புனித இரவும் புண்ணிய அமல்களும்

–    முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஃபர் ஆலிம் பாஜில் மன்பயீ –   புனித ரமளானின் ஒவ்வொரு இரவும் பாக்கியம் நிறைந்த இரவுகள் தான். அதிலும் குறிப்பாக புனித “லைலத்துல் கத்ரு” இரவு புனிதமும் புண்ணியமும் பாக்கியமும் நிறைந்த இரவாகும். “நிச்சயமாக நாம் இந்தக் குர் ஆனை (கண்ணியமிக்க) லைலத்துல் கத்ரு என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கி வைத்தோம். நபியே கண்ணியமிக்க இரவின் மகிமையினை நீர் அறிவீரா? ‘கண்ணியமிக்க அந்த இரவு ஆயிரம் […]

Read More

ஒளுவின்றி குர் ஆனை தொடலாமா?

                           கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம். எனதருமை முஸ்லிம் சமுதாயமே!   எனது கேள்விக்கான பதிலை எதிர்பார்க்கும் வகையில் இந்த எழுத்தாக்க விவாதத்தை துவக்கியுள்ளேன்,   உங்களது கருத்தையும் பதிவு செய்யுங்கள் இறைவன் நாடினால் நம் எல்லோருக்கும் ஒரு தெளிவான அறிவு கிடைக்கட்டும்.   நீண்ட காலமாக நமக்குள் இருந்து வரும் திருக்குர் ஆன் தொடர்பான பிரச்சினைகளில் இது மிகவும் முக்கியமானது. […]

Read More

கல்வி நல்லோர்களின் சொத்து!

                       கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.   கல்வி செயலை கூவி அழைக்கிறது;அது பதில் தந்தால் நின்றுவிடுகிறது;இல்லையேல் துள்ளி ஓடி விடுகிறது.(நபிகள் நாயகம் ஸல்…)    கல்வி நபிமார்களின் சொத்தாக இருக்கிறது;ஆனால் பொருள் நிராகரிப்போர்(காபிர்கள்)பிர் அவ்ன்,காரூன் போன்றோருடைய சொத்தாயிருக்கிறது!(ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக்(ரலி).   கல்வி கற்க விரும்புவோருக்கு கல்வியை கற்றுக் கொடுப்பது வழிகாட்டியின் கரத்தில் வாளைக் கொடுப்பது போலாகும்!(ஹழ்ரத் உமர்(ரலி).   கல்விமான்கள் குறைந்த […]

Read More

காகித பூங்கா அமைப்போம்

வல்ல நாயனின் திருப்பெயர் போற்றீ     காகித பூங்கா அமைப்போம் மண்ணரைக்கு பூக்கள் தர அன்பிற்கினிய இஸ்லாமிய உடன்பிறப்புகளே, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சில தினங்களுக்கு முன்னால் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக ஒரு ஊர் சென்றிருந்தேன். இஸ்லாமியர்கள் பெருவாரியாக வாழ்கிற ஊர்களில் அதுவும் ஒன்றும். வழமை போல அழைப்பிதழிலிருந்து சில மணி நேரங்கள் திருமணம் தாமதம். சரி மஸ்ஜிதில் இருக்கும் நேரத்தை நல்ல வகையாக கழிக்கலாமே என எண்ணி எதாவது நூல்கள் இருக்கிறதா என்று பள்ளியைசுற்றி […]

Read More

ஜும்ஆ நாளின் சிறப்புகள்

  ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸயீது (ரலி),நூல் :ஹாகிம் உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் சூர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை […]

Read More

எம்மைக் கவர்ந்த சமூக சமத்துவ புரட்சியாளர் !

  -க. குணசேகரன்   சமூகம் என்பது பல முரண்களைக் கொண்டுள்ள பல்வேறு வர்க்கங்களை உள்ளடக்கிய அமைப்பு. இதற்குள் ஒருமித்த சமத்துவ நிலைமையைக் காண்பதென்பது இயலாதது. முரண்களைக் களைந்து, வர்க்க உணர்வுகளை அகற்றி அனைவரும் சமமானவர்கள் தான் என்று அவர்களை அறியச் செய்து ஒரு சமூகமாக உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் இதை சாதித்தவரை புரட்சியாளர் என்று சொல்லலாம் வேறு எப்படி கூற முடியும். உலகளவில் வரலாற்றில் பதியப்பட்ட பல்வேறு சமூகங்களைப் பற்றிய விவரங்களில் பல […]

Read More

” லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹி …!

  ( சிராஜுல் மில்லத் ஆ.கா. அப்துல் ஸமது )   ஒப்பரிய இஸ்லாத்தின் தாரக மந்திரமான செப்பரிய திருக்கலிமாவை உலகின் விடுதலைக்கீதம் என்று சொல்லலாம். ‘லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹி’ (வணக்கத்திற்குரியவன் வல்லவனாம் அல்லாஹ்வித் தவிர பிறிதொருவன் இலன் – முஹம்மது அந்த அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள்.) இது தான் இஸ்லாத்தின் கொள்கைச் சுருக்கம். இரண்டே சொற்றொடர்களில் விழுமிய இஸ்லாத்தின் செழுமிய கொள்கைகள் குறிக்கப்பட்டு விட்டன. இவ்விரு சொற்றொடர்களின் விளக்கமாகத்தான் இஸ்லாமிய தத்துவமும் சரி […]

Read More

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ‘புஸ்ரா’ பயணம் ( வரலாற்று ஆய்வு )

A.M.M. காதர் பக்‌ஷ் ஹுசைன் ஸித்தீகி M.A.,   சிரிய அரபுக்குடியரசின் தலைநகர் டமாஸ்கள் (திமிஸ்க்) மாநகரிலிருந்து 1.45 கி.மீ தெற்கே ’டராஆ’ பிராந்தியத்தில் அமைந்துள்ளது தான் ‘புஸ்ரா’ 3400 ஆண்டுகளுக்கு முன்பே இந்நகர் குறிப்பிடத்தக்கதாக விளங்கியதுடன் ரோமானிய பேரரசின் பிராந்திய தலைநகராக திகழ்ந்தது இப்புரதான நகர். அக்காலத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான அரண்மனை ஆலயங்கள், பொதுகலையரங்கம், வசிப்பிடங்கள் இன்னும் அழிவுபட்ட நிலையில் அதன் அடையாளச்சின்னங்களுடன் காட்சி தருகிறது. அரேபிய தீபகற்பத்திலிருந்து அன்றைய ஷாம் தேசமான இன்றைய ஜோர்டான், […]

Read More

”வரதட்சணை ஓர் சமூகக் கேடு”

  ( மெளலானா அல்ஹாஜ் M. சதீதுத்தீன் பாகவி MFB, AU. ) தலைமை இமாம், அடையார் பெரியபள்ளி – சென்னை 20 )   இஸ்லாமியத் திருமணங்களின் மேன்மை :- உலகில் தோன்றிய மதங்கள் – மார்க்கங்கள் பலவும் திருமணம் புரிந்து வாழ்வதை வற்புறுத்தினாலும் திருமணத்தின் பல்வேறு உட்பிரிவுகளையும் சட்டங்களையும் தெளிவுற வகுத்துத் தந்த பெருமை இஸ்லாத்தை மட்டுமே சாரும். ஒரு பெண்ணைப் பெற்றவன் அவளை மணமுடித்து தருவதற்குள் சக்கையாய் பிழியப்படுகின்ற இன்றைய வரதட்சணை உலகில் […]

Read More

வாழ்வு மேம்பட ……………

  ( நீடூர் ஏ.எம். சயீத் )   உலகின் மனிதர்கள் யாவரும் சகோதரர்கள் அவர்கள் அனைவரும் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான். பல்வேறு பிரிவினர்களாக சமுதாயத்தினர் வாழ்ந்தாலும் வாழ்க்கையின் நோக்கத்தை அறியாமல் செயல்படுகிற போது தவறுகள் நிகழ்கின்றன. அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் கொள்கைகளை அறியாதவர்களாக இருக்கிறார்கள். பொருள் சேர்க்கும் துடிப்பில் உள்ளவர்கள் உழைக்க சோம்பல் படுகிறார்கள். மனசாட்சி இல்லாதவர்கள் இன்பத்தைத்தேடி அலைகிறார்கள். கல்விகற்றல் வணிகச் சரக்காகி விட்டதால் ஒழுக்கநெறிகள் உதாசினப்படுத்தப்படுகின்றன. அறிவியல் வளர்ச்சியில் மனிதம் காணாமல் போகிறது. […]

Read More