”தியாகம் என் கலை!”

  நாம் முஸ்லிம்கள் என்று நமது முகவரியைக் காட்டிய இப்றாஹீம் நபியின் தூய மார்க்கத்தின் துலங்கும் பேரொளி தியாகத் திரு நாள்!   அவர் தொடங்கி வைத்த “முதலானவை” பல. அவற்றுள் முக்கியமானது, தியாகம்!   அவர் கண்ட கனவு, வஹீயாய் அமைந்தது; செய்த செயல் வரலாறானது; அதாவது- வாழும் வரலாறாக- உலக முடிவு நாள்வரை நீளும் வரலாறாக! அதிலே நமக்குள்ள பங்கை நாமறிந்தோமா?   ஆன்மீக உலகம், திரும்பத் திரும்ப நினைவு கூர்ந்து நெகிழும் அந்தத் […]

Read More

ஹஜ்ஜு என்னும் அருள்மாதம் !

                   அதிரை அருட்கவி அல்ஹாஜ்                மு. முஹம்மது தாஹா மதனீ எம்.ஏ.பி.எட்.                                               ஆதி இறைவன் இல்லம் ஒன்றே                                                  அழகாய் ஹஜ்ஜு செய்திடவே                                                வேதம் தன்னில் “கடமை” என்றே                                                               விளக்கம், சொன்னான் இறையோனே !                                        ஓதும் வேதம் வழியில் சென்றால்                                       உண்டாம் சொர்க்கப் பதியன்றோ !                                           கோது போக்கி ஏதம் நீக்கக்                                               குளிர்ந்தெழும் ஹஜ்ஜாம் அருள் மாதம் ! பாவம் எண்ணி வருந்தி யழவும்                                           பாதை […]

Read More

ரமலான் நோன்பின் மாண்பு !

நோன்பு ! மனசாட்சியால் விதைத்த மனங்களின் விரதம் ! கட்டவிழ்ந்த விட்ட மனத்தை கைப்பிடிக்குள் கொண்டுவரும் நோன்பு ! பசியின் சோகத்தை பணக்காரர்களுக்கும் ருசியாய் பரிமாறி கட்டாயமாக்கிய ரமலான் ! உணவை மட்டும் துறப்பதா நோன்பு ? ஊனாசை உடம்பாசை பேராசை பொருளாசை ஒருசேர ஒத்திவைக்கப்பட்ட மாதம் ! புறம் கோள் பொய் சொல்வதை புறந்தள்ளிய மாதம் ரமலான் ! அறம் அன்பு நேசமதை பறை சாற்றிய ரமலான் ! ஈட்டிய செல்வமதில் இரண்டரை சதவீதம் ஏழைக்கு […]

Read More

ஈத் பெருநாள் வாழ்த்துகள்​ !

வெயிலின் கொடுமை தணித்த புனித நோன்புகள் வேகமாய்க் கடந்துபோன உன்னத நாட்கள் வேகவேகமாய் வந்தெதிரே நிற்கும் அற்புத ஈத் பெருநாள் ஆண்டுதோறும் காத்திருக்கும் அல்லாஹ்வின் அருள் திருநாள்   மதங்கள் கடந்த மாண்பு கொண்டு நல்லிணக்கம் நட்புணர்வு ஈகை வளர்த்து உடலுக்கு ஒருமுறை புத்துணர்ச்சி அளித்து உள்ளமெலாம் பூரிப்பை விதைக்கும் நன்னாள்!   பசியின் தாக்கம் அறிய வைத்து தாகத்தின் ஏக்கம் உணர வைத்து புலன்களின் ஆக்கம் கட்டுக்குள் வைத்து புலப்படா புண்ணியங்களை அள்ளிவரும் பொன்னாள்!   […]

Read More

புனித ரமலான் வருக! வருகவே!!

அருமறையின் அடிச்சுவட்டில் அகமெங்கும் அர்ப்பணித்து ஆண்டவனின் தாள்பணிந்து அகிலத்தோர் வாழ்தலெனும் பெருமைமிகு நபிகளவர் செப்பிய வழிநடக்கும் முகமதியர் கடைப்பிடிக்கும் முப்பதுநாள் விரதமன்றோ? தருவதிலே உள்ள இன்பம் தரணியெங்கும் தான் பரவ ஈதல்செய்து உவக்கும் இஸ்லாமிய மார்க்கமதில் நோன்பதன் மாண்பதனை முப்பது நாட்கள் கண்டு ஊன் உயிர் யாவையும் ஒன்றெனப் போற்றிடும் ஆன்மீகப் பாதையில் ஆண்டவன் அருள்பெறவே ஓங்கிய வழி நடக்கும் உத்தமர்கள் வாழியவே! புனிதமெனக் கருதப்படும் ரமலானே வருக! வருக!! மனிதரெலாம் இணைந்து வாழ மறையோனின் அருள்பொழிக!! […]

Read More

அமலால் நிறையும் ரமலான்

காய், காய், காய், மா (அரையடிக்கு) என்னும் வாய்பாட்டில் அமையும்   எண்சீர்  கழிநெடிலடி விருத்தம்       பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம்          படைத்தவனின் அருளதிகம் பொழிகின்ற மாதம் கசிந்துருகித் துதித்திட்டால் ஈடேற்றும் மாதம்           கறையான பாவங்கள் கரைந்தோடும் மாதம் பசித்தவரின் பட்டினியை யுணர்த்தவ்ரும் மாதம்           பயபக்தி யாதென்றுச் சோதிக்கும் மாதம் வசிக்கின்ற ஷைத்தானை  விலங்கிலிடும் மாதம்           வறியவர்க்கு ஈந்திடவே “ஃபித்ராவின்” மாதம்     குடலுக்கு மோய்வாக்கி […]

Read More

தொழு…!

தொழு…! கதை-கவிதை – கவிதை கரு வறை தொடங்கி கல் லறை அடங்கி முடி வுறும் நாள்வரை… இறைவனைத் தொழு! எத்தனை அழகு என்னென்ன நிகழ்வு எல்லாம் உனக்களித்த ஏகனைத் தொழு! காணவும் களிக்கவும் கண்களால் ரசிக்கவும் பார்வையைத் தந்தவனை நேர்மையாய்த் தொழு! கேட்கவும் கிறங்கவும் கேட்டதை உணரவும் ஒலி புரியச் செவி தந்த வலியோனைத் தொழு! சாப்பிடவும் கூப்பிடவும் சண்டையின்றிப் பேசிடவும் நாவும் நல் வாயும் தந்த நாயன் தனைத் தொழு! சுவாசிக்கும் நாசியாகவும் முகர்ந்தறிய […]

Read More

தாய்மை

  ஆணினத்திற்கே கிடைக்காத பாக்கியம் பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு ஒரு கவளம் சோற்றை கூட – அதிகமாய் உட்கொள்ளாத வயிறு..!ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்யும் உலக அதிசயம்..! எவ்வளவுதான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும் கருவறையை விட பாதுகாப்பான அறையை குழந்தைக்கு தர யாருக்கு முடியும்..? இறைவனின் வல்லமைக்கு இதனை விட சான்று வேண்டுமா..? இது பெண்மையின் மறுபிறவி…! பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்து போகிறது பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..! […]

Read More

லெப்பைக் முழக்கம் …!

  கவிஞர் ஹாஜி மைதீ. சுல்தான்   வந்துவிட்டோம் எனக்கூறும் லெப்பைக் முழக்கம் வானமெங்கும் எதிரொலிக்கக் கேளீர் கேளீர் சொந்தங்கள் மறந்தவராய் க’அபத் துல்லாஹ் சுற்றிவரும் தவாபுகளைக் காணீர் காணீர்   தொங்கோட்டச் சயீயென்னும் தூய செயலால் துயரெல்லாம் துடைத்தொழிக்கும் காட்சி பாரீர் ! பொங்கிவரும் புதுநிலவாம் அரஃபா மண்ணில் புதைந்திருக்கும் தத்துவத்தை உணர்வோம் வாரீர் !   வெள்ளைநிற ஆடையிலே கோடி மக்கள் வெண்புறவாய் ஆடிவரும் அழகின் வண்ணம் உள்ளமெங்கும் அல்லாஹ்வே படிந்து நிற்க ஓரணியின் […]

Read More