அறநெறிகளைத் தூண்டும் ஆன்மீக நோன்பு

    நோன்புக் கடமை “நிலந்தெளியும் பஜ்ருக்கு சற்று முன்பிருந்து பகல் முழுவதும் – சூரியன் மறையும் வரை உண்ணல், பருகல், உடலுறவு கொள்ளுதல் போன்ற நோன்பை முறிக்கும் எதுவுமின்றி, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நோன்பு நோற்றல்” எனும் இக்கடமை ஹள்ரத் ஆதம் நபிக்கு சொர்க்கத்திலிருந்தும் தொடர்ந்து உலகில் எல்லா நபிமார்களுக்கும் கடமையாக்கப்பட்டிருந்ததாக திருக்குர்ஆன் நமக்கு எடுத்தியம்பிக் கொண்டிருக்கிறது. “ஈமான் கொண்ட விசுவாசிகளே ! உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது போல, உங்கள் மீதும் நோன்பு […]

Read More

கல்விக் கருவூலம் கானலில்லாஹ் (ரஹ்)

  மவ்லவி அல்ஹாஜ், சிராஜுல் உம்மா எஸ்.அஹமது பஷீர் சேட் மன்பயீ தலைமை இமாம் : பெரிய பள்ளிவாசல், முதுகுளத்தூர், இராமநாதபுரம் மாவட்டம்.   1968 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து எனது ஏழாண்டுக் கல்விக் காலங்களில், லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரியின் அன்றைய முதல்வராக பொறுப்பில் இருந்த கண்ணியத்திற்குரிய எனது தனிப்பாசத்துக்கு உரிய கானலில்லாஹ் அப்துல்லாஹ் ஹஜ்ரத் அவர்கள் எனது நினைவில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் கண்ணியவான் ஆவார்கள். 1864 […]

Read More

மறுமலர்ச்சி தரும் ரமளான்

மறுமலர்ச்சி தரும் ரமளான் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ். முஹம்மது ரபீக் மிஸ்பாஹி – மலேசியா     புண்ணியம் பூத்துக் குலுங்கும், நன்மையும் நற்செயலும் செழிக்கும், இறையச்சமும் தியாகமும் வளர்க்கும் புனித ரமளான் வந்துவிட்டது. ஈடு இணையற்ற நன்மைகளை வாரிச் சொரியும் ரமளான் கிடைத்து விட்டது. மனிதருள் ரமளான் தரும் வாழ்க்கை மாற்றங்கள் எண்ணிலடங்காதவை. அல்லாஹ் தந்த அருட்கொடைகளில் ரமளான் மாதம் மறக்க முடியாததாகும். ரமளானின் மேன்மையையும், சிறப்பையும் அறிந்தவர்களெல்லாம் காலம் முழுதும் ரமளானாக இருக்கக் கூடாதா? […]

Read More

அந்த 30 நாட்கள்

-புதுசுரபி அண்மையில் ஒரு இணையதளம் வழியாக அமெரிக்கப் பேச்சாளர் ஒருவரின் உரையினைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் பேச்சு மிக சுவாரஸ்யமாய் இருந்தது. ”நீங்கள் எதில் நிபுணத்துவம் அடைய நினைக்கிறீர்களோ, புதியதாய் கற்க நினைக்கிறீர்களோ வெறும் முப்பது நாள் போதும். நீங்கள் உங்கள் விருப்பப்படி மாறிவிடுவீர்கள், நான் உத்தரவாதம். நான் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் கணினிப் பொறியியல் நிபுணர், ஆனால் நான் இப்போது 50,000 சொற்களைக் கொண்ட ஒரு நாவலின் நாவலாசிரியர். நாளொன்றுக்கு 1667 சொற்கள் மூலம் வெறும் முப்பது […]

Read More

புற்றுநோயை குணமாக்கும் புனித நோன்பு

  மவ்லவீ ஹாபிஃழ் அ. சைய்யது அலீ மஸ்லஹி பாஜில் தேவ்பந்தீ   புற்றுநோய்க்கு மருத்துவமே கிடையாது என ஆரம்பத்தில் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் நவீன காலத்தில் புற்று நோய்க்கும் மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்பது மகிழ்ச்சியான ஒரு செய்தி. புற்று நோய்க்கு மருத்துவம் கண்டறியப்படாத சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே ‘அல்குர்ஆனில் எல்லா நோய்க்கும் மருந்து உண்டு’ என வல்ல அல்லாஹ் கூறுவது ஆச்சரியத்தையும், மன நிம்மதியையும் தருகிறது. “இன்னும், நாம் முஃமின்களுக்கு அருளாகவும், அருமருந்தாகவும் […]

Read More

பசியின் பரிசு

  “முதுவைக் கவிஞர்” மவ்லானா அல்ஹாஜ் ஏ. உமர் ஜஃபர் பாஜில் மன்பயி     “பசித்திரு, விழித்திரு, தனித்திரு” என்ற மூன்று வார்த்தைத் தத்துவத்தை முழக்கி வைத்தனர் நம் மூத்த வாழ்வில் முத்திரை பதித்த மூதாதைகள். இந்த மூன்று வாக்கியத்தில் வாழ்க்கையின் முக்கியத்தை உணர்ந்து வெற்றி வாகையும் சூடியுள்ளார்கள். உடலையும், உணர்வையும், உலகையும் குழைத்தெடுத்த வார்த்தைகள் இவை. இம் மூன்று வார்த்தைகளில் வாழ்க்கையை அடக்கி ஆண்ட மாமனிதர்களை வரலாற்றுச் சுவடுகள் இன்று புகழாரம் சூட்டி நிற்பதை […]

Read More

ரமழான் ஒரு விருந்தாளியல்ல, அழைப்பாளி!

ரமழான் வந்துவிட்டால் எம்மில் பலர் “நோன்பும் வந்து விட்டது” என்பார்கள். ஷவ்வால் தலைப்பிறை கண்டவுடன் “நோன்பும் முடிந்துவிட்டது” என்பார்கள். ஆம்! இவ்வாறு “வந்துவிட்டது”, “முடிந்துவிட்டது” என்று எத்தனை ரமழான்களை வழியனுப்பியிருப்போம்! எதிர்வரும் ரமழானும் அவற்றுள் ஒன்றாக சென்றுவிடத்தான் போகிறது. சந்தேகமில்லை. எனினும், நாம் எங்கே செல்லப் போகிறோம் என்பதே சந்தேகம்! ரமழான் வெறுமனே வந்துவிட்டுச் செல்வதற்காக வருகின்றதொரு மாதம் அல்ல. ரமழான் எங்களை அழைத்துச் செல்வதற்காக வருகின்ற மாதம். எனினும் அது எம்மை அழைக்கவில்லை போலிருக்கிறது. அல்லது அதன் அழைப்பு எங்களது செவிகளுக்கு எட்டவில்லை […]

Read More

பகைவனுக்கு அருளிய தகைமை

    அப்பாஸியக் கலீபா ஸஃப்பாஹ், தம் அமைச்சர், பெருமக்கள் புடைசூழத் தம் பூங்காவில் உல்லாசமாகப் பவனிவந்து கொண்டுள்ளார். அன்று கலீபா மிகவும் மகிழ்ச்சிகரமாகக் காணப்பட்டார். தம்மைச் சூழ வந்துகொண்டிருப்பவர்களுடன் அன்புடன் உரையாடிக் கொண்டு வந்தார். அப்பொழுது அவருடன் வந்து கொண்டிருந்தவர்களில் அவரின் மிகப்பெரும் விரோதியின் மகன் இளவரசர் இப்ராஹீமும் இருந்தார். அவருக்குக் கலீபா உயிர்ப்பிச்சை வழங்கி அவரை அன்புடன் ஆதரித்து அவருக்குத் தம் அரண்மனையிலேயே தங்க இருப்பிடம் நல்கிக் கெளரவித்து வந்தார். இப்பொழுது கலீபா இப்ராஹீமை […]

Read More

நான் தான் “திருக்குர்ஆன்” பேசுகிறேன் !

கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.( 055-70 62 185 ) என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே, உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவிட வேண்டுமென்பது தான் எனது ஆவல் ! அதற்காகத்தான் நானும் உங்களுக்காக இறைவனிட மிருந்து இறக்கி அருளப்பட்டிருக்கிறேன். நான் சுவர்க்கத்தின் லவ்ஹூல் மஹ்பூல் என்னும் ஏட்டில் வசித்து வருபவன். இவ்வுலகில் நான் முதன் முதலில் ஆரத்தழுவி கட்டி அணைத்து முத்தமிட்டது நமதருமை நாயகம் (ஸல்) அவர்களைத்தான் ! மனிதர்கள் எல்லோருமே என்னைத்தான் முத்தமிடுவீர்கள். […]

Read More