இவர் தான் முஹம்மத்!!

ஒரு திரைப்படம் இன்று உலகத்தையேஉலுக்கிவிட்டிருக்கின்றது. உலகெங்கும் 800க்கும் மேற்பட்ட நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கின்றன. இந்த நாள் வரை ஐம்பது பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். எல்லாமே யாருக்காக? எல்லாமே எதற்காக? முஹம்மத் நபிக்காகத்தான் இத்தனை ஆர்ப்பாட்டங்களும் கொந்தளிப்புகளும். முஹம்மத் நபி என்றால் யார்? என்ன அது, 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் வாழ்ந்த வாழ்க்கை வழிகாட்டியா? இத்துணை நூற்றாண்டு-கள் உருண்டோடி விட்ட பிறகுமா, மக்கள் அவரை மறக்காது இருக்கின்றார்கள்? இத்துணை ஆண்டுகளுக்குப் பிறகுமா மக்கள் அவருக்காக தங்களின் உயிரையே கொடுக்கின்றார்கள்? யார்தான் […]

Read More

கருத்துக்கு கருத்தால் பதில் சொல்வோம்

  ஷேக் அகார் சிறந்த சிந்தனையாளர். அவ்ரது உரையில் கூறப்பட்ட கருத்துக்களை பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும். சிறப்பான உரை. அச்சில் எடுத்து முஸ்லிம்களிடையே பரப்பவேண்டியது அவசியம். லண்டன் வாழ் முஸ்லிம்கள் இதுவரை ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட திருக்குர்ஆன் பிரதிகளையும், நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றையும் வினியோகித்து விட்டதாக தகவல். நாம் எங்கே இருக்கிறோம்?  ஒட்டு மொத்த உழைப்பு நமது இலக்கை அடைய வேண்டும். ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் நூறு பேருக்காவது நபி பெருமானாரின் வாழ்க்கை பற்றிய நூல், சிற்றேடு, […]

Read More

இட்டு வாழும் இலக்கணத்தை நட்டு வைத்தது ரமளான் (முதுவைக் கவிஞர், ஹாஜி உமர் ஜஹ்பர் )

கோடான கோடி ஜீவ இனத்திலே குறிப்பிட்டுச் சொல்லும் மனிதப் பிறப்பாக இறைவன் நம்மைப் படைத்திருக்கிறான் ! அல்ஹம்துலில்லாஹ் ! இதற்காக இறைவனை எப்படிப் போற்றிப் புகழ்ந்தாலும் அது ஈடாகாது ! இந்த மனித இனம் வறுமையிலும், செழுமையிலும் உழன்று நின்று- சிலர் குளுமையிலும் சிலர் கொடுமையிலும் குடித்தனம் நடத்துவதை அன்றாட மனித வாழ்வில் கண் கூடாகக் காணுகிறோம் ! எல்லா மனிதரின் வாழ்வும் ஒன்றுபோல் அமைந்ததில்லை செல்வம் படைத்தவர்கள் சந்தோஷத்தில் வாழுகிறார்கள் ! செல்வம் இல்லாதவர்கள் சஞ்சலத்தில் […]

Read More

தர்மத்தின் தலை வாசல் நோன்பு ( முதுவைக் கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ )

எத்தனையோ மாதங்கள் எழிலாய் பூத்தும் இனிதான ரமளானைக் கொடையாய் தந்து – தத்துவங்கள் நிறைவான புனித நோன்பைத் தந்தவனே ! ரஹ்மானே அல்லாஹ் ! உனக்கே எல்லாப் புகழும் புகழ்ச்சியும் உண்டாகட்டும் ! புனித நோன்பின் புண்ணியங்களை இரவும் பகலும் மகிழ்வுடன் அனுபவித்து வரும் நோன்பாளிகளே ! கண்ணிய மிக்க ரமளானின் இரண்டாம் பகுதிக்கு வந்து விட்டோம் ! அல்ஹம்து லில்லாஹ் ! பசியினைப் பசிஅறியார் புரிந்து கொள்ளப் படைத்திட்ட புனித மாதமே ரமளான் மாதம் ! […]

Read More

வறியோர்க்கு உதவிக்கரம் நீட்டுங்கள். ரமழான் புகட்டும் பாடமிது

அஷ்- ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத், இலங்கை புனித ரமழான் முஃமின்களுக்கு புகட்டி நிற்கும் பாடங்கள், படிப்பினைகள் அது வழங்கும் பயிற்சிகள் மிக மகத்தானவை. உண்மையில் முஃமின்கள் புனித நோன்பினால் அடையும் நன்மைகள் ஏராளம். நோன்பானது உடல் உள, ஆன்மிக ரீதியாகவும் முஃமின்களுக்கு பயன் அளிப்பதனை, பல் நன்மைகளை வழங்குவதனை காண்கின்றோம். புனித நோன்பு பசியின் கொடுமையை, வறுமையின் வன்மையை ஒவ்வொருவருக்கும் மானசீகமாக, செயல்முறையில் உணர்த்தி நிற்கும் பாங்கு எவ்வளவு அற்புதமானது? பசியின் ருசியை அறியாது தாகத்தின் […]

Read More

ரமழானே வருக…! ரஹ்மத்தைத் தருக…!!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ரமழானே வருக…! ரஹ்மத்தைத் தருக…!! பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A அல்லாஹ்வின் அருள்மழை பொழியும் அற்புதத் திங்கள்! ஆவலுடன் எதிர்பார்த்த அடியார்களின் ஆசை மாதம்! இறைவனுடன் இணக்கத்தை ஏற்படுத்தும் இணையில்லா மாதம்! ஈகையை ஈந்துவக்கும் ஈடில்லாதவனின் இனிமை மாதம்! உயர் பண்புகளை உருவாக்கும் உன்னத மாதம்! ஊண், உறக்கம் துறந்து உயர்வான குணங்களை உள்ளத்தில் கொண்டுவரும் மாதம்! எத்தகைய இடர்பாடுகள் ஏற்படினும் பொறுமையை கற்றுத்தரும் மாதம்! ஏழ்மையை […]

Read More

உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா? இந்த சந்தேகம் நம்மில் யாருக்காவது வந்ததுண்டா?அவ்வாறு வருமாயின் அதற்குபதில்,நிச்சயமாக இல்லை என்பதுதான். உபதேசம் என்பது  இந்த இஸ்லாமிய சமுதாயத்தின் பொது உடைமையே அன்றி உலமாக்களின் தனி உடைமை அல்ல. உபதேசம் செய்வது  மார்க்க அறிஞர்கள் மீது மட்டும்தான் கடமை மற்ற முஸ்லிம்கள் மீது அதைக்கேட்பது மட்டும் தான் கடமை என நினைப்பது பெரும்தவறு.மார்க்கஅறிஞர்களின் உபதேசத்தை எப்போது நாம் செவிமடுத்துவிட்டோமோ அதை பிற முஸ்லிம்களுக்கு எத்திவைப்பது நம் அனைவரின் மீதும்கடமையாகிவிடுகிறது.குறிப்பாக […]

Read More

குர்ஆன் விரிவுரை !

( மெளலவி அப்துர் ரஹ்மான் ) வலாயெஹ்ஸ பன்னல்ல ஸீன யப்கலூன பிமா.. ஆதாஹு முல்லாஹு மின் பள்லிஹு ஹுவகைரல் லஹும் பல்ஹுவஷர் ருல்ல ஹும். ஸயுதவ்வ கூனமா பகிலூ பிஹு யவ்மல் கியாமா. வலில்லாஹி மீராஸுஸ் ஸமாவாதிவல் அரள் வல்லாஹு பிமாதஃமலூனகபீர். அல்லாஹ் வழங்கிய அருட்கொடையிலிருந்து நீங்கள் கஞ்சத்தனம் செய்ய வேண்டாம். மனிதர்கள் தமக்கு வழங்கப்பட்டதாகக் கருதிக் கொள்ள வேண்டாம். கஞ்சத்தனம் செய்பவர்களுக்கு அவையே கழுத்தில் அணிவித்து பாம்பாக மாற்றப்படும். தமது மனைவி, மக்கள், குடும்பத்தார்க்கு […]

Read More

சோதனைகள் வெற்றிக்கே ! ( ஆலங்குடி நூ. அப்துல் ஹாதி பி.ஏ., )

ஒவ்வொரு மனிதனும் நன்மையும், நலவும், செல்வமும், செழிப்பும் ஏற்படும்போது மகிழ்வு கொள்கிறான். துன்பமும் கஷ்டமும் சூழ்ந்து கொள்ளும்போது ‘அல்லாஹ்’ ‘அல்லாஹ்’ என்கின்றான். எந்நிலையிலும் அல்லாஹ்வை நினைப்போர் மிகக் குறைவே. அதுவும் இக்காலத்தில் இலட்சத்தில் ஒருவர் என்று கூட சொல்ல முடியாத நிலை. ‘ஆகவே, மனிதனை அவனுடைய இறைவன் சோதித்து அவனுக்கு அருள் புரிந்து அவனை மேன்மையாக்கினால், என்னுடைய இறைவன் என்னை மகிமைப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகின்றான். ஆயினும் (இறைவன்) அவனை சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்து […]

Read More