துபையில் ஹ‌பிப் திவான் மாம‌னாருக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி

  துபை : துபையில் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் ஹபிப் திவான் மாம‌னார் மீரா முஹைதீன் ( அர‌க்காசு ) அவ‌ர்க‌ளுக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி 19.03.2013 செவ்வாய்க்கிழ‌மை மாலை க‌ராச்சி த‌ர்பார் உண‌வ‌க‌த்தில் ந‌டைபெற்ற‌து. த‌லைவ‌ர் ஹெச். இப்னு சிக்க‌ந்தர் த‌லைமை வ‌கித்தார். துணைத்த‌லைவ‌ர்க‌ள் ஜாஹிர் உசேன், அஹ்ம‌து இம்தாதுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வ‌கித்த‌ன‌ர். பொதுச்செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் மேற்கொண்டு வ‌ரும் க‌ல்வி ம‌ற்றும் ச‌முதாய‌ப் […]

Read More

இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் மாநில‌ செய‌லாள‌ர் க‌முதி ப‌ஷீர் வ‌ஃபாத்து

இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக்கின் மாநில‌ ம‌ஹ‌ல்லா ஜ‌மாஅத் ஒருங்கிணைப்பு செய‌லாள‌ர் க‌முதி ப‌ஷீர் இன்று 19.03.2013 செவ்வாய்க்கிழ‌மை அதிகாலை 3.30 மணிக்கு வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன். க‌முதி ப‌ஷீர் அவ‌ர்க‌ள் முஸ்லிம் லீக்கின் ப‌ணிக‌ளில் த‌ன்னை முழுமையாக‌ இணைத்துக் கொண்டு ம‌ஹ‌ல்லா ஜ‌மாஅத்க‌ளை மாநில‌மெங்கும் ஒருங்கிணைப்ப‌தில் முக்கிய‌ப் ப‌ங்காற்றிய‌வ‌ர். மேலும் முஸ்லிம் லீக் ந‌ட‌த்திய‌ ம‌ஹ‌ல்லா ஜ‌மாஅத் மாநாடு மூல‌ம் உல‌மாக்காள், ப‌ணீயாள‌ர்க‌ள் நல‌ வாரிய‌ம் உள்ளிட்ட‌வை ஏற்ப‌டுத்த‌ப்ப‌டுவ‌த‌ற்கு உழைத்த‌வ‌ர். அன்னார‌து […]

Read More

புலவர் ப.மு. அன்வர் வஃபாத்து

மலேசியாவில் புகழ்பெற்ற புலவர் ப.மு.அன்வர் அவர்கள் இன்று காலை அல்லாஹ்வின் நாட்டப்படி அவனிடத்தில் மீண்டுவிட்டார்கள். இன்ஷாஅல்லாஹ், நாளை (19.03.2013, செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு ஜனாஸா தொழுகை திருப்பனந்தாளில் நடைபெறயிருக்கிறது. பெரும்புலவரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுங்கள். வல்ல அல்லாஹ் அவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸை வழங்குவானாக!   புலவர் ப.மு அன்வர் மறைவு! ———————————————————- மலேசியப் பெருங்கவிஞர்- இஸ்லாமியத்தமிழ் இலக்கிய முன்னோடிக் கவிஞர்- மரபுக் கவிதைத்துறையில் ஆழமான அழுத்தமான பற்றுமிகு கவிஞர்- கொண்ட கொள்கையில் எதற்கும் எவருக்கும் மயங்கிடாக் […]

Read More

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ராமநாதபுரம் ஆட்சியர் யோசனை

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை தொடர்பு கொண்டு பலனடையுமாறு ஆட்சியர் க.நந்தகுமார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது. வெளிநாடு வாழ் தமிழர்கள் தொடர்புடைய அலுவல்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களால் கவனிக்கப்படுகிறது. எனவே தேவையுள்ளவர்கள் அவரை அணுகி குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாநில அளவில் தொடர்பு கொள்ள […]

Read More

குழந்தைகள் சித்ரவதையா?: இலவச தொலைபேசி 1098ல் தொடர்பு கொள்ளுங்கள்-எஸ்.பி.

குழந்தைகளை சித்ரவதை செய்வது தெரிய வந்தால் உடனே இலவச தொலைபேசி எண் 1098-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் கூறினார். ராமநாதபுரம் வளர்ச்சித் துறை மஹாலில் சைல்டு லைன் அமைப்பு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவை குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்து மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் பேசியதாவது: காவல் துறைக்கு இலவச தொலைபேசி எண் 100 உள்ளதுபோல குழந்தைகளை  யாராவது சித்ரவதை செய்தால் இலவச தொலைபேசியில் தெரிவிக்க […]

Read More

சென்னையில் ஹ‌பிப் திவான் ந‌ன்னி வ‌ஃபாத்து

சென்னையில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தைச் சேர்ந்த முஹ‌ம்ம‌து ம‌ற்றும் ஹ‌பிப் திவான் ஆகியோரின் ந‌ன்னி எம். ர‌ஹ்மான் பீவி ( வ‌ய‌து 80 ) இன்று 26.02.2013 செவ்வாய்க்கிழ‌மை அதிகாலை 2 ம‌ணிக்கு வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் இவ‌ர் புதுப்பேட்டை ம‌ர்ஹூம் க‌னி ஹாஜியாரின் ம‌னைவியாவார். அன்னார‌து ஜ‌னாஸா இன்று மாலை அஸ‌ர் தொழுகைக்குப் பின்ன‌ர் ராய‌ப்பேட்டை மைய‌வாடியில் ந‌ல்ல‌ட‌க்க‌ம் செய்ய‌ப்ப‌டும். அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். த‌க‌வ‌ல் உத‌வி […]

Read More

முதுகுளத்தூர் வட்டாட்சியராக மோகன்

ராமநாதபுரத்தில் வட்டாட்சியர்கள் 5 பேர் பணியிடங்களை மாற்றி மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார். ராமநாதபுரம் வட்டாட்சியராகப் பணியாற்றிய அன்புநாதன் ஆட்சியர் அலுவலக மேலாளராகப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகப் பணியாற்றிய மோகன் முதுகுளத்தூர் வட்டாட்சியராகவும், முதுகுளத்தூர் வட்டாட்சியராக இருந்த செழியன் ஆட்சியர் அலுவலக சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியராகவும் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆட்சியர் அலுவலக மேலாளராகப் பணியாற்றி வந்த கதிரேசன் ராமநாதபுரம் வட்டாட்சியராகவும், ஆட்சியர் அலுவலகத்தில் சமூகப் பாதுகாப்புத் […]

Read More

தேரிருவேலி அலி பாதுஷா த‌க‌ப்ப‌னார் வ‌ஃபாத்து

ஷார்ஜா முனிசிபாலிட்டியில் ப‌ணிபுரிந்து வ‌ரும் தேரிருவேலி மௌல‌வி அலி பாதுஷா ம‌ன்ப‌யீ அவ‌ர்க‌ளின் த‌க‌ப்ப‌னார் ஆசிரிய‌ர் ஜ‌லால் இன்று திங்க‌ட்கிழ‌மை 29.10.2012 மாலை இந்திய‌ நேர‌ப்ப‌டி 4.30 ம‌ணிக்கு தேரிருவேலியில் வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். அலி பாதுஷா தொட‌ர்பு எண் : 96 55 96 89 90 ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம் த‌க‌வ‌ல் உத‌வி : அஹ‌ம‌து […]

Read More