கொசு

கொசு மெளலவி அல்ஹாஜ். B.M. ஜியாவுத்தீன் பாகவி   கொசு   மனிதன் அல்லாத ஏனைய உயிரினங்களின் வரிசையில் “பசு” வுக்கு அடுத்து குர்ஆனில் கூறப்பட்டுள்ள இரண்டாவது உயிரினம் கொசுவாகும். மிகமிக சின்னஞ்சிறிய பொருளுக்கு இதனை உதாரணம் காட்டுவதுண்டு. ‘கொசுவுக்கு பயந்து கொண்டு ஊரை விட்டு ஓடுவதா?’ என்று வசனம் பேசுபவர்களைப் பார்த்திருக்கலாம். இவை எல்லாம் கொசுவை அற்பமானதாகக் கருதுவதால் வரும் வார்த்தைகளாகும். ஒரு பொருள் பார்வைக்கு சிறியதாக இருக்கின்ற காரணத்தால் அதை தாழ்ந்ததாக – மட்டமானதாக […]

Read More

ஒலி வடிவில் தமிழ் நூல்கள்

Pls check tamilaudiobook and provide feedback – successfully released Amarar Kalki’s works to benefit avid readers and kalki’s fans  + for those who cannot read or write tamil but can understand and interested  in hisotrical tamil novel http://www.tamilaudiobooks.com mikka nandri vaazhthukkal Sri http://www.tamilaudiobooks.com

Read More

நீல் ஆம்ஸ்ட்ராங் நினைவுகள்….

வல்லரசாக விளங்கிய ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் நடைபெற்ற அறிவியல் போட்டியில் நிலவுக்கு மனிதனை அனுப்பி அங்கே நடக்கவைத்து வெற்றிப் பெருமிதம் கொண்டது அமெரிக்கா என்பது அனைவரும் அறிந்ததுதான். அதை ஒரு நாட்டின் பெருமையாகக் கருதாமல் மனிதகுலத்தின் மகத்தான வெற்றி என்று கருதும் மாண்பார்ந்த மனப்பாங்கு பெற்றவர் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பதை அவர் அப்போது கூறிய “That’s one small step for a man, one giant leap for mankind,” என்ற கருத்திலிருந்து அறியலாம். நிலவிலிருந்து நிலவுலகு திரும்பிய […]

Read More

நல்லது நடந்தால் சரி…

அரசுத் துறைகளில் குறித்தகாலத்தில் பொருள் மற்றும் சேவை பெறும் உரிமை மற்றும் குறைதீர் சட்ட முன்வடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதைச் சுருக்கமாக “சேவை பெறும் உரிமைச் சட்ட முன்வரைவு’ எனலாம். இந்தச் சட்ட முன்வரைவின் உள்ளார்ந்த நோக்கம் ஒருவகையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு இணையானது. மத்திய, மாநில அரசுத் துறைகள், அரசு நிதியுதவி பெறும் அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் ஆகியன அனைத்தும் இந்தச் சட்ட வரம்புக்குள் வருகின்றன. சேவைக் குறைபாடு உண்மை என்று […]

Read More

பறைவைகளே !. பதில் சொல்லுங்கள் !

வலைத்தளத்தில் உலாவரும் பதிவுகளைப் பார்க்கும்போதும், அதற்குத் தூபம் போடும்வகையில் ஊடகங்களின் ஊதுகுழல் பொறுப்பற்று வேலை செய்வதைப் பார்க்கும்போதும், நமதுநாட்டின் அப்பாவி மக்களின் மனதில் முஸ்லிம் சமுதாயத்தின் மீதான வெறுப்பினை வளர்க்கும்ஒரு சதிவேலை அறங்கேறிக் கூத்தாடுவதாகத்தான் தோன்றுகிறது. தெளிவான சிந்தனையுள்ள தேசபக்தர்களின் ஆதரவில்லாவிட்டால், பல கேடுகள்விளைந்திருக்கும், நல்லவர்களை நாடெங்கும் விதைத்து வைத்த வல்ல இறைவனைஇத்தருணத்தில் நான் புகழ்கிறேன். நன்றி கூறுகிறேன். புகழுக்குறிய இறைவன் காட்டிய நேரான பாதையை உள்ளத்தாலும் செயலாலும் கொள்ளாதுவெளித்தோற்றத்தால் மட்டும் கொண்டு வெறிபிடித்தலையும் கயவர்களையும் கண்டிக்கிறேன்.தீமை ஒழிய வேண்டும், அது நன்மையைக் கொண்டு மட்டுமே வெல்லப்பட வேண்டும்.அதுதான் நிரந்தர வெற்றி. இன்று ஊடகங்கள் வெடிக்கும் குண்டுகளால் துளைக்கப்பட்டு மனத்தளவில்குற்றுயிராய்க்கிடக்கும் உணர்வில் பலர். ஊடகங்களோ அடையாளம் காட்டுவதுமுஸ்லிம்களை.  இதுதான் காரணம், ஆக யாருக்குமே வெறுப்பு வருவது இயல்பு.  இதுவெடித்து வைக்கும் மீடியாக்களுக்கும் தெரிந்த உண்மைதான் (சில சக்திகளின் நோக்கமும்அதுதானாயிருக்கலாம்). நமது முறையீடெல்லாமே படைத்தவனோடுதானே? ஆகவே அழுதே கேட்போம்! “நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா !” (கண்ணதாசன்) இன்று உள்ளவர்க்கெதிராய் சாட்சிகள் ரெண்டு ஒன்று (மிரட்டப்பட்ட)  உங்கள் சாட்சி ஒன்று (மீடியாவின்) வஞ்சகக் காட்சியம்மா !! ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லார் அவனையே தொழுது கேளுங்கள் ! அவனன்றி நமக்கு வேறு ஆருதல் இல்லை! பறைவைகளே !… பதில் சொல்லுங்கள் மனிதர்கள் பரப்பும் செய்தி உண்மையில்லையே மனதினில் வெறுப்பு தவிர வேறு இல்லையே பறவைகளே! ..  பதில் சொல்லுங்கள்! படைத்தவன் நினைப்பு என்ன பார்த்துச் சொல்லுங்கள் ! அடுத்தொரு உலகம் என்று உரத்துச் சொல்லுங்கள்!

Read More

தொடரும் தற்கொலைகள்..தீர்வு என்ன? – ஹூசைன் பாஷா, துபாய்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்த இரண்டு தற்கொலைகள் நம் கவனத்தை ஈர்த்து நம்மை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.முதலாவதாக, நெல்லையைச் சேர்ந்த ஆஷிக் என்ற பல் மருத்துவர் மன உலைச்சல் காரணமாக தன்னைத் தானேகழுத்தை அறுத்து கொடூரமான முறையில் தற்கொலை செய்துக் கொண்டார்.  இரண்டாவது, நாமக்கல்லைச் சேர்ந்தபஷீர் அஹமது என்ற பெரியவர் தன்னுடைய குடும்பத்தினர் தன்னை சரியாக கவனித்துக் கொள்ளாததால்மின்சாரத்தை உடலில் பாய்ச்சிக் கொண்டு இறந்துள்ளார்.   இந்த இரண்டு சம்பவங்களைத் தொடர்ந்து, அமீரகத்தில் குடும்பத்துடன் வசித்துவரும் ஒரு குடும்ப பெண்தாயகத்திலிருக்கும் தன் சகோதரர் மூலமாக தொடர்புகொண்டு உடனடியாக என்னுடைய கொடுமைக்காரகணவனிடமிருந்து மீட்டு என்னையும், குழந்தைகளையும் ஊருக்கு அனுப்பிவையுங்கள், இல்லையென்றால்தற்கொலையைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்று தெரிவித்துள்ளதைப் பார்த்தால் மக்கள் மத்தியில்பிரச்சனைக்கு தீர்வு தற்கொலைதான் என்று பரவலாக பதிந்துள்ளதை காண முடிகிறது. சம்பந்தப்பட்ட அந்தபெண்ணை சட்ட ரீதியாக மீட்டு தாயகத்திற்கு அனுப்புதற்கான ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருக்கிறோம்.   தற்கொலைகளையும், அவற்றிற்கான உணர்வுகள் மேலோங்காமல் தடுப்பதற்கான வழி முறைகள்என்னவென்பதையும் ஆராய வேண்டிய கடமை நமக்கு உள்ளது. நிரந்தர நரகத்தில் தள்ளிவிடும் அளவிற்குகொடூரமான இந்த செயலைக் குறித்து, ”உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளாதீர்கள்’ எனதிருக்குர்ஆன் மிக ஆழமாக எடுத்துரைக்கின்றது. ஆனால் அதைப் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இல்லாதநிலைதான் வருத்தமளிக்கக் கூடியதாக இருக்கிறது.   உடலில் ஏற்படும் நோய்களுக்கு உடனடியாக தீர்வு வேண்டி மருத்துவரை அணுகக் கூடிய நாம், மன ரீதியானபிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. நம்முடைய உறவினர்கள், நண்பர்கள் மன அழுத்தத்தில்இருந்தால் அதை கண்டறிந்து அதற்கான தீர்வை எடுப்பது நம் கடமை.35 கோடிக்கும் அதிகமானோர்  உலக அளவில்மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அக்டோபர் 10-ம் தேதி நடந்த உலக மன நலஆரோக்கிய தினத்தில் தெரிவித்துள்ளது. தொடக்க நிலையில் உள்ள பிரச்சனைகளுக்கு மன நல ஆலோசகரிடம் சென்றால் கவுன்சிலிங் மூலம் பிரச்சனையைதீர்க்கலாம். ஆனால் இப்படி ஒரு விஷயம் இருப்பதே நிறைய பேருக்கு தெரியாது என்பது மறுக்கமுடியாத உண்மை.சற்றே தீவிரமாகியுள்ள மன பிரச்சனைகளுக்கு மருந்து, மாத்திரைகளுடன் கூடிய ஆலோசனை தேவைப்படலாம்.நமது சமூகத்தில் இத்துறையில் நிபுணர்களை அதிகமாக உருவாக்க வேண்டும்.   குடும்பத்தினரால் கைவிடப் பட்டவர்களுக்கு மன ரீதியான ஆறுதலுடன் சேர்த்து பொருளாதார ரீதியானஒத்துழைப்பை அளித்து அவர்கள் நம்பிக்கையுடன் உலகில் வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதிகமான தற்கொலைகள் குடும்பப் பிரச்சனைகள் காரணமாகத்தான் ஏற்படுகின்றன. கணவன்,மனைவியிடையே பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாமை, ஒருவொரை மற்றொருவர் புரிந்துக்கொள்ளாமை போன்றவையே முதற்காரணங்களாக இருக்கின்றன.   இதுபோன்ற தற்கொலைகளைத் தடுக்க சமூக இயக்கங்களும், தொண்டு நிறுவனங்களும் மக்கள் மத்தியில்விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பொது நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்துவற்கு உடனடியாகஅனைத்து பகுதிகளிலும் ஏற்பாடு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

Read More

நீங்கள் தேடும் புதையல் உங்களுக்குள்ளேயே உள்ளது !

  ( ஹாஜி. முசாபர் அப்துல் ரஹ்மான், நிறுவனர் டைம் டிரஸ்ட், இளையான்குடி )   அது ஒரு பசுமை நிறைந்த பள்ளத்தாக்கு, ஓங்கி உயர்ந்த மரங்கள், அவற்றின் கீழ் கூட்டங் கூட்டமாக ஆட்டு மந்தைகள், கட்டுப்பாடற்று மேயும் சுகம், அதிலே லயித்து மேய்ந்து கொண்டிருந்த ஆட்டு மந்தையினூடே வழி தவறி வந்த பச்சிளம் சிங்கக்குட்டி ஒன்று சேர்ந்து கொண்டது. தன்னையும் ஒரு ஆடென்று நினைத்து ஆடுகளோடு ஆடாக அதுவும் சேர்ந்து வளர்ந்து கொண்டிருந்தது. அது ஒரு […]

Read More

கல்வியின் நம் பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் வழிமுறைகளும்

கல்வியின் நம் பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் வழிமுறைகளும்- முதல்பரிசு பெற்ற கட்டுரை (ஆபிதீன்)   கல்விக்கான தேடலில் முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா?  என்ற தலைப்பில் இஸ்லாமியப் பெண்மணியும் -டீக்கடை பேஸ்புக் குழுமமும்நடத்திய கட்டுரைப்போட்டியில் முதல் இடம் பெற்ற சகோதரர் ஆபிதீன் அவர்களின் கட்டுரை இது. (நபியே ! யாவற்றையும்)  படைத்த உமது இறைவனின் திருநாமத்தால் நீர் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து  படைத்தான். ஓதுவீராக! உமது  இறைவன் மாபெரும் கொடையாளன் அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுக்கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாததையெல்லாம் […]

Read More

இளையான்குடிக்கு முஸ்லிம்களின் வருகை

தென்றல் வரும் திசை, வந்த திசை எதுவானாலும் மனத்துக்கு இதம் தானே ! இளையான்குடிக்கு முஸ்லிம்களின் வருகை ஒரு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் என்று ஆய்வில் தெரிகிறது. எங்கிருந்தோ வந்தவர்கள் தான் ! இருந்தாலும் வந்த மண்ணை வளமாக்கி, வரலாற்றில் புகழ் சேர்த்திருக்கிறார்கள். தூரவானம் தானே பூமி புன்னகைக்க மழை தருகிறது? அது போல இளையான்குடியைச் செழிக்க வைக்க வந்தவர்கள் என்று கூட நாம் இவர்களைச் சொல்லலாம். இவர்களின் பெருமைகள், அருமைகள் எல்லாம் வரும் அத்தியாயங்களில் மின்னிடக் […]

Read More

என்றும் வாழும் வீர மருது சகோதரர்கள்

  (தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்) வீரமும், நெஞ்சில் ஈரமும் விளைந்த மண்ணில் மானம் காத்த மாவீரர்கள், சிவகங்கைச் சீமையை ஆண்ட மருதிருவர்கள் ! மருதிருவர்கள் ஏற்றி வைத்த விடுதலை ஒளி சுதந்திர இந்தியாவின் வெளிச்சப் பாதைக்கு வழிகாட்டியது ! பேச இயலாதவனுக்கு (ஊமைத்துரை) அடைக்கலம் தந்ததற்காகவும், அடிமைகளாய்ப் பேச மறந்த மக்களின் உரிமைகளுக்காகவும் தங்கள் மூச்சுக்காற்றை துறந்தவர்கள். “படுத்திருக்கும் வினாக்குறிபோல் இருக்கும் பாண்டியர் தம் மீசை” என்று மருது சகோதரர்களின் தோற்றப் பொலிவை உவமைக் கவிஞர் […]

Read More