தெருக்களின் பாகுபாடு உருக்குலைக்கும் ஒற்றுமைக் கூடு

ஊரை இணைக்கும் கோடுகளே ஊரைப் பிரிக்கும் கேடுகளானது   வேற்றுமைத் தீயால் வெந்து மடிகின்றோம் வாஞ்சை வாளியால் அன்பு நீரெடுத்து வாரி அணைப்போம் சிரட்டை அளவேனும் சிரத்தை நினைப்போம்   கூட்டமைப்பு என்னும் கூடாரம் அமைத்தோம் ஓட்டுக்காகப் பிளக்கும் வேட்டமைப்புகளை வெளியில் நிறுத்துவோம்   உளத்தூய்மைப் பற்றினால் உருவாகும் ஒற்றுமை கத்தியில் நட்ப்பது போல் பத்திரமாகவும்; கண்ணாடிப் பாத்திரமாகவும் பக்குவமாய்க் கோத்திரப் பெருமையின்றி பழகுவோம்   எதிர்மறை எண்ணங்களின் புதிர்களால் புறம்பேசுவதைப் புறந்தள்ளுவோம்   அண்டைத் தெருவோடு […]

Read More

துளிப்பாக்​கள் (ஹைக்கூ)

சுமந்த போழ்தும் சும்ந்த பின்னும் சுமப்பது – தாயின் தியாகம்   ஊருக்கு விருந்து வைக்கவும் ஊரையே விருந்தாக்கவும்- ஒற்றைத் தீக்குச்சி   மானம் காப்பதும் மானமிழந்தால் கோர்ப்பதும் – ஒன்றே முடிச்சு   மணந்தால் மறப்பதும் மணக்காவிடில் மறக்காததும்- அதே காதல்   உணவின் முடிவு மறுவுலகின் துவக்கம் – அதுவே மரணம்   ஊரை இணைப்பதும் ஊரைப் பிரிப்பதும் – அதே தெருக்கள்   பிறரைக் காப்பதால் தன்னைக் காப்பது – அதே தர்மம் […]

Read More

ஹஜ் – மனித வாழ்க்கையின் சம்பூரணம்

  ஒரு கருப்பைக்கு நன்றி சொல்லச் செல்லும் தொப்பூள் கொடிகளின் பயணமே … ஹஜ் ! கடலைத்தேடி நதிகள் தான் நடந்து போகும் ! ஆனால் … மனிதக் கடலே திரண்டு – புனித மக்காவை துல்ஹஜ் மாதத்தில் காணப் போகிறதே … ! அது தான் ஹஜ் ! மொழிகள் பலவானாலும் முகங்கள் சங்கமிக்கிறதே …! – அந்த முஹப்பத்தான திருநாள் தான் … ஹஜ் பெருநாள் ! அங்கே ஸலாம்கள் ததும்பி வழியும் ! […]

Read More

இவர்தாம் முஹம்மது நபிநாதர்!

இவர்தாம் முஹம்மது நபிநாதர்!-அல்லாஹ் இறுதியில் அனுப்பிய திருத்தூதர்!!   அன்பே இவர்களின் அடிப்படையாம்-தூய          அறிவே இவர்களின் ஆயுதமாம்! பண்புகள் இவர்களின் படைவரிசை-இந்தப்          பாருலகே இவர்கள் சீர்வரிசை!                       (இவர்தாம்…)1.   ஆர்வம் இவர்களின் வாகனமாம்-வந்(து)         அடைந்திடும் துக்கமும் துணைவனென்பார்! சீர்இறை வணக்கமே பேரின்பம்-இவர்கள்         செயலுக்கு ஞானமே மூலதனம்!                      (இவர்தாம்…)2.   பொறுமை  இவர்களின் போர்வையாம்-பெரும்         போராட் டம்தான் பிறவிக்குணம்! உறுதி இவர்களின் நல்லுடைமை -என்றும்         உண்மையே இவர்களின் வழிகாட்டி!                (இவர்தாம்…)3   ஏழ்மை […]

Read More

வெளிச்ச வாசல்

திருமறையின் தோற்றுவாய்” என்று தமிழுலகம் போற்றியுரைக்கும் ஃபாத்திஹா சூராவைப் பற்றி அறிவுலகச் சகோதரர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆவலில் எழுதப்பட்ட ஓர் ஆக்கத்தைக் கீழே அன்புடன் சமர்ப்பிக்கிறேன்:-   வெளிச்ச வாசல்   அளவே இல்லா அருளாளன் நிகரே இல்லா அன்பாளன் நலமே செய்யும் பண்பாளன் நாயன் அல்லாஹ் திருப்பெயரால்…   எல்லாப் புகழும் இறைவனுக்கே! இலங்கும் உலகம் பற்பலவாம் வல்லான் அவனே படைப்பவனாம் வாழச் செய்திடும் ரட்சகனாம்   அளவே இல்லா அருளாளன் நிகரே இல்லா அன்பாளன் நலமே […]

Read More

தெரியாமல் தெரியவரும் கருவூலம் !

திருவுரு வாயிருந்தும் தெரியாமல் தெரியவரும் கருவூல மாகஉள்ளான் ஒருவன்–அவன்தான் கருணையங் கடலான இறைவன்! (திருவுரு…)            1.   அண்டகோ ளங்களெல்லாம் உண்டுபண்ணிக் கொடுத்து,”எனைக் கண்டறிந்து கொள்க”என்பான் ஒருவன்–அவன்தான் அன்புமழை யாய்ப்பொழியும் இறைவன்! (திருவுரு…)  2.   ஆதியின்றி அந்தமின்றி அழியாத பெரும்பொருளாய் நீதிஎன்றும் செலுத்துகிறான் ஒருவன் –அவன்தான் வேதம்”குர் ஆன்”கொடுத்த இறைவன்!   (திருவுரு…)    3.   சூனியத்தி லேயிருந்து சூட்சுமத்தைத் தோற்றுவிக்கும் மாண்புமிகுந்த அல்லாஹ் ஒருவன் –அவன்தான் வேண்டியதெல் லாம்கொடுக்கும் இறைவன்!(திருவுரு) 4.   பற்றிருக்கப் பற்றறுத்து பற்றுக் […]

Read More

தமிழ் உணர்வு

தமிழென் அன்னை! தமிழென் தந்தை! தமிழென்றன் உடன் பிறப்பு! தமிழென் மனைவி! தமிழென் பிள்ளை! தமிழென் நட்புடைத் தோழன்! தமிழென் சுற்றம்! தமிழென் சிற்றூர்! தமிழென் மாமணித் தேசம்! தமிழ்யான் வாழும் எழில்மா ஞாலம்! தமிழே என்னுயிர் மூலம்! . உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனார்

Read More

ரமலான் நோன்பின் மாண்பு !

நோன்பு ! மனசாட்சியால் விதைத்த மனங்களின் விரதம் ! கட்டவிழ்ந்த விட்ட மனத்தை கைப்பிடிக்குள் கொண்டுவரும் நோன்பு ! பசியின் சோகத்தை பணக்காரர்களுக்கும் ருசியாய் பரிமாறி கட்டாயமாக்கிய ரமலான் ! உணவை மட்டும் துறப்பதா நோன்பு ? ஊனாசை உடம்பாசை பேராசை பொருளாசை ஒருசேர ஒத்திவைக்கப்பட்ட மாதம் ! புறம் கோள் பொய் சொல்வதை புறந்தள்ளிய மாதம் ரமலான் ! அறம் அன்பு நேசமதை பறை சாற்றிய ரமலான் ! ஈட்டிய செல்வமதில் இரண்டரை சதவீதம் ஏழைக்கு […]

Read More

நலமெலாம் தரும் சத்தியம்

இஸ்லாம் தான்உயர் தத்துவம்-இதை ஏற்பது தான்முதல் உத்தமம்! நம்பிச் செயல்படல் பத்தியம்-இது நலமெலாம் தருதல் சத்தியம்!   பொறுமையில் நன்கு கலந்து-வாழ்வு பூராவும் இதனை அருந்து! வெறுமை யில்கூட இருந்து-பல வெற்றிகள் தரும்இம் மருந்து!      (இஸ்லாம்…)   பாவம் அனைத்தையும் நீக்கும்-நேர்ப் பாதையில் கொண்டுனைச் சேர்க்கும்! மேவும் புகழினைக் காக்கும்-இந்த மேதினி வியந்து பார்க்கும்!   இஸ்லாம் நிரந்தர அதிசயம்-இதில் எத்தனை மெய்ஞான ரகசியம்! அறிந்தவர் வெல்வது நிச்சயம்-எனும் அனுபவம் சரித்திரப் பரிச்சயம்!   (இஸ்லாம்…)   நடுநிலை […]

Read More

துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் கவிதைச் சங்கமம்

துபாய் : துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் எனும் கவிதைச் சிறப்பிதழ் ‘ஈரம்’ எனும் தலைப்பில் செம்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட இருக்கிறது. கவிதை ஆர்வலர்கள் ‘ஈரம்’ எனும் தலைப்பில் கவிதையினை superstarzia@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்து கவிதைச் சங்கமத்திலும் பங்கேற்கலாம். கவிதைச் சங்கமத்தில் பங்கேற்க இயலாத பிற பகுதிக் கவிஞர்கள் தங்களது கவிதைகளை மின்னஞ்சலில் அனுப்பலாம். நிகழ்விடம் மற்றும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

Read More