தலைகீழ் மாற்றங்கள்

தலைகீழ் மாற்றங்கள் இப்போதெல்லாம்…. இரவுகளைவிட பகலில்தான் பயமாயிருக்கின்றது! எதிரிகளை விட நண்பர்கள்தான் நம்மை அழவைக்கிறார்கள் கடலைவிட குளங்களே ஆழமாக உள்ளது கோவிலை விட உண்டியலுக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது ஒரிஜினலை விட ஒப்பனைகளே மேடையேற்றப்படுகின்றன விரல்களை விட்டுவிட்டு நகங்களுக்கே வர்ணம் பூசுகிறோம். வெற்றியை கொடுத்தவனைவிட பெற்றவனே போற்றப்படுகிறான் ஜனநாயகத்தில்…… A.R. Mohamed Sadiq VawaladiMob: 050-1570067 ( U.A.E ) E-mail : armohamedsadiq@gmail.com

Read More

பசுமை

இராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தில் 17411 அன்று ‘பசுமை’ என்ற தலைப்பில் வாசித்த கவிதை (பச்சை சட்டை போட்டவனாய், பச்சை பேனா வைத்துக் கொண்டு, பச்சை நிறப் பாட்டிலில் தண்ணீரோடு மேடை ஏறுகிறேன்) பசுமை சூரியத் தேரின் ஏழ் நிறக் குதிரைகளில் பச்சைக் குதிரை நான். ஈர நிலத்தில் ஊன்றும் விதைகள் முளைக்கும் போதே பிறக்கும் நிறம் நான் புதிதாய்ப் பிறக்கும் ஒவ்வொரு பச்சைக் குழந்தையும் நான் மேகப் பஞ்சிலிருந்து மழை நூல் இறங்க ஏர்த் தறி கொண்டு உழவன் […]

Read More

ஜனநாயகம்

ஜனநியாயமே ஜனநாயகம். மக்களின் நல் சிந்தனை,  ஆக்கமே ஜனநாயகம். மக்கள் பெற்றிடும் நன்நல, சிறப்பே ஜனநாயகம். மக்களின் உறிமை, உடமை, பாதுகாப்பே ஜனநாயகம். மக்களுக்காய், மக்களால் ஆளும் ஆட்சியே ஜனநாயகம்.-ஆனால் நாம் இன்று காண்கின்றோம், ஜன அநியாயம், அட்டூழியம். மனிதன் வகுத்த ஜனநாயகத்தை, பறித்ததோ பணநாயகம். மனிதனிடம் இல்லை ஜனநாயகம் கூடியுண்ணும் காக்கைகளிடம் கண்டோம் ஜனநாயகம். அன்று சர்வாதிகாரத்தில், கண்டோம் ஜனநாயகம். இன்றோ ஜனநாயகத்தில், காண்கின்றோம் சர்வாதிகாரம். மதங்களை மோத விட்டு, குளிர் காய்கின்ற அரசியல், அதனில் […]

Read More

முயன்றால் வெல்லலாம்.​.!!!

கல்லினை உளியால் நீக்கி             கவின்சிலைப் படைக்கும் சிற்பி சொல்லினைச் சீராய்க் கோர்க்கும்             சொல்வனம்  புலவன்  யாப்பில் நெல்லினை  விதைத்து  ஆவல்             நெருங்கிடக் காக்கும் வேளாண் வில்லென வளைந்து  நெற்றி              வியர்த்திட உழைக்கும் போழ்தும் வல்லமை முயற்சி தந்த            வழிகளின் துணிவு என்போம்                துயரமாம் நோயில் வீழ்ந்துத்             துடித்திடும் எவர்க்கும் மிக்க நயத்தகு வார்தை மூலம்            நலம்பெற வாழ்த்திப் பேசு உயர்ந்திடப் போகும் தூரம்           […]

Read More

மவுனம் களைந்தால்.​……….​…!!!

மா, மா, காய் (அரையடிக்கு) வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்     மொட்டின் மவுனம் வாசனையாம்               மொழியின் மவுனம் வார்த்தையாம் கொட்டித் தீர்க்கும்  மழையுந்தான்               கூடும் முகிலின் மவுனந்தான் தட்டிக் கேட்கும் புரட்சிகூட              தங்கும் மவுன வெளிப்பாடே மட்டில் பேரா பத்துகளும்              மண்ணின் மவுனச் சீற்றமேயாம்         அச்ச மூட்டி இறைவனுந்தான்          அதிகம் மவுனம் காத்தாலும் எச்ச ரிக்கை மீறும் மனிதனுக்கு          எதுவு […]

Read More

கனவு காணுங்கள்

கற்பனைத் தானே வாழ்வினைக் காட்ட             கருவுடன் எண்ணமாய் வார்க்கும் அற்புதச் செயல்கள் விளைந்திட வைக்கும்            அனைத்திலும் கற்பனைப் பூக்கும் நற்பலன் கிட்ட எதிர்வரும் காலம்            நம்பியேத் துணிவுடன் செல்லும் பற்பல கடமை யாவுமே எண்ணப்            பயனென உறுதியாய்ச் சொல்லும்     கனவெனும் கணவன் மனமெனும் மனைவிக்           கலந்திடும் போழ்தினில் “எண்ணம்” நனவெனும் வாழ்வுத் தொட்டிலில் உதிக்கும்           நல்லதோர் சிசுவினின் வண்ணம் தினமுமே யுண்ணு முணவிலும் நேர்த்தித்          […]

Read More

எல்லோரையும் ஈர்த்திட ……….

எல்லோரையும் ஈர்த்திட; வல்லமை வார்த்திட வழிகளைக் கோர்த்திட்​டேன் இப்பாடலில்​…. உடையிலே நேர்த்தியைக் கடைபிடி; எவருமே                உதவியைக் கேட்டால் “ஆமாம்” தடையிலா மறுமொழிக் கூறிடு; உன்னிடம்              தகுதிகள் நிரம்ப உண்டு விடைதரும் பாங்கிலே உன்னிடம் எவருமே             விரைவிலே நட்பு கொள்வர் நடைபெறும் நிகழ்வினை மறைத்திடா உறுதியில்             நம்பிடும் பண்பு வேண்டும்     உன்னிடம் நல்லவை வந்திடும் பொழுதினில்           உளமுடன் பிறர்க்கு நாடு தன்னிடம் வென்றிடும் திறன்களு முண்டெனத்          தகுதியை […]

Read More

உலகக் கோப்பை வென்ற நாம்; ஊழல் குப்பையையு​ம் விரட்டுவோம் !

காந்தியுடை(ய) நாண யத்தை             காற்றிலே விட்ட கட்சி(கள்) காந்தியையும் நாண யத்தில்           கச்சித மாக அச்சில் காந்திமகான் சொல்லிச் செய்துக்            காட்டிய சத்யப் போரில் காந்தியவா(தி) அன்னா பாரீர்           களத்திலே உதவ வாரீர் கண்ணாகப் போற்றும் நாட்டில்                    களவுகள் விரட்ட வேண்டி புண்ணாக வளரும் ஊழல்                   புறப்படு மிடத்தில் தோண்டி மண்ணோடுப் புதைக்கச் சொன்னா(ரே)                   மக்களைத் திரட்டி அன்னா(ஹஸாரே) உண்ணாத அறப்போர் சாட்சி                     உடன்பட வைத்த […]

Read More

காந்தி

காந்தியுடை(ய) நாண யத்தை             காற்றிலே விட்ட கட்சி(கள்) காந்தியையும் நாண யத்தில்           கச்சித மாக அச்சில் காந்திமகான் சொல்லிச் செய்துக்            காட்டிய சத்யப் போரில் காந்தியவா(தி) அன்னா பாரீர்           களத்திலே உதவ வாரீர் கண்ணாகப் போற்றும் நாட்டில்                    களவுகள் விரட்ட வேண்டி புண்ணாக வளரும் ஊழல்                   புறப்படு மிடத்தில் தோண்டி மண்ணோடுப் புதைக்கச் சொன்னா(ரே)                   மக்களைத் திரட்டி அன்னா(ஹஸாரே) உண்ணாத அறப்போர் சாட்சி                     உடன்பட வைத்த […]

Read More

ஜப்பானில் சுனாமி

மார்ச் 11 2011– ஜப்பானில் சுனாமி April 11, 2011 நிப்பான் (ஜப்பான்) என்றால் சூரியன் உதிக்கும் நாடு என்று பொருள் அன்று மட்டும் ஏனோ அஸ்தமனம் நிகழ்ந்தது   சூரியன் உதிக்கும் நாட்டில் அன்று சுனாமி உதித்தது தேசத்தை சகட்டுமேனிக்கு மிதித்தது.  மார்ச் 11 2011 – ஒரு தேசம் சேதம் ஆனது கண்ணீர் மட்டுமே மீதமானது   கடலில் உப்பு அதிகம் என்பதற்காக இப்படியா உணர்ச்சிவசப்படுவது  எங்கள் தேசத்து ஒரு சில அரசியல்வாதிகள் போல் […]

Read More