திருக்குறள்

உலகில் அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூல் திருக்குறள் என்று பெருமை கொள்ளலாம். நரிக்குறவர்கள் பேசும் வக்போலி மொழி உட்பட திருக்குறள் இன்றளவும் 26 மொழிகளில்  மொழியாக்கம்  செய்யப்பட்டுள்ளது. திருக்குறளை ஆங்கிலத்தில் மட்டும் 40 பேர்கள் மொழிபெயர்த்துள்ளனர். விவிலியம் ( BIBLE ) தான் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்றும், அதற்குப் பின்னரே திருக்குறள் என்றும் பலர் கூறுவர். விவிலியம் மதச் சார்புடைய நூல் என்பதைக் கணக்கிலெடுத்தால், திருக்குறளே முதலிடம் பெறுகின்றது. திருக்குறளில் ஏழு என்ற […]

Read More

காயிதெ மில்லத் (ரஹ்) – தியாகத்தின் திருவுருவம்.!

காயிதெ மில்லத் (ரஹ்) அவர்களின் 87-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிராஜுல் மில்லத் அவர்கள், தனது `மணிவிளக்கு’ மாத இதழில் 1982-93 வருடங் களில் எழுதிய கட்டுரையை அவர்களின் 118-வது பிறந்த நாளான இன்று இதன் அடியில் தந்திருக்கிறோம். காயிதெ மில்லத் (ரஹ்) அவர்களின் பிறந்த நாள் சமுதாயத்தின் நன்றியுள்ள வர்கள் நடமாடும் இடங்களி லெல்லாம் கொண்டாடப்படு கிறது. இப்படி சிலரின் பிறந்த நாட்கள் நினைவு கொள்ளப்படுவதன் காரணமாக வாழ்ந்து சிறந்த அவர்களு டைய வளமார் பண்புகளை […]

Read More

மலரும் நினைவுகள் : 1993 ஜுன் 18 :ஷுஐபு ஆலிம் எழுதிய நூல் வெளியீட்டு விழா

1993 ஜுன் 18 :ஷுஐபு ஆலிம் எழுதிய நூல் வெளியீட்டு விழா  : ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது   கீழக்கரை அப்ஸலுல் உலமா டாக்டர் அல்ஹாஜ் தைக்கா ஷுஐபு ஆலிம் ஆங்கிலத்தில் ஓர் ஆராய்ச்சி நூல் எழுதி இருக்கிறார். தமிழகம் மற்றும் ஸ்ரீலங்காவைச் சேர்ந்த தமிழ் பேசும் முஸ்லிம்கள். அரபு, அரபுத் தமிழ், உர்தூ, பார்ஸி ஆகிய மொழிகளுக்கும், இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் இந்தியாவிலும், அதன் அண்டை நாடுகளிகும் செய்த அளப்பரிய சேவைகள் பற்றி சுமார் 28 ஆண்டுகளாக […]

Read More

தமிழில் அறிவியல் படித்தால் ..!

  க. சுதாகர்   “பள்ளி இறுதி ஆண்டு வரை தமிழில் படித்த அறிவியல் மிக ஆழமாகப் பதிந்திருக்கிறது. அறிவியலை தமிழில் படிப்பது என்பது மிகச்சிறந்த புரிதலுக்கு வழிவகுக்கும் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமன்று, நேரடியான பட்டறிவுமாகும்.” என்று இணையத்தில் நடராஜன் என்னும் அன்பர் எழுதியதை ஏற்று உறுதிப்படுத்தி வந்த கட்டுரை இது. அன்பின் நடராஜன் ! சரியாகச் சொன்னீர்கள். தமிழில் படிப்பதில் புரிதல் எளிதாகியிருந்தது. நான் தமிழ்ப் பள்ளியில் பயின்றவன். பத்தாம் வகுப்பு […]

Read More

தமிழுக்காகக் குரல் கொடுத்த காந்தியடிகள்

      தமிழ் இந்தியாவின் தலைமைமொழி என்றும் இலண்டன் பல்கலைக் கழகத்தில் அதனைப் பாட மொழியாக்க வேண்டும் என்றும் இந்தியாவின் தேசத் தந்தையாகப் போற்றப்படும் காந்தியடிகள், 1906 ஆம் ஆண்டிலேயே குரல் கொடுத்திருக்கிறார். (ஆனால் தமிழ்நாட்டிலேயே தமிழ் இன்னும் பாடமொழியாக்கப்படவில்லை என்பதும், மாறாக மழலையர் பள்ளியிலிருந்தே தமிழ்நாட்டில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்பதும் இன்றுள்ள அவலநிலை) தமிழை விருப்பப் பாடமொழியாக இடம் பெறச் செய்யவேண்டும் என்று காந்தியடிகள், 1906 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக் கழகத்துக்குக் கடிதம் […]

Read More

அமைதி தரும் இன்பம்

  என்.எஸ்.எம். ஷாகுல் அமீது   அமைதி என்னும் மூலப்பண்பில் இருந்துதான் அனைத்து பண்புகளும் வெளிப்படுகின்றன. மரணித்து விட்டதாக நாம் கருதும் பூமியின் மீது ஒரு சில மழைத்துளி விழுந்ததுமே, புல்வெளிகள் புறப்பட்டுப் படருகின்றன. அமைதியான இதழில் புன்னகை பூக்கிறது ! அமைதி இழந்த மனதில் பூகம்பம் பிறக்கிறது. அமைதி தழுவினால் ஆனந்தமும், அமைதி அழிக்கப்பட்டால் பிரளயமும் உருவாகிறது. மனித மனத்தின் சில பண்புகள் அமைதியின் சுயம்பாக வெளிப்பட்டு உலகை அன்புருவாக மாற்ற முயலுகிறது. மற்றவை அமைதியைக் […]

Read More

சாதனையாளர்கள் சந்திப்பு : எம். சாகுல் அமீது

  இறைவன் அருளிய அருட்கொடை   திறமை இல்லாத மனிதன் யாருமே கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். இயற்கையாகவே ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு திறமையை இறைவன் அருட்கொடையாக வழங்கி இருக்கிறான். அந்த அருட்கொடை எது – நமது திறமை எது? என்பதை நாம் அறிந்து, அதை சரியாக பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம். வெற்றிக்கு விலாசம் சொல்லும் இந்த நல்லவர் எம்.சாகுல் அமீது. குடந்தை மண்ணின் மைந்தர். கடந்த 25 ஆண்டு காலமாக அமீரகத்தில் […]

Read More

வள்ளல் சீதக்காதி மண்டபம்

    கீழக்கரையில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதி மரைக்காயர் அவர்களின் நினைவிடமும், அதன் அருகே அவரது நினைவாய் கட்டப்பட்டிருக்கும் மஸ்ஜீதும் இன்றளவும் அவரது கொடைத்தன்மைக்கு சாட்சியாக நிலைத்து நிற்கின்றன. வள்ளல்கள் நிறைந்த கீழக்கரை எனும் இச்சிற்றூரில் இன்று சமுதாய உயர்வு மற்றும் நாகரீக உயர்வாலும் நவீன மருத்துவமனைகள் மற்றும் கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகள் என உயர்ந்து நிற்கும் கட்டிடங்களாலும் சிற்றூர் எனும் தோற்றம் மாறுபட்டு தெரிகிறது. இந்த சமூக, கல்வி மற்றும் பொருளாதார மாற்றங்களுக்கெல்லாம் முன்னோடியாக […]

Read More

பார்வையற்ற முதல் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்!

பார்வை இழந்த ஒருவர், யாரும் செய்யாத உலகச் சாதனையை செய்து விட்டு அந்தச் சாதனையைக்கூட வெளியே சொல்லாமல் இருக்கிறார். அப்படிப்பட்ட சாதனையாளர் தான் கிரியோன் கார்த்திக். தற்போது தியேட்டர்களில் ஒடிக்கொண்டிருக்கும் “கருட பார்வை’ என்ற திகில் படத்தின் இசை அமைப்பாளர்தான் இந்த கிரியோன் கார்த்திக். ஒரு பாட்டை “கம்போஸ்’ செய்யும் பார்வையற்ற கலைஞர்கள் உண்டு.,ஆனால் மவுனமாக திரையில் ஒடும் திரைப்படத்திற்கு “ரீரிக்கார்டிங்’ எனும் உயிர் கொடுக்கும் வேலையை செய்ய அவர்களில் யாரும் இல்லை. காரணம் நிமிடத்திற்கு நிமிடம் […]

Read More

நெஞ்சு பொருக்குதில்லையே!

http://ksnanthusri.wordpress.com/2013/05/26/44/ நெஞ்சு பொருக்குதில்லையே! By ksnanthusri on மே 26, 2013 ணெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்! என்ற பாரதியின் வரிகள் மிகச் சத்தியமானவை! இன்றய பள்ளி, கல்லூரி பருவத்து மாணவர்கள், இளைஞர்களைப்பார்க்கும்போது இப்பாடல்தான் எனக்கு நினைவு வரும். முன்பெல்லாம், பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் நடைபெறும், அதில் பல நல்ல கருத்துகள் ஆசிரியர்களால் நிரைய வழங்கப்பெறும், ஆனால் இன்று அதற்கெல்லாம் யாருக்கும் நேரமில்லை. இன்றய கல்வி முறை, சமுதாயச்சூழல், நண்பர்கள், சினிமா உள்ளிட்ட […]

Read More