறு கொள்கைகளில் நேசங்கள் நேசக்கரங்களில் நேர்த்தியாய் செய்யப்பட்ட அரிவாள் எதற்க்கு…? அறுக்கப்படுவது பயிர்களா மனித உயிர்களா…! அறிவாள் தீர்கப்படவேண்டிய பிரச்சனைகளை அரிவாளால் தீர்த்துக்கட்டப்படுதேன்…! கருவறையின் இரகசியத்தை நம் காதுகள் கேட்பது எப்போது…? மழைப் பொழிந்து அணையில் தேங்கி நதிகளில் கலந்து ஆறுகளில் பாய்ந்து சங்கமிக்கின்றன சமுத்திரத்தில் அதில் அணை எங்கே ஆறு எங்கே நதி எங்கே…? இவைகள் நீரை சமுத்திரத்தில் சேர்க்கும் வழிகள் எந்த அணையிலிருந்து வந்தோம் எந்த […]

Read More

தியாகமே ஹிஜ்ரத்

  (முதுவைக் கவிஞர் மெளலவி அ.உமர் ஜஹ்பர் மன்பயீ)   ஆமினாரின் மணிவயிற்றில் மனிதரெனக் கருவாகி அரும்ஹீரா குகையினிலே மாநபியாய் உருவாகி தேமதுர தீன்காக்க தவ்ரு குகையில் மறைவாகத் தனித்திருந்த திருநபியின் ஹிஜ்ரத்தைக் கூறுகிறேன் !   தமக்காக வாழாமல் தன்னலத்தைப் பாராமல் தரணிமுழு மனிதருக்கும் தானுருகி ஒளியுமிழந்து எமைக்காத்த உத்தமரின் தனிப்பயணம் ஹிஜ்ரத்தாம் ! இதயத்தை சுடுமணலில் நடத்திவைத்த சரித்திரமாம் !   மக்கத்துப் பாறையிலே தீன்விதையை முளைக்க வைத்து மதீனத்து மனங்களிலே மறுநடவாய்ப் பதியமிட்டு […]

Read More

தியாகத்தின் உச்சமே ஹஜ் பெருநாள்

   புனிதத் திருநாள் நல் வாழ்த்துக்கள். ————————————————————— இபுராஹிம் நபி, அன்னை ஹாஜரா, இஸ்மாயில் நபி, இவர்களின், நிகழ்வுகளே நினைவுகளாய், ஹஜ்ஜின் கடமைகளாய், ஹஜ் பெருனாளாய் உலகம்   எங்கும், கொண்டாடும் திருநாள் ======= இறைவனின் ஆணை, கனவை நனவாக்கினார் தியாக நபி இபுராஹிம் அன்னை ஹாஜரா,இஸ்மாயிலை, பாலை தனில் விட்டுச் சென்றார் எங்கும் கொடும் வெப்பம், அக்னியை சுமந்த அனல் காற்று, தனலை தாங்கிய குன்றுகள், தங்கிட குடிலில்லை, இளைப்பாற கூடாரமில்லை, தனிமை சூளலால்  படபடப்பு, யாருமற்ற வெருமையின் தகிப்பு, கொண்டு […]

Read More

கடலின் பயணம் ஹஜ் .. !

கடலின் பயணம் ஹஜ் .. !   நாம் பார்க்க நதிகள் நடந்து போய் கடலைச் சேரும் !   ஆனால்… ஒரு அதிசயம் கடலே திரண்டு போய் புனித கஅபாவைக் காணப்போகிறதே… அதுதான் ஹஜ்..!   இன்னும் சிறப்பாகச் சொல்வதானால் தாய் மடி தேடிச் செல்லும் தொப்புள் கொடிகளின் பயணமே … ஹஜ்.. !   மெய்யாகவே சமத்துவபுர மென்றால் மாநகர் மக்காதான் ! அங்கே தான் நிறம் கடந்து இனம் கடந்து மொழி கடந்து […]

Read More

கல்வி என்பது … ! ( புலவர் செ. ஜாஃபர் அலி, B.lit., கும்பகோணம் )

    கல்வி என்பது கடைச் சரக்கன்று !   கற்க கற்க வளரும் அறிவின் பதிவேடு !   பொய்மை போக்கி வாய்மை உணரும் காலச் சுவடு !   இது தான் உண்மையான – நிலையான – அழிவில்லாத செல்வம் !   பிற பொன், பொருள் செல்வங்கள் கானல் நீரே !   உலகில் கருவூலம் கல்வியறிவே !   அறிவு ஜீவிகளின் கலங்கரை விளக்கு !   மனித ஒழுக்கத்தைக் கட்டிக் […]

Read More

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்

மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.  இசை அமைத்தவர்: மெல்லிசை மன்னர்  எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். “ நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில் தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே !தமிழணங்கே ! உன் […]

Read More

கோடையும் வாடையும்

திருச்சி – A. முஹம்மது அபுதாஹிர் கொளுத்துகின்ற கோடை வெயில் கொடுமையானது ! அதனை விட வரதட்சணையால் பல பெண்கள் உயிரோடு கொளுத்தப்பட்டது கொடுமையானது ! வசந்த காலத்தின் தென்றலைப் பார்க்க ஆசைப்பட்டவர்கள் வரதட்சணை தீயின் வாடைக் காற்றில் வாடி வருகிறார்கள் ! மே, ஜூன், ஜூலை வாடைகாற்று உடலெல்லாம் வியர்த்து விட்டது ! வரதட்சணைக் கோடையால் மேனியெல்லாம் தீ ஜூவாலை சகோதரிகள் பலரின் உயிரை கரித்து விட்டது ! எத்தனை டிகிரி வெயிலடித்தடித்தாலும் அது குறைவானதுதான் […]

Read More

நமது பாராளுமன்றத்தில் பாடப்பட்ட முதற் பாட்டு ! : Saare Jahan Se Achcha

1947 _ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ஆம் நாள் டெல்லிப் பாராளுமன்றத்தில் பாடப்பட்ட முதல் பாட்டு இதுதான். ஸாரே ஜகா(ன்)(ஸே) அச்சா(ஹ்) ஹிந்துஸ்தா(ந்) ஹமாரா ஹம் புல்புலே(ன்) ஹை(ன்) உஸ்கி ஏ குலிஸ்தா(ன்) ஹமாரா – என்று துவங்க்கும் இந்தப் பாடல் நமது நாட்டின் முதல் பிரதமரான நேருஜிக்கு மிகவும் பிடித்தமான பாடல். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இந்தப் பாடலை நேருஜி தவராமல் பயன்படுத்துவார். இப்பாடலின் பொருள்:- உலகம் யாவினும் சிறந்தது எங்க்கள் ஹிந்துஸ்தான் :  இந்தப் […]

Read More

ஈரம்

  என் மழலையின் ஈரம், மணல்வீடு கட்டியதை மழைவந்து கரைத்தபோது அமாவாசையிலும் நிலவுகாண அம்மாவிடம் அடம்பிடித்தபோது !   என் நினைவுகளின் ஈரம், உடன்படித்த என்தோழி ஊருணியில் உயிர்விட்டபோது பாசமுள்ள என் பெரியம்மா மாரடைப்பில் மரணித்தபோது !   என் உணர்வுகளின் ஈரம், சுனாமிகள் மக்களைச் சுருட்டிச் சென்றபோது, பூகம்பங்கள் மனிதர்களைப் புதைத்துக் கொண்டபோது ! என் கனவுகளின் ஈரம், கிராமத்துப் பள்ளிகளில் ஆசிரியையாக இல்லாதது களையெடுக்கும் அழகைக் கண்டுரசிக்க முடியாமலானது !   என் ஆனந்தத்தின் […]

Read More