இன்ஷா அல்லாஹ் நிச்சயம் சமுதாயத்தில் மாற்றம் வரும்

அஸ்ஸலாமு அலைக்கும் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாலனுமாகிய ஏக வல்லோன் அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன். இன்று முஸ்லிம் சமுதாயம் அடைந்து கொண்டிருக்கும் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் கண்கூடாகக் காணும் போது,இதயத்தில் ஈமானை சுமந்திருக்கும் ஒவ்வோர் இஸ்லாமியனுக்கும் குருதியில் உஷ்ணம் தானாகவே ஏறிவிடும்.இந்த சமுதாயத்தை சீர்கெடுக்க வேண்டும் என்பதற்காக பல நூற்றாண்டுகளாக எதிரிகள் தீட்டிய சதிக்கு இந்த  நூற்றாண்டில் நாம் பலியாகிக்  கொண்டிருக்கிறோம்,என்பதை நினைக்கும் போது மனம் வேதனையில் துடிக்கிறது. ஆம் மார்க்கத்தை முறையாக புகட்டி வளர்க்காததினால் எதிரியின் […]

Read More

சரித்திரம் பேசுகிறது : இஸ்லாமியக் கம்பர்

நறுமணப் பொருளை விரும்பி வாங்கும் பழக்கமுள்ள எட்டையபுரம் மன்னர் வெங்கடேச பூபதி கல்வியிலும் ஒழுக்கத்திலும் மெய்ஞானத்திலும் உயர்ந்து விளங்கிய நறுமணப் பொருள் வணிகரான செய்கு முகம்மது அலியாரை எட்டையபுரத்திலேயே தங்கும்படிச் செய்தார். இவ்வேளையில் அவருக்கு அரசவைக் களப்புலவர் செந்தமிழ்ச் செல்வர் கடிகை முத்துப்புலவரின் நட்பும் கிட்டியது. ஆதலால், முகம்மது அலியாரின் தவப்புதல்வர் உமறு தமிழ்மேதை கடிகை முத்துப்புலவரிடம் தமிழ்ப் பாடங்கேட்டுக் கற்பன கற்று, கேட்பன கேட்டுப் புலமையில் சிறந்து வளரலானார். பின்னர் உமறின் அருட்திறத்தையும், கவிதையாற்றலையும், உள்ள […]

Read More

விதவை

                                   N. ஹஜ் முகம்மது ஸலாஹி. வாடிட தயாராக இருக்கும் மலர்களுக்கு தண்ணீர் ஊற்றி   மறுவாழ்வு கொடுக்கிறது       இந்த சமூகம். உயிரிழக்க தயாராக இருக்கும் தாவரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி    மறுவாழ்வு கொடுக்கிறது        இந்த சமூகம். பசியால் துடித்து மயங்கும் ஜீவன்களுக்கு உணவூட்டி மறுவாழ்வு கொடுக்கிறது      இந்த சமூகம். இயங்க தயங்கிக் கொண்டிருக்கும்  வாகனங்களை சரி செய்து  மறுவாழ்வு கொடுக்கிறது      இந்த சமூகம். மூலையிலே முடங்கி கிடக்கும் இயந்திரங்களை செப்பனிட்டு   […]

Read More

ஸஃ பர்

கயத்தாறு – அல்ஹாஜ் ச. கா. அமீர்பாட்சா ஸஃபர் மாதம் இஸ்லாமிய ஆண்டின் இரண்டாவது மாதமாகும். இந்த மாதத்தை பீடையுடைய மாதம், கழிசடை மாதம், நல்ல காரியங்கள் செய்யக் கூடாத மாதம் என்ற மெளட்டீக எண்ணம் தமிழ் நாட்டில் நீண்ட காலமாக நிலவி வந்தது. ஆனால் தற்பொழுது நாடெங்கிலும் அதிகமான அரபுக் கல்லூரிகள், அதிலிருந்து கல்வி அறிவு பெற்று வெளிவந்து தீன் சுடர் பரப்பும் ஆலிம் பெருந்தகைகளின் அளப்பரிய முயற்சியால் ‘பீடை பிடித்த மாதம்’ இன்று ‘பீடுடைய […]

Read More

மனவளம் மிகுந்த வள்ளல் ! எம். எஸ். முஹம்மது தம்பி

உண்மைச் சம்பவம் :   மனவளம் மிகுந்த வள்ளல் ! எம். எஸ். முஹம்மது தம்பி   தோட்டத்துக்குள் நுழைந்தது ஒரு நாய். காவலுக்கு உள்ளே நின்றிருந்த கருநிற அடிமையின் கண்களும் கவனித்தன அந் நாயை. ஆனாலும் அதனை விரட்டியடிக்கவில்லை அந்தக் காவலாளி. ஒட்டி உலர்ந்த அதன் வயிறும், வாடிச் சோர்ந்திருந்த முகமும் பார்க்கப் பரிதாபகரமாயிருந்தன.   பாவம்! எத்தனை நாட்களாகப் பசியோடு திரிந்ததோ அது; உண்ண எதையும் தேடி ஒவ்வொரு புறமாக முகர்ந்து கொண்டே அலைந்தது. காவலாளியின் […]

Read More

’தக்வா’ எனும் இறையச்சத்தின் பலன் ——— பேகம்பூரி

    ”மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். மேலும் நீங்கள் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதற்காக, உங்களை பல கிளையினராகவும், பல கோத்திரங்களாகவும் நாம் ஆக்கினோம். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் கண்ணியம் பெற்றவர் தக்வா (இறையச்சம்) உள்ளவர்தாம். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். நன்கு உணர்பவன்.” (49:13)   மக்கா வெற்றிக் கொள்ளப்பட்ட பின் ஹலரத் பிலால் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லும்படி கூறினர்.  அதைக் கண்ட சிலர் […]

Read More

திருக்குறளில் இஸ்லாமியச் சிந்தனைகள்

( தமிழருவி மு.க. அன்வர் பாட்சா, தமிழாசிரியர். SBOA மேனிலைப் பள்ளி. கோவை )   கல்லை ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்தான் கற்கால மனிதன். கை விரல்களால் கணினியில் உலகைக் கொண்டுவந்து வாழ்கின்றான். இக்கால மனிதன். இந்த வளர்ச்சியை என்னவென்று சொல்வது? நாளைய மனிதன் வளர்ச்சியை நினைத்தாலே பிரமிப்பு ஏற்படுகிறது.   இந்த அளவிற்கு மனிதன் வளர்ந்துவிட்டதை நினைத்து நாம் ஒருபுறம் பெருமிதம் அடைந்தாலும், மறுபுறம் மனிதன் தன் நிலையில் தடம்புரள்கின்றானோ என அச்சம் கொள்ளவும் வேண்டியுள்ளது. […]

Read More

இஸ்லாமிய வெளிச்சத்தில் மனித நேயம்

அப்போதே … நிகழ்ந்த அதிசயம் ( இளையான்குடி கவிஞர் ஹிதாயத்துல்லாஹ் ) இஸ்லாமிய வெளிச்சத்தில் மனித நேயம் – 13 ( நர்கிஸில் 2ம் பரிசு பெற்ற கட்டுரை ) கலீபாக்கள் ஆட்சியில் மட்டுமன்றி, அதனைத் தொடர்ந்து வந்த முஸ்லிம்களின் ஆட்சியின் போதும் முஸ்லிம் அல்லாத மக்கள் பயமின்றி சுதந்திரமாக நடந்துகொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.  இதற்கு சில சான்றுகள். சர் தாமஸ் ஆர்னால்ட் என்னும் ஆங்கிலேய வரலாற்றாசிரியர்    The spread of Islam in the world என்னும் […]

Read More

சூரா ஃபாத்திஹா கல்பின் துஆ !

இறைமறையும் அறிவியலும் சூரா ஃபாத்திஹா கல்பின் துஆ ! -பேராசிரியர் ஹாஜி T.A.M. ஹபீப் முஹம்மது சூரா ஃபாத்திஹாவில் (அல்ஹம்து சூராவில்) முதல் மூன்று திருவசனங்களில் அல்லாஹ்வின் அழகிய திருப்பெயர்களான ரப், ரஹ்மான், ரஹீம், மாலிக் ஆகிய அழகிய பெயர்களைக்கொண்டு அல்லாஹ்வைப் புகழ்ந்து பிரார்த்தனை செய்வதைச் சென்ற மாத இதழில் விரிவாகப் பார்த்தோம்.   “அல்லாஹ்வுக்கு அழகிய திருப்பெயர்கள் (அஸ்மாஉல் ஹுஸ்னா) இருக்கின்றன. அவற்றைக்கொண்டே நீங்கள் அவனை அழையுங்கள்… (7:180)   இந்த இதழில் சூரா ஃபாத்திஹாவில் […]

Read More

நக்கீரர் குலாம் காதிறு நாவலர் – ஜே.எம். சாலி

  ‘வித்தியா விசாரிணி’ மலாயா நாட்டின் பினாங்கு நகரில் 1888 இல் வெளிவரத் தொடங்கிய தமிழ் இதழ். மார்க்க வினா – விடைகள், சமய சட்ட திட்டங்கள், நெறி முறைகள், இலக்கிய விளக்கங்கள், உலக நடப்புச் செய்திகளைத் தாங்கி வந்தது அந்த இதழ்.   ‘வித்திய விசாரிணி’க்குப் பல எதிர்ப்புகள். பிற இதழ்களுடன் சர்ச்சைகள், வாக்குவாதங்கள் நடத்த வேண்டிய கட்டாயம் ஆசிரியருக்கு ஏற்பட்டது. குறிப்பாக அன்றைய இலங்கை இதழான ‘முஸ்லிம் நேசன்’ கண்டனக் குரல் தொடுத்து வந்தது. […]

Read More