பன்முகச் சமூகத்தில் மதங்களின் பங்களிப்பு

  ( டாக்டர் மஹாதிர் முஹம்மது அவர்களின் உரையிலிருந்து)     தோற்றத்தைவிட உள்ளுணர்வுக்கு இஸ்லாம் முக்கியத்துவம் தருகிறது.தொழுகையில் ” நிய்யத்” எனப்படும் எண்ணம் முக்கியம். ஆதலால் நலக்குறைவாலோ, காலமின்மையாலோ, சூழ்நிலைகளாலோ, தொலைவினாலோ வணக்க முறையைச் சுருக்கிக் கொள்ளவோ குறைத்துக்கொள்ளவோ அல்லது சமிக்கை மூலம் தொழுது கொள்ளவோ இஸ்லாம் அனுமதிக்கிறது. பெரும்பான்மை முஸ்லிம்கள் அடிப்படை நோக்கத்தை அறியாது, சடங்குகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பது பரிதாபத்திற்குரியது.   ஹிஜ்ரத் நிகழ்ந்து ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்குப் பின்னும் மத துரோகிகளின் தலைகளை […]

Read More

இந்திய சட்டத்துறையில் ஷரீஅத் சட்டத்தின் பங்களிப்பு

           ( வழக்கறிஞர் நீடூர் அல்ஹாஜ் ஏ.எம். சயீத் )    (நபியே) உண்மையான இவ்வேதத்தை நாம் தான் உம்மீது இறக்கினோம். இது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மையாக்கி வைக்கின்றது. அன்றி அவைகளைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே நீர் அல்லாஹ் இறக்கிய இ(வ் வேதத்)தைக் கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளியும். மெளட்டீகக் காலத்து சட்டங்களையா இவர்கள் விரும்பிகின்றனர். மெய்யாகவே நல்லுறுதி பூண்ட மக்களுக்கு அல்லாஹ்வை விட அழகான தீர்ப்பளிப்பவர் யார்?  – திருக்குர்ஆன் 5:48-50.      திருக்குர்ஆன் […]

Read More

தமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்!

“காதலா, கடமையா?’ – விறுவிறுப்பான ஒரு தமிழ் நாவல். தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர், 1938 பிப்ரவரியில், அந்த நூலுக்கு மதிப்புரை எழுதினார்… “சமீப காலத்தில், நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய, “காதலா, கடமையா?’ என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்த போது, எனக்கு மிக்க மகிழ்ச்சியும், வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுக் குள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கின்றனர் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. இதன் நடை […]

Read More

அல்லாஹ்வின் அற்புதங்கள் !

         பேராசிரியர் ஹாஜி. T.A.M ஹபீப் முஹம்மது M.Sc.,M.Phil.,   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவனைக் குறிக்கும் தனிப்பட்ட பொதுப்பெயர் அல்லாஹ். அல்லாஹ்வினால் அருளப்பட்ட சூரா பாத்திஹாவின் முதல் மூன்று திருவசனங்களில் அல்லாஹ்வின் நான்கு அழகிய திருப்பெயர்கள் சிறப்பாக அமையப் பெற்று அல்லாஹ்வின் மகத்துவ மிக்க குணம் (தாத்) மற்றும் தன்மை (ஸிபத்து) ஆகியவற்றை அறிவிக்கின்றன.       ரப், மாலிக், அர்ரஹ்மான் மற்றும் அர்ரஹீம் என்பவையே அந்த நான்கு திருப்பெயர்கள். முதல் இரண்டு பெயர்கள் அல்லாஹ்வின் […]

Read More

இஸ்லாமியத் தமிழிலக்கிய 3-ஆம் மாநில மாநாட்டுத் தீர்மானங்கள்

இஸ்லாமியத் தமிழிலக்கிய 3-ஆம் மாநில மாநாடு அக்டோபர் 02, 2011, தென்காசி மாநாட்டுத் தீர்மானங்கள் 1. இறையருளால்… இஸ்லாமிய இலக்கியத் கழகத்தின் சார்பில் வருங்கால இலக்கியப் படைப்பாளர்களை வளர்தெடுக்கும் நோக்கத்தில் செப்டம்பர் 13, அக்டோபர் 1 ஆகிய தினங்களில் குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வெற்றிகரமாக நடைபெற்ற ‘படைப்பிலக்கியப் பயிலரங்கு’ போல், இனி தொடர்ந்து பல்துறை சார்ந்த பயிலரங்குகள், கருத்தரங்குகள் இலக்கிய நிகழ்வுககள் நடத்தப்படும். 2. இஸ்லாமிய இலக்கியப் படைப்பாளிகள், எழுத்தாளர்களைச் சமுதாயத்தில் அதிகப்படுத்துவதற்கான முயற்சியாக, அவர்கள் தம் படைப்புகள் […]

Read More

தாருல் இஸ்லாம்

”தாருல் இஸ்லாம்” பத்திரிகையின் 38வது ஆண்டுத் தொடக்க இதழில் (1957 ஜனவரி), பா.தாவூத் ஷா தனது வாழ்க்கைக் குறிப்பை சுருக்கமாக வரைந்திருந்தார்.     கி.பி. 1885-இல் கீழ்மாந்தூர் என்னும் (தஞ்சை ஜில்லா) மண்ணியாற்றங் கரையிலுள்ள குக்கிராமம் ஒன்றிலே நான் பிறந்தேன். என் 18-ஆவது வயதிலே மெட்ரிகுலேசன் பரிட்சைக்கு போகும் தறுவாயில் என் தந்தையை இழந்தேன்.   1908-ஆவது ஆண்டில் சென்னையில் மணம் புரிந்து கொண்டு, எப்.ஏ. பீ.ஏ. பரிட்சைகளில் தேறினேன். தமிழில் மதுரைத் தமிழ்ச் சங்கப் […]

Read More

இறை மன்னிப்பு நிறைந்த இனிய ரமளான்

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாகுக! அவன் அருளாளன், அன்புடையோன். அவன் மனித இனத்தை படைப்பினங்களிலேயே மிகச்சிறந்த உன்னத படைப்பாக படைத்ததுடன் அம்மனிதர்களுக்கு அளப்பரிய அருள்வளங்களை அள்ளி வழங்கியிருக்கிறான். அதில் ஒன்று தான் தன் அடியார்களுக்கு நானே கூலி வழங்குவேன் என்று அல்லாஹ்வே நம்மிடத்தில் நேரிடையாக பேசுகிறானே அப்பேர்ப்பட்ட அருள்வளங்களும், இறைமன்னிப்பும் நிறைந்த புனித ரமளான் மாதம் தான் இது. இம்மாதத்தில் இறைவனுக்காகவே நோன்பிருந்து அதில் கேட்கப்படும் தன்னுடைய தேவைகளை இறைவனே நேரிடையாக நிறைவேற்றித் தருகிறான். இதில் […]

Read More

இலட்சிய வாழ்விற்கு இஸ்லாமிய இலக்கியம்! ஏ.ஸி. அகார் முஹம்மத்

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு கடந்த மே மாதம் 20,21,22, ஆம் திகதிகளில் மலேசியாவில் நடைபெற்றது. அதில் விஷேட பேச்சாளராகக் கலந்து கொண்ட இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் ‘இலட்சிய வாழ்வுக்கு இஸ்லாமிய இலக்கியம்’ எனும் கருப்பொருளில் உரை நிகழ்த்தினார். நேரத்தைக் கருத்திற் கொண்டு அங்கு சுருக்கமாக நிகழ்த்தப்பட்ட உரையின் முழு வடிவத்தை sheikhagar.org வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். இந்த மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்தி எனது உரையை அமைத்துக் கொள்ள […]

Read More

தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்கு

  ( கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி )   முன்னுரை : தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம்களின் பங்கா …. ? என்று புருவங்களை உயர்த்துவோரும் உண்டு ! தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்களின் பங்கு கொஞ்ச நஞ்சமல்ல ; நிறையவே இருக்கிறது ! அது பற்றிய தகவல்களை, தடயங்களைப் புலப்படுத்தவே இக்கட்டுரை. முஸ்லிம்கள் தமிழர்களா … ? முஸ்லிம்கள் தமிழர்களா … ? என்ற கேள்வி கேட்போரும், கேட்க நினைப்போரும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்கள் அரபி, […]

Read More