நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்

நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ( அரும்பாவூர் மு. சாஹிரா பானு )   இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெருமிதத்துடன் வாழ்ந்த புலவர் பெருமக்களுள் நாட்டு மக்கள் அனைவராலும் ‘நாட்டாரையா’ என அன்புடனும், மதிப்புடனும் அழைக்கப்பெற்றவர் பண்டித நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஆவார். தமிழன்பர்களின் நெஞ்சங்களில் நின்ற சொல்லராய், நீடு தோன்றினியராய் வாழ்ந்து வரும் நாட்டார், தஞ்சை மாவட்டத்தில் நடுக்காவிரி என்னும் சிற்றூரில் 1884 ஏப்ரல் 12-ல் முத்துசாமி நாட்டார் என்பவருக்கு மகனாய்ப் பிறந்தார். தம்முடைய […]

Read More

சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை

  ( அரும்பாவூர் மு. சாஹிரா பானு )   மிகச்சிறந்த பேராசிரியராகவும் நூலாசிரியராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்தவர் ரா.பி. சேதுப்பிள்ளை, திருநெல்வேலிக்கு அருகில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்த இராசவல்லிபுரம் என்ற ஊரில் 1896 மார்ச் 2 அன்று பிறந்தார். பிறவிப்பெருமாள் – சொர்ணம்மாள் தம்பதியினருக்குப் பதினோராவது பிள்ளையாகப் பிறந்து வளர்ந்தார். அக்கால வழக்கப்படி சேதுப்பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் பின்னர் பாளையங்கோட்டை சேவியர் பள்ளியிலும் பயின்றார். நெல்லை இந்துக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். 1915 ம் ஆண்டு […]

Read More

பல்துறை அறிஞர் விபுலானந்த அடிகள்

பல்துறை அறிஞர் விபுலானந்த அடிகள் ( அரும்பாவூர் மு. சாஹிரா பானு )   விபுலானந்த அடிகள் தொடக்கக் கல்வியை காரைத் தீவில் மெதடிஸ்த சங்கப் பாடசாலையிலும், பின்பு கல்முனை நகரிலும், மட்டக்களப்பு பகுதியில் உள்ள ஆங்கிலப் பாடசாலையிலும் பயின்றார். 1906 ல் கேம்பிரிட்ஜ் ஜூனியர் தேர்விலும் 1908 ல் கேம்பிரிட்ஜ் சீனியர் தேர்விலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1909 ல் மைக்கேல் கல்லூரியில் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டுப் பின்னர் கல்முனை கத்தோலிக்கச் சங்கப் பாடசாலைக்கு […]

Read More

மாவீரர் குஞ்சாலி மரைக்காயர்

சுதந்திர டைரியில் ஒரு பக்கம் (மாவீரர் குஞ்சாலி மரைக்காயர் பற்றிய நினைவுச் சொல்லோவியம்) ‘தமிம்மாமணி’ கவிஞர். மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி   வரலாறு, எல்லோரையும் நினைவு கொள்ளுவதில்லை. தன் நேசிப்புக்குரிய சிலரையே தன் ஞாபக டைரியில் குறித்துக் கொண்டு பூரிக்கிறது. அந்த வகையில் வரலாற்றின் பக்கங்களுக்கு வாசம் சேர்த்தவர் ஒருவர். அவர் தக்வாவில் ஒரு தங்கம். தைரியத்தில் ஒரு சிங்கம். அவருக்கு நீண்ட காலமாகவே ஒரு தாகமிருந்தது. நமது நாட்டை மொய்த்திருந்த அன்னிய வெள்ளையிருட்டை அடித்து நொறுக்கி […]

Read More

அழகு நிறைந்த அமீரகப் பயணம்

  ( நல்லாசிரியர் எஸ். சையத் அப்துல் சுபஹான் MSc M.Phil, B.Ed முதல்வர், அல் அமீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம் )   எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெரும் கிருபையால் அமீரகப் பயணம் 21.04.2011 முதல் 01.05.2011 முடிய மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. தீன் இசைப்பாடகர் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களின் பெரும் முயற்சியால் இந்தப் பயணம் சிறந்து விளங்கியது. 21.04.2011 காலை 9 மணிக்கு அருமை நண்பர் தாஜுதீன் பெற்றெடுத்த அருமைச் […]

Read More

சங்கத் தமிழ் அனைத்தும் தா !

  1.எங்கும் தமிழ் தங்கத்தமிழ் சங்கைத் தமிழைச் சங்கத் தமிழால் அளக்கவா ? 2. பொங்கும் புகழ் தங்கும் எழில் மங்காதிலங்கும் மங்கைத் தமிழை விளக்கவா ? 3. ஆண்டவன் தன் ஆளுமையை அறிவிக்க வேண்டி 4. மானுடத்தைப் புவியிதனில் படைத்துவிட்டு, மொழிவதற்கு 5. நாமணக்கும் தேமதுரத் தீந்தமிழைத் தோற்றுவித்து 6. மாந்திரினம் மாந்துதற்குப் பொழிந்து உவந்தான் ! 7. இறைமூலமாய் நிறைமூலமாக வந்த தமிழமிழ்தை முதல் மனிதர் மொழிந்து உவந்தார் ! 8. கல் தோன்றி […]

Read More

சரித்திரம் பேசுகிறது : கலீல் கிப்ரான்

  ( அரும்பாவூர் மு. சாஹிரா பானு )   ’நேற்று என்பது இன்றைய நினைவு நாளை என்பது இன்றைய கனவு’ என்று ஒப்பிலா தத்துவத்தை உதிர்த்தவர் கலீல் கிப்ரான். 20ம் நூற்றாண்டின் ‘தாந்தே’ என்று போற்றிப் புகழப்படும் கலீல் கிப்ரான் லெபனான் நாட்டில் உள்ள பெஸ்ரி என்ற கிராமத்தில் 1883ல் ஜனவரி 6ம் தேதி பிறந்தார். வீட்டிலேயே ஆங்கிலம், அரபி, பிரெஞ்சு மொழிகளைக் கற்றார். உள்மன அனுபவங்களை தன் இளமைக்கால வாழ்க்கையிலேயே தெரிந்து உணர்ந்து வளர்ந்தார் […]

Read More

பெண் கல்வியின் அவசியம்

  ( கவிஞர் மு ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி ) முன்னுரை கல்வி அவசியம் தான். அதிலும் பெண் கல்வி என்பது மிக மிக அவசியமே ! இதைச் சொல்வதற்கு அழகாய்ச் சொல்வதற்கு அழுத்தமாய்ச் சொல்வதற்கு இதோ … என் எழுத்துக்கள் கட்டுரையாய்… கை கோர்த்துள்ளன. கல்வி ஏன் அவசியம் ஒருவரிடம் செல்வம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் கல்லாமை இருக்கவே கூடாது. முகத்திற்கு கண்கள் முகவரியாகும் இதுபோலத்தான் மனிதர்களுக்கு முகவரி கல்வியாகும். இந்தக் கருத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, […]

Read More

வாழ்வளித்த வள்ளல்

  பேராசிரியர். கா. அப்துல் கபூர் எம்.ஏ.,   “அராபிய நாட்டில் தோன்றி ஆண்டவன் ஒருவ னென்னும் மரபினை வாழச் செய்த முஹம்மது நபியே போற்றி !”   என்பதாக அருமைத் தமிழ் தென்றல் அகமுவந்து பாராட்டிய அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனியில் தோன்றிய நன்னாள் வள்ளல் பெருமானாரவர்கள் பிறந்த நாள் தன்னிகரில்லாத் தனிப்பெருஞ் சிறப்புகளை கொண்டது. மக்களுக்காக மக்கள் எடுக்கும் விழாக்களிலே மாண்பு மிக்கதாயமைந்தது; பாலைகளிலும், சோலைகளிலும், பனிபடர்ந்த நாடுகளிலும், காடுகளிலும், தீவுகளிலும் […]

Read More

தத்துவ தேரோட்டம்

  ( ஏம்பல் தஜம்முல் முஹம்மது )   ‘ஞானத்தின் மீதான காதல்’ என்று பொருள்படும் Phislosophys எனும் கிரேக்கச் சொல்லில் இருந்து லத்தீன் பழங்கால ஃபிரெஞ்சு, இடைக்கால ஆங்கிலம் ஆகிய மொழிகளின் வழியே சென்று சிறு சிறு மாற்றங்கள் பெற்று, இன்று தத்துவத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாக Phislosophys எனும் சொல் விளங்கி வருகிறது. அறிவு ஜீவிகள் தங்களுடைய சிந்தனைத் திறம், செயல் திறம், முதலிய கருவிகளைக் கொண்டு இடைவிடாது முயற்சி செய்து எய்தப் பெறுவது […]

Read More