பதவி ! ——— கவிக்கோ அப்துல் ரஹ்மான்

எத்தனை பதவிவெறி இந்த மனிதருக்கு ? செத்தால் அதையும் சிவலோக பதவியென்பார் ! பத்தெடுத்த மாதங்கள் பாரம் சுமக்காமல் தத்தெடுத்துப் பிள்ளைக்குத் தாயானால் பெருமையுண்டா ? வித்தெடுத்துத் தூவி வியர்க்காமல், உமிச்சிப்பி முத்தெடுக்க முந்தும் மூடர்க்கு உரிமையுண்டா ? தகுதி இலாதார்க்குத் தரலாமா உயர் பதவி? சகதிக்கு எதற்காகத் தங்க மணிக்கிண்ணம் ? தேனூறும் மலர் அமர்ந்தால் சிறப்படையும் கார்கூந்தல் பேனேறி ஆட்சி செய்தால் பெருமையுண்டா ? சேவலைப்போய் முட்டை அடைகாக்க முன்னமர்த்தி, முட்டையிடும் பெட்டைக்குக் கூவுகின்ற […]

Read More

கடவுளே பதில் சொல்வாய் ! (கவிக்கோ அப்துல் ரகுமான்)

1978ஆம் ஆண்டு காயல் பட்டினத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமை யில் நான் கலந்து கொண்ட முதல் கவியரங்கம் .அந்தக் கவியரங்கத்தில் கவிக்கோ அவர்கள் பாடிய அற்புதமான தலைமைக் கவிதை இது .இதுவரை எந்த ஊடகத்திலும் வெளிவராத இக்கவிதை  தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் -( பி எம் கமால் , கடையநல்லூர் ) கடவுளே பதில்சொல்வாய் ! (கவிக்கோ அப்துல்ரகுமான்) எங்கள் சரித்திரத்தின் இருண்ட !காலமது ஏகத்துவச் சுடர் எண்ணெய் இன்றி இருட்டுப் போரில் இளைத்துக் கொண் !டிருந்தது கிரகண நோயில் கிரணங்கள் […]

Read More

நோன்பு

( கவிக்கோ அப்துல் ரகுமான் ) அருளின் தேவதை ஆண்டுக்கொருமுறை கால வீதியில்காலெடுத்து வைக்கின்றாள் -சாந்தியின் தூதாக ! அவள்தான் ரமழான் ! அவள் புன்னகையில் ஆயிரம்  பூர்ணிமைகள் !கண்களிலே கருணைச் சுடர்கள் ! அவள் நான்கு வேதங்களை ஈன்றளித்தபுனிதத்தாய் ! பாவக் கறைகளை அவள்பரிவோடு துடைக்கின்றாள் ! நரகக் கூண்டுகளில் அடைபட்ட பறவைகளை விடுதலை செய்கின்றாள் ! பிறைச் சுடர் கொண்டு அக அகல்களில் எல்லாம் ஆன்மீக வெளிச்சம் ஏற்றி வைக்கின்றாள் ! பசியென்ற அமுதம் […]

Read More

கோடுகள்

கோடுகள் நாம் கோடு கிழிப்பவர்கள் கோடுகளால் கிழிக்கப்படுகிறவர்கள் சில கோடுகளை நமக்காகப் பிறர் கிழிக்கிறார்கள் சில கோடுகளை நமக்காக நாமே கிழித்துக்கொள்கிறோம் நாம் கோடுகளால் வரையப்படுகிறோம் கோடுகளால் அழிக்கப்படுகிறோம் நாம் கோடுகளின் அடிமைகள் நாம் கோடுகளாலேயே அறியப்படுகிறோம் ஓவ்வொருவரைச் சுற்றியும் இருக்கிறது இலக்குவனக் கோடு இராவணன் மட்டுமல்ல இராமனும் இருக்கிறான் கோடுக்கு அப்பால் நாம் பாதுகாப்புக்காகக் கோடுகள் வரைகிறோம் கோடுக்கு உள்ளேயும் வருகிறது ஆபத்து நாம் கோடு கிழித்து விளையாடுகிறோம் கோடுகள் நம் ரேகைகள் ஆகிவிடுகின்றன நாம் […]

Read More