பாதைகளும் பயணங்களும்

அன்னையின் கருவறையில் ஜனித்து,  அவனிக்கு வருகின்ற பயணம்! தாயின் அன்பான அரவனைப்பில், மழழை துள்ளலாய் பயணம்! பெற்றோர் காட்டும் பாதையில், பேணி செல்லுகின்ற பயணம்! ஆசானின் அறிவு பாதையில், கல்வி தேடி பயணம்! ஆன்மீக பேரருள் பாதையில், இறையருள் நாடி பயணம்! இளமை எழுச்சி பாதையில், தடுமற்றமில்லா பயணம்! வாழ்வாதார பாதையில், பணி தேடி பயணம்! இல்லற இணைப்பு பாதையில், நல்லற மண வாழ்வு பயணம்! நன்னெறி உறவு பாதையில், நல் சந்ததி நாடி பயணம்! பாச […]

Read More

அமலால் நிறையும் ரமலான்

காய், காய், காய், மா (அரையடிக்கு) என்னும் வாய்பாட்டில் அமையும்   எண்சீர்  கழிநெடிலடி விருத்தம்       பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம்          படைத்தவனின் அருளதிகம் பொழிகின்ற மாதம் கசிந்துருகித் துதித்திட்டால் ஈடேற்றும் மாதம்           கறையான பாவங்கள் கரைந்தோடும் மாதம் பசித்தவரின் பட்டினியை யுணர்த்தவ்ரும் மாதம்           பயபக்தி யாதென்றுச் சோதிக்கும் மாதம் வசிக்கின்ற ஷைத்தானை  விலங்கிலிடும் மாதம்           வறியவர்க்கு ஈந்திடவே “ஃபித்ராவின்” மாதம்     குடலுக்கு மோய்வாக்கி […]

Read More

ரயில் பயணங்களில்

அசைந்து நகரும் ரயில்பெட்டிகளுக்கு அசையும் எல்லாக் கைகளிலும் அப்பிக்கொள்கிறது பிரிவு. பதிந்து வைத்த இருக்கையெனினும் பரபரப்பாய்த் தேடியலைந்து கண்டடையும்போது பரவும் நிம்மதி. நடன லயத்தில் நகரும் பெட்டியில் இடறி நடப்பவர்கள் இடைவிடாது விதைக்கிறார்கள் மன்னிப்பை. காலை ரயிலில் சாப்பிடுபவர்கள் அருகில் இருப்பவர்களுக்கு ஊட்டுகிறார்கள் பசியை எல்லாப் பயணங்களோடும் ஓடும் ரயில் பெட்டிகளுக்கு உள்ளேயே குறுக்கும் நெடுக்குமாய் ஓடும் ஏதாவதொரு குழந்தை மறக்கவைக்கிறது வயதை. – ஈரோடு கதிர்

Read More

நேசம்

வெளிநாட்டில் வசிக்கும் முறைப்பையன் வாங்கியனுப்பிய பரிசை நெஞ்சோடு பத்திரப்படுத்தும் பேத்தியை பாசம்பொங்க முத்தமிடுகிறாள் பாட்டி அவளுக்கு இவள் பெயர் அவனுக்கும் அவர் பெயர். H.FAKHRUDEEN பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்) +966 050 7891953 / 050 1207670 www.ezuthovian.blogspot.com www.mypno.com

Read More

நினைவுகள்

விவாகரத்து செய்தபின்னர் எதிர்பாராமல் ஒருநாள் வீதியில் எதிர்பட்ட முன்னாள் கணவனை விட்டும் வேகமாகப்பார்வையைத் திருப்புகிறாள் மனைவி. பார்க்கிறாளா வெனபாராமல் பார்த்துக்கொண்டேயிருக்கிறான் அவன் இருவரின் உலகத்திலும் இப்போதைக்கு யாரும் இல்லை. H.FAKHRUDEEN பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்) +966 050 7891953 / 050 1207670 www.ezuthovian.blogspot.com www.mypno.com

Read More

காமராசர்

காமராசரே பிள்ளைகளை பிறப்பித்து தாயானவர்கள் பூமியில் உண்டு நீ மட்டும்தான் பள்ளிகளை பிறப்பித்து தாயும் ஆனவன். நீ அதிகம் படிக்காத பாமரன் தான். ஆனாலும் பாரதியின் பாடலாகாவே வாழ்ந்து காட்டியவன் வயிற்ற்குக்கு சோறும் பயிற்றிட கல்வியும் தந்து பாரதியின் பாடலாகாவே வாழ்ந்து காட்டியவன்   ஒரு கர்ம வீரனை பெறப் போகிறோம் என்ற கர்வத்திற்காகவோ என்னவோ நீ பிறந்த ஊர் நீ பிறப்பதற்கு முன்னதாகவே தன் பெயருடன் விருதை தன் பெயருக்கு முன்னால் இணைத்துக் கொண்டது எங்கள் […]

Read More

பிரசவ வலி

இணையதளத்தில் கண்ட கவிதை!! பரிகாசங்களுக்கு நடுவேத் திணறி; புன்னகையில் பூரித்தப்போதும்; சிலிர்த்து நின்ற  என்மயிற்கால்களால்; நிற்கத் துணிவிழந்த என் பாதங்கள் பிரசவத்தை எண்ணி! வலியெடுத்த என் இடுப்பினால் விழிப்பிதிங்கி நான் சரிய; உறவுகள் மருத்துவமனையில் காவல்காரர்களாய்! முள் குத்தினாலும் திட்டித் தீர்க்கும் என் வாய்; துடித்த வலியால் கதறினாலும்; மனம் வரவில்லை; கருவில் ஒளிந்திருக்கும் உன்னைக் கரித்துக்கொட்ட! விழிகள் இருண்டு; உதடுகள் வறண்டு; உள்ளம் மிரண்டு; குரலுக்குள் மிச்சம் வைத்தஒசையையும் கொட்டித்தீர்த்து; விரல்கள் வியர்வையில் நனையவழிந்தோடும் கண்ணீர்கள்காதோடு […]

Read More

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி உலக மொழிகளில் எழுதப்பெற்ற உயர்கவிதைகளின் தொகுப்பு

அருளன்பு பண்பில் நிகரற்ற உந்தன் திருப்பெயர் கொண்டு துவக்குகிறோம் அல்லாஹ்!     “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி  உலக மொழிகளில் எழுதப்பெற்ற உயர்கவிதைகளின் தொகுப்பு”   பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மதுல்லாஹ்).   அல்லாஹ்வின் இறுதித்தூதர் – அகிலத்தின் அருட்கொடை – அனைத்துலக  மக்களுக்கும் அழகான முன்மாதிரி – நம் இருலோக இரட்சகர் -ஈமான் கொண்ட இஸ்லாமியர் அனைவருக்கும் உயிருக்கும் மேலான – முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி பாடிப்பாடிப் பரவசம் […]

Read More

தொழு…!

தொழு…! கதை-கவிதை – கவிதை கரு வறை தொடங்கி கல் லறை அடங்கி முடி வுறும் நாள்வரை… இறைவனைத் தொழு! எத்தனை அழகு என்னென்ன நிகழ்வு எல்லாம் உனக்களித்த ஏகனைத் தொழு! காணவும் களிக்கவும் கண்களால் ரசிக்கவும் பார்வையைத் தந்தவனை நேர்மையாய்த் தொழு! கேட்கவும் கிறங்கவும் கேட்டதை உணரவும் ஒலி புரியச் செவி தந்த வலியோனைத் தொழு! சாப்பிடவும் கூப்பிடவும் சண்டையின்றிப் பேசிடவும் நாவும் நல் வாயும் தந்த நாயன் தனைத் தொழு! சுவாசிக்கும் நாசியாகவும் முகர்ந்தறிய […]

Read More

பெண்ணே நீ!

பெண்ணே நீ!   பெண்ணே உனை                      கவிதை என்பார்                      நிலா என்பார்                      நதி என்பார்                      பூமி என்பார்                      மலர் என்பார்                      மயில் என்பார்                      மலை என்பார்                      அன்னம் என்பார்                      புறா என்பார்   உயிரற்றதையும், ஆறறிவில் குறைந்ததையும் உவமானமாகக் காட்டி கவிதைகளில் போற்றுவர் கவிஞர்கள் உன்னை பெண்ணென்று போற்றுவதில்லை நான் சொல்கிறேன் உயிருள்ள பெண்ணே நீ பெண்தான்!                       – சேக் முகமது அலி […]

Read More