13 வயதுக்குக் குறைந்தவர்களை ’ஃபேஸ்புக்’ பார்க்க அனுமதிக்கக்கூடாது !

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தை 13 வயதுக்குக் குறைவானவர்கள் பார்க்க உரிமை இல்லை என்ற கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும் என்று அதன் நிர்வாகத்திடம் தில்லி உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, முன்னாள் பாஜக மூத்த தலைவர் கே.என். கோவிந்தாச்சார்யா தாக்கல் செய்த பொது நல மனுவை தலைமை நீதிபதி (பொறுப்பு) பி.டி. அகமது, நீதிபதி விபு பக்ரு அடங்கிய அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரித்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வீராக் குப்தா, “ஃபேஸ்புக் போன்ற சமூக […]

Read More

மின்னஞ்சலை கண்டுபிடித்த தமிழன் !

இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் மின்னஞ்சலின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக மாறி வருகிறது. ஆனால் அதை கண்டுபிடித்தவர் தமிழகத்தில் ராஜபாளையத்தைச் சேர்ந்த மென்பொருள் விஞ்ஞானியான சிவா அய்யாத்துரைதான் என்பது பலருக்கும் தெரியாது.   அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த அவரது தாயுடன் பள்ளி மாணவர்களுக்கான கணினி நிரல் எழுதும் பயிற்சி முகாமில் கலந்து கொண்டார்.   அப்போது, அங்கு கற்றுத் தந்துகொண்டிருந்த பேராசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு எழுத்தளவில் இருக்கும் அலுவலகப் பணிகளை பரிமாற்றம் செய்வதை […]

Read More

தமிழ் அகராதி

http://www.ekalai.com/kalanjiam/download/ இணையத்தில் உலா வரும் தமிழர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் உதவும் நோக்கத்தில் ஆஃப்லைனிலேயே இயங்கக்கூடிய ‘ஆங்கிலம் – தமிழ்’ அகராதி மென்பொருளை உருவாக்கி இருக்கிறார், திருப்பூரைச் சேர்ந்த சேகர். தொழில்நுட்பத் துறையைக் கல்வி நிலையத்தில் படிக்காமல், தனது முயற்சிகளால் தாமாகவேத் தேடிப் பயின்று, இளம் மாணவர்களுக்கு கற்றுதரும் அளவுக்கு முன்னேறி இருக்கிறார், இந்த 40 வயது இ-கலைவன். கோவை – சரவணம்பட்டியில் குமரகுரு கல்லூரிக்கு அருகில், ‘இ-கலை’ கணினி என்ற தொழில்நுட்ப பயிற்சி மையம் ஒன்றையும் நடத்தி […]

Read More

புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !

நிறைய விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது ? அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது. புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும். தெரியும் என்றால், எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். “அதான் போன்ல இருக்குமே… […]

Read More

கணினி குறித்த வீடியோ பாடங்கள்

சதீஷ் என்பவர், தமிழில் பல வீடியோ பாடங்களை உருவாக்கி இலவசமாக அளித்து வருகிறார்.   HTML Firebug Javascript CSS Ubuntu Basics VIM Git   போன்றவற்றை சொல்லி தருகிறார்   அவற்றை காண இங்கே செல்லவும். http://www.youtube.com/user/sathishmanohar/videos   அவரது மின்னஞ்சல் design.sathish@gmail.com

Read More

தமிழ் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உருவாக்கத்துக்கு தனி மையம்

சென்னை: “தமிழ் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உருவாக்கத்துக்கு தனி மையம் உருவாக்கப்படும். அதற்காக, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை, மானிய கோரிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது: தமிழ் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உருவாக்க தேவையான கம்ப்யூட்டர், சாப்ட்வேர், கருவிகள் மற்றும் சேவைகளை உள்ளடக்கிய, சாப்ட்வேர் உருவாக்கும் மையம், தமிழ் இணைய கல்வி கழகத்தில் நிறுவப்படும். ஆக்கப்பூர்வ எண்ணங்களைக் கொண்டிருப்போர், ஆய்வுகளையும், பரிசோதனைகளையும், இம்மையத்தில் மேற்கொள்ளலாம். இதற்காக, தமிழ் இணைய கல்வி கழகத்துக்கு, […]

Read More

ஆன்லைன் மூலம் புரோகிராம் (கணினி மொழி) எழுதி நம்மை வல்லவர்களாக மாற்ற உதவும் தளம்

  புதிதாக கணினி துறைக்குள் புகும் நண்பர்கள் தான் தற்போது பலவிதமான கணினி மொழிகளை வெகுவிரைவாக கற்று அந்த மொழியில் வல்லவர்களாக உள்ளனர்,ஒருவர் எந்தத்துறையில் இருந்தாலும் கணினியில் புரோகிராம் எழுதி திறமையானவர்களாக  மாற நமக்கு ஒரு தளம் உதவி செய்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. படம் 1 கணினி மேல் கொண்ட காதலால் பலர் இன்னும் கட்டற்ற பல மென்பொருட்களை இலவசமாக கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். புதிதாக கணினி மொழி கற்க விரும்பும் அனைவருக்கும் எளிதாக கணினி மொழி கற்றுக்கொடுக்கவும் […]

Read More

சிக்கலான கிறுக்கல் விழுந்த சி.டி.களிலிருந்து தகவல்களை பெற இதோ ஒரு எளிய முறை !!!

இன்று கணினி வைத்திருப்பவர்கள் என்று இல்லாமல் அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய சிக்கல் என்ன வென்றால் சி.டி தாங்க சி.டி யில் நாம் நம்முடைய போடோக்களிலிருந்து, பிறந்தநாள் நிகழ்சிகள், திருமண நிகழ்சிகள், நமது தனிப்பட்ட விஷயங்கள் அவரைக்கும் பதிவு பண்ணி பாதுகாத்து வருகிறோம். ஆனால், இதிலும் ஒரு பெரிய சிக்கல் வந்து விடும். அதுதான் சி.டி.கள் மோசமாகி போவது அதாவது சி.டி களில் சிக்கல் ஏற்பட்டு விடும் உராய்வு, தூசு படித்தல் போன்ற பல காரணங்களால் சி.டியில் […]

Read More

இந்தியாவில் 20 வயதாகும் இ-மெயில்

இ-மெயில் இல்லாத உலகை நாம் நினைத்துப் பார்க்கவே முடியாது. குறிப்பாக அலுவலகங்களில் பெரும்பாலான தகவல்கள் மற்றும் அறிக்கைகள் போன்றவை இ-மெயில் மூலமாகவே செய்யப்படுகின்றன. அந்த அளவிற்கு இ-மெயிலின் பயன்பாடு மிகவும் அதிகமாயிருக்கிறது. தற்போது அந்த இ-மெயிலுக்கு 41 வயதாகி இருக்கிறது. 40 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த ரேய் தாமிலின்சஎன் என்பவர் முதன் முதலாக இ-மெயிலை அனுப்பினார். 1971 அக்டோபரில் தாமிலின்சன் இரண்டு கணினிகளுக்கு இடையே செய்தியை அனுப்பும் சாப்ட்வேரை உருவாக்கினார். ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்புதான் […]

Read More

கணினிக் கல்வி இதழ் செய்திகள்

கணினிப்பாவனையாளர்களுக்காக நான் வாசித்த சில விடையங்களை  கணினியைப் பயன்படுத்தும் உங்களுக்கு உதவியாக இருக்கும் வாசித்துப்பயன் அடையுங்கள். கம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம் இன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த டப்ட்ஸ் (Tufts) பல்கலைக் கழகம், சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இவற்றைப் பின்பற்றுவதால், ஏற்கனவே நாம் புவி […]

Read More