சிரிப்பு ஒரு மாமருந்து
05- 05- 2013 “ உலக “ சிரிப்பு தினமாகும்.” மனமகிழ்ச்சியை தொலைத்து விட்டு வெறுமையில் வாடும் உள்ளங்கள் உலகில் ஏராளம், ஏராளம். சிரிப்பு தினத்தில் சிரிப்பை பற்றி சில சிறப்பான செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சிரிப்பு ஒரு மாமருந்து சிரியுங்கள், உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும் அழுங்கள் நீங்கள் ஒருவர்தான் தனித்து அழுதுகொண்டிருப்பீர்கள்.. இன்று வாழ்வில் நாம் திரும்பிப் பார்க்கும் திசையில் எல்லாம் தெரிபவை இரண்டு. அவைகளில் ஒன்று அதிருப்தி. மற்றொன்று பேராசை. இந்த இரண்டும் தனித்தனியாக்கூட இல்லை.உள்ளங்கையும் புறங்கையும் போல ஒன்றின் இருபக்கங்களாக இருக்கின்றன. யாரிடம் பேராசை இருக்கிறதோ அவரின் மறுபுறம் அதிருப்தியும் இருக்கிறது. கிடைத்தற்குத் திருப்திப்பட்டுக்கிடைக்க வேண்டியதற்காக உழைக்கும் ஆரோக்கியமான மனநிலை தென்படவில்லை. பணம் படத்தில் N.S. கிருஷ்ணன் பாடிய சிரிப்பு பாடலைப் பலரும் கேட்டு இருக்கலாம். சிரிப்பில் பல வகையுண்டு. அவற்றில் சில:– வாய்விட்டு சிரிப்பது – நமட்டு சிப்பு – வாயை மூடிக்கொண்டு சிரிப்பது – ஓகோ என்று சிரிப்புது- அவுட்டு சிரிப்பு – வெடிச்சிரிப்பு – ‘களுக்’கென்று சிரிப்பு – பயங்கரமாய் சிரிப்புது – புன்சிரிப்பு– வயிறு வலிக்கச் சிரிப்பு – விழுந்து,விழுந்து சிரிப்பது – குபீரென்று சிரிப்பு – மனதுக்குள்ளே சிரிப்பு – உதட்டளவில் சிரிப்பு , வெறிச்சிரிப்பு – கலகல வென்று சிரிப்பு – ‘பக்’கென்று சிரிப்பு- குலுங்கச் குலுங்க சிரிப்பு- சங்கீத சிரிப்பு, வஞ்சகச் சிரிப்பு, கடைசியாக வருவதுதான் *கபட சிரிப்பு. எதையும் கேலி செய்வதற்கு விஷயத் தெளிவு வேண்டும். அதை நகைச்சுவையோடு கேலி செய்வதற்கு புத்திசாலிதனம் வேண்டும். அதுவும் பிறர் மனம் புண்படாமல் கேலி செய்ய, கேலிசெய்வதற்குப் பக்குவமான அறிவு வேண்டும். அத்துடன் சிந்தனையை தூண்டிவிட தெளிந்த மனம் வேண்டும். சிரிப்பு ஆக்கபூர்வமானது. சிரியுங்கள். மனம் சுத்தமாகிறது. ஆரோக்கியமடைகிறது. மனம் ஆரோக்கியமடைந்தால் அதைத் தொடர்ந்து உடம்பும் ஆரோக்கியம் அடைகிறது .அப்படி ஒரு மருந்து இருப்பதை நாம் மறந்து விடுகிறோம். அவ்வளவுதான். சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள் . கடந்த 30 ஆண்டுகளாக நமது உள்ளத்திற்கும் , நோய்களுக்கும் இடையே இயல்பானதொடர்பை ஆராய்ந்து வருகிறார்கள் உடற்கூறு வல்லுநர்கள். இந்த ஆராய்ச்சியின் பலனாக ஒரு உண்மையைக் கண்டறிந்தனர். சிரிப்பு ஒரு மாமருந்து. நமது எண்ணங்களுக்கும் மன நிலைக்கும் ஏற்றபடி உடலினுள் இயங்கும் செல்களின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, அல்லது குறைகிறது என்பதே அது. 1993-ம்ஆண்டின் இவ்வாராய்ச்சியில் ஒரு பயனுள்ள உண்மை கண்டறியப்பட்டது. நமது நரம்புகள் ஒரு இரசாயனத்தை வெளியிட்டுக் கொண்டுடிருக்கிறது. இதற்கு “CGRP” என்று பெயர். இதுதான்நரம்புகளுக்கு அடியிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்களின் இயல்பை ஊக்குவிப்பதும், மட்டுப்படுத்துவதும். நமது மன அலைக்கு ஏற்ப ‘CGRP’ அதிகமாக உற்பத்தியாக்கி உடலில், நோய் எதிர்ப்புசக்தியும் அதிகமாக்கும். நாம் மனம் விட்டுச் […]
Read More