தோல்வியும்! வெற்றியும்!

தோல்வியும்! வெற்றியும்! தோல்வி என்பது      காலை பனித்துளி சூரியன் வந்தால்      மறைந்து போகும் மாயைத்துளி!   வெற்றி என்பது       நல்ல மழைத்துளி சூரியன் வெப்பத்தால்       கருவாகிய மேகத்தின் உயிர்த்துளி!                –  சேக் முகமது அலி — Sheik Mohamed Ali General Manager Aaliya Health Foundation L.L.C P.O.Box: 4749 Ajman. U.A.E

Read More

நானும் கவிதையும்

நானும் கவிதையும்   கவிதை அழைத்ததால் எழுதி வந்தேன் கவிதை – கேட்டதால் சொல்ல  வந்தேன் கவிதை என் தமிழ்த்தேன் கவிதை – சொல்லி உனை அழைத்தேன் கவிதை கேட்பாய் என நினைத்தேன் கவிதை – நெஞ்சில் எனை விதைத்தேன் கவிதை உன்னில் மரமென முளைத்தேன் கவிதை – அழைத்ததும் வானில் மிதந்தேன் கவிதை பறவை என்று நினைத்தேன் கவிதை – விழியில் சிக்காமல் பறந்தேன் கவிதை மழையாய் பொழிய நினைத்தேன் கவிதை – தென்றலாய் உன்னை […]

Read More

உனக்கென்ன மனக் கவலை?

”முதுவைக் கவிஞர்” அல்ஹாஜ் உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ முற்காலம் தற்காலம் பிற்காலம் என்கின்ற முக்கால வாழ்வுநிலை வரலாறு கூறுகிற அற்புதமாம் குர் ஆனே  உன்கையில் இருக்கையிலே அகிலத்தின் வாழ்வினிலே உனக்கென்ன மனக்கவலை?   கால்பதிக்கும் எத்துறையும் கலங்காமல் நீதியுடன் கண்ணியமாய் வழிநடந்து புண்ணியமாய் ஆவதற்கு சால்மிகுந்த சங்கைநபி  வாழ்வுமுறை உனக்கிருக்க சாதனைகள் படைப்பதற்கு உனக்கென்ன மனக்கவலை?   பொற்காலம் படைக்கின்ற வாழ்வுகளும் வழிமுறையும் புகழ்மிக்க அறிவுகளும் ஆன்மீக நெறிமுறையும் கற்கண்டுச் சுவைபோன்ற பாடங்களும் படிப்பினையும் கருணை […]

Read More

வெற்றியின் இரகசியம்

வெற்றியின் இரகசியம் ஆயிரம் அடிகள் தோண்டிய போதும் அனுலும் வெப்பமும் பாலையில் பொங்கும் ! தூயவர் இஸ்மாயீல் ( அலை ) பிஞ்சுப் பாதம் தோண்டிய ‘ஜம்ஜம்’ அதிசயம் அன்றோ ? கானல் நீரைக் கண்டதும் ஹாஜரா ( அலை ) கலங்கி ஓடிய சோதனைக் காண்டம் வீணாய் இல்லை ! விளைந்தது சரித்திரம் ! வேதனை, சோதனை வெற்றியின் (இ)ரகசிய்ம் ! பஞ்சை மிஞ்சும் பிஞ்சுப் பாதம் பறித்தது ஒரு சாண் ஆழமும் இல்லை ! […]

Read More

நிலவு…

நிலவு…   நீயின்றி நானேது? நிஜமின்றி நிழலேது? இறந்த காலம் இறந்தே போகட்டும்! எதிர் காலம் வரும்போது வரட்டும்! நிகழ் காலம் தன்னோடு, கை கோர்த்து உன்னோடு, நாம் நடக்கும் பாதை எங்கும், பூ தூவும் வானமதில், வெண்ணிலவு நீ என்றேன்! ‘பெண்ணிலவு நான்’ என்றாய்! உண்மையோ! பொய்யோ! என்னிலவு நீதானடி…

Read More

கோடுகள்

கோடுகள் நாம் கோடு கிழிப்பவர்கள் கோடுகளால் கிழிக்கப்படுகிறவர்கள் சில கோடுகளை நமக்காகப் பிறர் கிழிக்கிறார்கள் சில கோடுகளை நமக்காக நாமே கிழித்துக்கொள்கிறோம் நாம் கோடுகளால் வரையப்படுகிறோம் கோடுகளால் அழிக்கப்படுகிறோம் நாம் கோடுகளின் அடிமைகள் நாம் கோடுகளாலேயே அறியப்படுகிறோம் ஓவ்வொருவரைச் சுற்றியும் இருக்கிறது இலக்குவனக் கோடு இராவணன் மட்டுமல்ல இராமனும் இருக்கிறான் கோடுக்கு அப்பால் நாம் பாதுகாப்புக்காகக் கோடுகள் வரைகிறோம் கோடுக்கு உள்ளேயும் வருகிறது ஆபத்து நாம் கோடு கிழித்து விளையாடுகிறோம் கோடுகள் நம் ரேகைகள் ஆகிவிடுகின்றன நாம் […]

Read More

ஊடகம்

ஊடகம் பேசிடும் தன்மை               ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு               நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை              பார்த்திடும் தோரனை வெம்மை வேடமேப் போடுதல் என்றும்              வேகமாய்த் தீர்த்திட நின்று தீவிர வாதியாய்க் காட்டி           தீர்த்திட ஏனிதில் போட்டி? மேவிடும் வேற்றுமை யாரால்?           மேதினி கூறிட வாராய்! பாவிகள் காட்டிடும் வஞ்சம்          பாலினு லூற்றிடும் நஞ்சாம் தாவிடும் ஓரினம் நம்மை          தாழ்ந்திடக் கூவுதல் […]

Read More

முதியோர் இல்லம்

அழுது புலம்பும் பிரசவத்தில்; அரை மயக்கத்திலும் உன் அழும் குரலுக்கு ஆனந்தமாய் நான் அன்று! பாலுக்கு ஏங்கி உன் சிவந்த இதழ்கள் இரண்டும் பிதிங்கியதைக் கண்டு; மனம் பதுங்கியக் காலம் அன்று! பள்ளிக்கு முரண்டுப் பிடிக்கும் உன் பாதம் இரண்டையும் பக்குவமாய் திருப்பியக் காலம் அன்று! நீ மெத்தப் படிக்க ஒத்த வீட்டையும் விற்றுத் தீர்த்து; உன் படிப்பிற்குத் தீணியானது அன்று! தனியாய் நடைப்போடும் உனக்குத் துணைத்தேடி; விழி சிலிர்க்கும் இணையை உன் கரம் சேர்த்தேன் அன்று! […]

Read More

நான் மட்டும் தனியாக..

பட்டம் வாங்கியதும்சுற்றித் திறிந்தேன் இறக்கைக்கட்டி! அடங்காப் பிள்ளையாகஇருந்தாலும் அம்மாவுக்குசெல்லமாக! கடவுச் சீட்டு கையில் வந்ததுகனவுகள் கலைந்ததுகடமைகள் பெருத்தது! திட்டித் தீர்க்கும் தந்தையோ தட்டிக்கொடுத்தார்! கொஞ்சும் அம்மாவோ குழந்தையானாள்அழுவதில் மட்டும்! வம்புச் செய்யும்தம்பியோ தேம்பி அழுதான்! அடிக்கடி அடிக்கும்அக்காவோ முத்தமிட்டால்;நெஞ்சத்தை தொட்டுவிட்டாள்! என்றுமே அழுததில்லை அன்று நான் கண்டதுபாசம் எனை வென்றது; தடுக்க முடியாமல்தாரைத் தாரையாககண்ணீர் என்னைக் கடந்தது! ஒட்டி உறவாடிய நண்பர்களோ கட்டித்தழுவி சென்றார்கள்! இப்போதுநான் மட்டும் தனியாகஎன்னைப் போல் இருப்பவர்கள்இங்கே துணையாக! வருமானத்திற்காகவளைகுடாவில் செரிமாணமாகாத நினைவுகளுடன்; […]

Read More

உனக்கென்ன மனக் கவலை?

”முதுவைக் கவிஞர்” அல்ஹாஜ் உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ முற்காலம் தற்காலம் பிற்காலம் என்கின்ற முக்கால வாழ்வுநிலை வரலாறு கூறுகிற அற்புதமாம் குர் ஆனே  உன்கையில் இருக்கையிலே அகிலத்தின் வாழ்வினிலே உனக்கென்ன மனக்கவலை?   கால்பதிக்கும் எத்துறையும் கலங்காமல் நீதியுடன் கண்ணியமாய் வழிநடந்து புண்ணியமாய் ஆவதற்கு சால்மிகுந்த சங்கைநபி  வாழ்வுமுறை உனக்கிருக்க சாதனைகள் படைப்பதற்கு உனக்கென்ன மனக்கவலை?   பொற்காலம் படைக்கின்ற வாழ்வுகளும் வழிமுறையும் புகழ்மிக்க அறிவுகளும் ஆன்மீக நெறிமுறையும் கற்கண்டுச் சுவைபோன்ற பாடங்களும் படிப்பினையும் கருணை […]

Read More