பாச நபிமணி (ஸல்) அவர்களுக்கு வாசமாய் … ஒரு மாலை !

(    ‘தமிழ்மாமணி கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி. )   ஒன்றுயிறை அல்லாது வேறில்லை என்பதையே மன்றத்தில் பதிவு செய்த மாமணியே ! நாயகமே !   அன்றிருந்த சிலை வணக்கம் ஆகாதெனச் சொல்லி எந்தவொரு சக்தியும் அதற்கில்லையென உரைத்து   சிந்திக்க வைத்த சித்திரமே ! நாயகமே ! – எம் கண்களைத் திறந்து வைத்த கண்மணியே ! நாயகமே !   ஆங்காங்கே கூட்டங்களாய் அலைந்து திரிந்தோர்க்குப் பாங்காகத் தீனைப் பக்குவமாய் எத்திவைத்து […]

Read More

கவிதை : ஞானப்பெண்ணே ! (பி.எம். கமால் , கடையநல்லூர்)

அத்தாவின் காலடியில் ஞானப் பெண்ணே !-சுவனம் அமைந்திருக்க வில்லையடி ஞானப் பெண்ணே ! முத்தான உன்பாதத் தடியிலன்றோ -சுவனம் முடங்கிக் கிடக்கிறது  ஞானப் பெண்ணே ! கணவனைப் பேணிக்கொள் ஞானப் பெண்ணே !-இரு கண் அவன் உனக்கு ஞானப் பெண்ணே ! சீரியலைப் பார்க்காதே ஞானப் பெண்ணே-உன்னைச் சீரழித்து விடுமது ஞானப் பெண்ணே ! திருமறையைத்  தினம்  ஓது  ஞானப்பெண்ணே-உன்னைத் திருத்தி வழி காட்டிவிடும் ஞானப் பெண்ணே ! கண் பசுவைக் கண்டபடி ஞானப் பெண்ணே !-நீ கட்டவிழ்த்து விடவேண்டாம் ஞானப் பெண்ணே ! மண் போலப் பொறுமை கொண்ட ஞானப் பெண்ணே !-நீ மன்னிக்கப் […]

Read More

வேதம் தந்த மாதம் ———– மஆலி

    பிறை பிறந்தது – ரமளான் முகம் மலர்ந்தது   தலைநோன்பு நாளையென கணக்கு சொன்னது – மனதில் தவத் தொழுகை தராவீஹின் எண்ணம் வந்தது   தலை தாழ்ந்தது – நெற்றி தரை தொட்டது   நன்றியுடன் வழிபாட்டில் மனம்லயித்தது – நாவு இறைவனுக்கே புகழனைத்தும் சமர்ப்பித்தது   அலை ஓய்ந்தது – மனம் அமைதியானது   தீயவழியில் வாழ்ந்த நேரம் காலமானது – இனி தூயவழியில் தொழுகை நோன்பில் வாழச் செய்தது   […]

Read More

வா ! ரமழானே ! வா ! (பீ. எம். கமால் , கடையநல்லூர்)

வா ! ரமழானே ! வா ! உன்னை வரவேற்க இரப்பைகளிலும் இதயங்களிலும் ஆயிரம்கோடி கரங்களோடு காத்திருக்கின்றோம் ! நீ பசிமாதம் ஆனாலும் எங்கள் ஆன்மாக்களுக்கு விருந்தளிக்கவல்லவா விண்ணிறங்கி வருகின்றாய் ? எங்கள் ஆன்மத் தங்கத்தை புடம்போட வருகின்ற புனித ரமழானே ! வா ! வா ! காபாவைச் சுற்றிவந்து கைக்குழந்தை ஆகின்றோம் ! ஆனாலும் இங்கே பொய்க்குழந்தையாகவே பொழுதைக் கழிக்கின்றோம் ! அந்தப் பாவத் துருவையும் கூட சுட்டெரிக்கும் உன் நெருப்பில் சாம்பலாக்கி விடுகின்றாய் […]

Read More

புதிய அரங்கேற்றம் ! -அத்தாவுல்லாஹ், துபை

மக்கம் – இபுராஹிம் நபிகள் இஸ்மாயில் நபிகளின் பிரார்த்தனை தேசம் – அங்கே பிறந்ததுதான் நமது ஈருலகங்களுக்குமான இரட்சிப்பு சுவாசம் ! கஅபா – உலக முஸ்லிம்களின் கவுரவ கம்பீரம் – உலகின் அனைத்து நபிமார்களும் நின்று வணங்கிய இறை வாசஸ்தலம் ! அன்னை ஹாஜரா ஏழுமுறை ஓடித்தேடிய குழந்தையின் தாகம் இங்குதான் புனித ஜம் ஜம்மாய் சுரந்தது ! ஹஜ்ஜூக்கு வந்து – தங்கள் அழுக்குப் பாவங்களை அகற்றுபவர்கள் புனித மழலைகளாகப் பிறக்கிறார்கள் ! பிள்ளைகளுக்குப் […]

Read More

சமத்துவபுரம் ( பேராசிரியர் . தை. கா. காதர்கனி )

சமத்துவபுரம் ( பேராசிரியர் . தை. கா. காதர்கனி ) சுவனத்தின் மலர் சோதிமய மாகிப் புவனத்தில் பூத்ததோ? புதுப்பள்ளி யானதோ? நிறைநிலா வட்டு நெடுவானம் விட்டு, தரையிறங்கி வந்ததோ? தவப்பள்ளி யானதோ? விண்மீன் ஒன்று மண்மீது விழுந்து கண்கவர் பள்ளியாய்க் காட்சி யானதோ? அழகெல்லாம் கூடி அலங்காரம் செய்து, எழில்பள்ளி யாக எதிர்நின்ற தாமோ? சீரெல்லாம் சேர்ந்து சிங்காரம் செய்து ஓரிறைப் பள்ளியாய் உருவான தாமோ? வனப்பெல்லாம் திரண்டு வளம்மிகப் பெற்று, தினந்தொழும் பள்ளியாய்த் திகழ்கின்ற […]

Read More

முஹர்ரம் என்னும் அருள்மாதம் !

  அல்லாஹ் உலகைப் படைக்க நாடி       அரும்பாய்ச் செய்து கமாவை எல்லா நலனும் இம்மை மறுமை        இருக்க இயக்கி வளர்த்தானே ! நல்லார் நபிமார் இலட்சம் மேலும்         நானிலம் எங்கும் வந்ததுவும் வெல்லும் வேதம் கமாவாலே          விளக்கும் முஹர்ரம் அருள்மாதம் ! பூவுல கெங்கும் ஹிஜ்ரீ புத்தாண்டு         பூத்து மணக்கும் புதுமை காண் ! மேவும் மனங்களில் மேன்மை பொங்க         மேலாம் தொழுகை மிளிர்வதைக் காண் ! காவும் […]

Read More

என் துஆ மொட்டுக்களைத் தாமரைப் பூக்களாக்குவாயாக !

  —- தத்துவக்கவிஞர் – இ. பதுருத்தீன், சென்னை (9444272269) ——–   இறைவா !   எங்கோ காய்த்தேன், ஓர் எலுமிச்சைப் பழமாக !   எங்கோ இருந்த உப்பில், என்னை யாரோ கலந்தார், இன்று நான் ஊறுகாயாக உறைந்து கிடக்கின்றேன்.   நான் பாதுஷாவுக்கு ஒப்பாவேன், பழங்கஞ்சி கலயங்களின் பக்கத்தில்!   கூட்டுகளும், குருமாவும் இல்லாவிட்டாலும், ஊட்டும் உணவுகளுக்கு நான் காட்டும் நிலா ஆவேன்.   நான், பிறருக்குக் களிப்பாக இருக்கின்றேன் என்ற சந்தோஷ […]

Read More

தியாகத் திருநாள் வாழ்த்துகள்

இறையோ இதுவோ இப்பிறையோ? இல்லை இல்லை தேய்ந்திடுதே! முறையாய் பெரிய கதிர்கூட முழுதாய் மறையுது அந்தியிலே நிறைந்த சிந்தை இபுறாஹீம் நெஞ்சில் பூத்த தேடலிலே இறையின் மார்க்கம் விளங்கியதே இம்மை வாழ்வு சிறந்திடவே! கனவில் கண்டார் பலியிடவே கருணை பரிசாம் இளம்மகனை! நினைந்தே உறுதி பெற்றிட்டார்  நிச்ச யமிது இறையாணை! அணைத்தே மகனை கேட்டாரே அவரும் ஒப்பத் துணிந்தாரே புனையா உண்மை தேடிடுவோம் புரிந்தால் நன்மை நமக்கன்றோ அறுக்கத் துணிந்தார்; அறவில்லை அல்லாஹ் நாட்டம் அதற்கில்லை பொறுத்துப் […]

Read More

ஏங்கும் நெஞ்சம்

மீண்டும் மீண்டும் காண எந்தன் கண்கள் ஏங்குதே! மக்கா மதினாவைச் சுற்றியே எந்தன் நினைவு ஓடுதே! இறுதிக்கடமை நிறைவேற்ற நெஞ்சம் துடிக்குதே! இறுதிநபி வாழ்வில் எந்தன் வாழ்வும் தொடருதே! [மீண்டும் மீண்டும்] ஆவல்கொண்டு காப்பவன்தான் நமது இறைவனும் அவன் காவலில்தான் இயங்குதிந்த உலகம் முழுவதும்! ஆதி அந்தம் அனைத்தும் படைத்து பாது காப்பவன் அணுவுமெங்கும் அசையாது அவன் துணையு மின்றியும்! [மீண்டும் மீண்டும்] இறைவன் சொன்ன வாக்குகளை பற்றிப்பிடிக்கவே இருதயத்தின் குருதி முழுதும் எழுச்சி பெருகுதே! இன்னல் […]

Read More