சேமிக்கப் பழகுவோம்

By ஜி. ஜெயராஜ் குருவி சேர்த்தாற் போன்று…’ என்று பணத்தை சிறுகச் சிறுகச் சேர்ப்பதைப் பற்றி கூறக் கேள்விப்பட்டிருப்போம். பணத்தைச் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்தால்தான் அவசர தேவைக்கும் எதிர்காலத்துக்கும் நமக்கு பயன்படும். கிராமத்தில் முதியவர்கள் துணியில் காசை போட்டு முடித்து இடுப்பில் செருகி வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். சிறுவயதில் பாட்டியிடம் காசு கேட்டால் அந்த முடிச்சை அவிழ்த்துதான் எடுத்து தருவார். நமது காசை நாமே சேர்த்து வைத்துக் கொள்வதுதான் நல்லது என்ற பாடம் அதில் உள்ளது. அது பணமாக […]

Read More

மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் இணைய நூலகம்

மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் இணைய நூலகம் – புதிய கட்டுரை அறிவிப்பு மடல்   தனி மரம் தோப்பாகுமா ? ஆகும் அது தன்னை ஒரு ஆலமரமாக மருவிக்கொள்ளும் பொழுது……   மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் ஒரு பகுதியான இணைய நூலகம் இன்று முதல் இயங்கத்துவங்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.   இப்படியொரு நூலகத்தை துவங்கவேண்டும் என்று ஜூன் 15 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் உயர்மட்ட குழுவால் தீர்மானிக்கப்பட்டது.   அடுத்த […]

Read More

சிரிப்புதிர் கணம்

வாழ்க்கை என்பதற்கு எல்லைகள் உண்டா? நான்கு சுவர்களுக்குள், வேண்டாம், அந்த ஊர், நகரம், மாநகரம், நாடு என்பனவற்றுக்குள் கட்டுண்டு போனதா வாழ்க்கை?? விண்ணுக்கும் மண்ணுக்கும், மண்ணுக்கும் கடலடி ஆழத்துக்குமென ஆழ அகலங்களுக்குள்ளும் நீள உயரங்களுக்குள்ளும் கட்டுப்படாமல் திமிர்ந்து தாண்டவமாடுவதுதானே வாழ்க்கை?? திருமலை மனிதக்கடல், சென்னைக் குப்பத்து வீதிகள், கோயமுத்தூர் சந்திப்புக் கொந்தளிப்புகள், ஆளற்ற திம்பம் காடுகளென எங்கும் நடையோடிப் போய்க் கொண்டிருக்கிறது வாழ்க்கை. அப்படியான ஓட்டத்தின் ஒரு கணத்தில் நிகழ்ந்து பரிணமித்துக் கரைகிறது வாழ்க்கையின் இத்துளி.   […]

Read More

கோடானு கோடி கரங்கள் உயரட்டும்

கோடானு கோடி கரங்கள் உயரட்டும் ( சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமது ) ஓர் அற்புதமான பயிற்சிக்காலம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. ரமலான் மாதத்தின் மிகப் புனித நாட்கள் ஒவ்வொன்றாக நகர்ந்து ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை அடிவானத்தில் தன் ஒளிக்கீற்றைக் காட்ட தலைப்பட்ட உடன் அன்று பெருநாள் என்ற மகிழ்ச்சி பூரிப்பில் திழைத்து மகிழ்ந்து அந்த மகிழ்வை உற்றார் உறவினரோடும் பகிர்ந்து கொண்டாடுவது உலகெங்கும் உள்ள முஸ்லிம்களின் வாடிக்கை. இல்லாமையால் பசித்து இருப்பது என்பது வேறு […]

Read More

உடம்பொரு ஆயுதம்; ஆயுதமேந்துங்கள் வாழ்க்கைப்போர் புரிவோம்..

1 உடம்பு ஒரு ஆயுதம். உலகத்தின் அத்தனை அற்புதங்களையும் அடைவதற்கான பலத்தைப் பெற்ற மனிதனுக்கு உடம்பொரு கோவில். உள்ளிருக்கும் ஆன்மச் சக்தியை கடைந்துப் பார்க்கக் கைவரப்பெற்ற கலன் உடம்பு. நினைத்ததை நடத்தவும், கிடைத்ததை பத்திரப்படுத்தவும் உடம்பால் மட்டுமே முடிகிறது. நிலைப்புத் தன்மையில் தோற்றாலும் காலத்திற்கும் வாழ்ந்ததன் சுவடுகளை விட்டுச் செல்ல உடம்பொன்றே சாகும்வரை உதவுகிறது. இயற்கையின் ரகசியங்களை ஆய்ந்துப் பார்க்கவும் புதிய கண்டுபிடிப்புக்களுக்கான வழியை தேடவும் தேவையான பாடம் உடம்பிற்குள் உண்டு. நீர் நிலம் காற்று வானம் […]

Read More

பேராசிரியர் கா. அப்துல் கபூர் குறித்து சிராஜுல் மில்லத்

”அருளாளன் அன்புடையோன் அல்லாஹ்வின் கருணையதால் பெருங்கொடையாய் வந்துதித்த பெருமானே நாயகமே:” இப்பாடலைப் பாடிய   பேராசிரியர் கா. அப்துல் கபூர் “சிராஜுல் மில்லத்” அல்ஹாஜ் A.K.A. அப்துஸ்ஸமது M.A.,M.P. அவர்கள் ஆசிரியராக இருந்து வெளியிட்ட “மணிவிளக்கு ஜனவரி 1972 இதழில் வெளிவந்த அட்டைப்பட விளக்கக் கட்டுரை   “அனைத்துலக அருட்கொடையாய் அருளாளன் அனுப்பியதோர் திணைத்துணையும் தீமையிலா தீங்ககற்றும் தீஞ்சுடரை   மண்ணகமும் விண்ணகமும் மகிழ்ந்தேத்தும் பெருநிதியை அண்ணலென அனைத்துலகும் அணைத்தெடுக்கும் ஆரமுதை   ஊனேறி உயிரேறி உள்ளத்தில் […]

Read More

தமிழ் வலைப்பூத்திரட்டிகள் பங்கும் பணியும்

இணையத் தமிழை தமிழ்ச் செய்திகளைப் பரவலாக்கம் செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. செய்திகளைத் தளங்கள் வாயிலாக அறிவித்தல் மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்தல் குழு அஞ்சல் வாயிலாகத் தெரிவித்தல் திரட்டிகள் வாயிலாக அறிவித்தல் என்ற பலவழிகளில் ஒன்று திரட்டிகள் வழியாகச் செய்திகளை அறிவித்தல் ஆகும். வலைப்பக்கங்களை அமைக்க பணத்தேவை அதிகமாக உள்ளது. ஆனால் எளிமையாக, வளமையாக கருத்துக்களை அளிக்க பணச்செலவின்றி வலைப்பூக்கள் தற்போது உதவுகின்றன. வலைப்பூக்கள் அதிக அளவில் பிரபலமாக்குவதற்குத் திரட்டிகள் உதவுகின்றன. வலைப்பூக்கள் என்பன தனிநபரின் கருத்துகளைப் […]

Read More

எல்லோரும் தற்கொலை செய்துகொள்ளுங்கள்..

தற்கொலை செய்துகொள்ளுங்கள். கொலை என்பது கொல்வது எனில், சாக நினைக்கும் அத்தனைப் பேரும் முதலில் தன்னைத் தானே கொன்றுகொள்ளுங்கள். தானெனும் செருக்கு, தனது எனும் ஆசை, தன்னாலெனும் வருத்தம், தனக்கென்னும் சுயநலம், தனக்கான ஏக்கம்  தனக்கான வலி, தன்னாலான தோல்வியெ என்று நினைப்பதன் பாரம் என அந்த தனது எனும் இடத்திலுள்ள அத்தனையயும் கொன்றுவிடுங்கள்; எஞ்சிய உடல்கட்டை மிஞ்சட்டும், அதுபோன்ற உடல் கட்டை நாளை பிறருக்கென வாழ்ந்த தெரசாவாகவோ, அல்லது விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோரை மீட்டு நல்வாழ்வு அளிக்கும் […]

Read More

காரைக்குடியில் நூல் ஆலயம் மற்றும் பழைய பொருட்கள் சேகரிப்பு

காரைக்குடி ஸ்ரீவித்யா ராஜகோபாலன் அவர்கள் இரண்டு தள வீடு கட்டி வீடு முழுவதும் நூல்கள். 40 ஆண்டு சேகரிப்பு. ஏறத்தாழ இருபதினாயிரம் நூல்கள்.அடுக்கிவைத்துள்ளார். செட்டி நாட்டு மரபு பழைய பொருட்கள், மற்ற பழைய பொருட்கள் சேகரிப்பில் ஆர்வம் பணி நிறைவுக்குப் பின் ஏற்பட்டு  Hall, இரண்டு அறைகள் முழுக்க அரிய பொருட்கள் சேகரித்துவைத்துள்ளார்.. தான் அடுத்துள்ள சிறிய வீட்டில் வசித்துவருகிறார். CECRI யில் இணை இயக்குநராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர். வைணவப் பெருந்தகை. சிகை வளர்த்து அம்சமாகத் திகழ்கிறார். […]

Read More

முனைவர் எம்.எம்.மீரான் பிள்ளை

  எம்.ஏ., (தமிழ்) எம்.ஏ., (வரலாறு) எம்.ஏ., (அரசியல்) பி.எச்.டி.,   தலைவர், தமிழ்த்துறை & ஆய்வுமையம், பல்கலைக் கழகக் கல்லூரி அரசு உயர்கல்வி சிறப்பு மையம், திருவனந்தபுரம்.   ஆயிரத்தி தொள்ளாயிரத்தி ஐம்பத்திரண்டாம் ஆண்டு சனவரி பதினெட்டாம் நாள் பிறந்தார் மீரான் பிள்ளை. கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் ஜவுளிக்கடை வீட்டில் மீரா உம்மாள் முகம்மது பீவி தாய். திருவனந்தபுரம் மாவட்டம் பூஆறு புத்தன் வீட்டில் அப்துல்லா மீரான் பிள்ளை முகம்மது நூகு தந்தை. கல்வித் தகுதிகள் […]

Read More