இன்னுமா கைக்கூலி?
இன்னுமா கைக்கூலி? ****************************************************************************************************************** அல்லாஹ் ஒருவனென அவன்தூதர் முஹம்மதென சொல்லும் உறுதியினர்@ சுரண்ட நினைப்பதுவோ? 1 ஒப்புக்கோ மார்க்கம்? ஊருக்கோ உபதேசம்? அப்பழுக்கை நீக்காமல் அளப்பளக்கும் பேச்செதற்கு? 2 சமுதாய நடுநிலையும் சன்மார்க்க நெறிமுறையும் அமுதாகும்; அதற்குள் அழிக்கும் விஷக்கலப்பா? 3 “மார்க்கத்தில் பாதி”$யென மதிக்கும் திருமணத்தில் பேர்த்துப் பணம்பறித்தல் பெருங்கயமை ஆகாதோ? 4 நபிவழியாம் திருமணத்தை நடத்துகையில் அதற்குரிய அபிவிருத்தி%,கைக்கூலி யாலழுக்காய் ஆவதுவோ? 5 வேசிக்கும் பணம்கொடுப்பார்; வீட்டு […]
Read More