ஒரு தாயின் மன்னிப்புக் கடிதம் :

அன்பு மகளே… ‘ஒரு மௌன அழைப்பில்’ உன் ஆதங்கம் கண்டேன் என் சொர்க்கத்துக் கனியே! என்னை மன்னித்து விடு. உன்னை எனது வயிற்றிலேயே கொலை செய்த பாவிதான் நான் ஏன் இந்த முடிவு? உனது அண்ணனை வயிற்றில் சுமந்த நாள் முதல் வேதனை அறியா வயதில் பிரசவ வலியின் வேதனை வேறு அதனால் ஏற்பட்ட கோழைத்தனத்தால் எடுத்த முடிவு அது. “என்னால் தாங்க முடியாத பாரத்தை என் இறைவன் என் மீது சுமத்தமாட்டான்” என்ற மார்க்க ஞானம் […]

Read More

ஆற்றல்

ஆற்றல் இது மனிதனுக்குள், புதைந்துள்ள புதையல் இதனை, முயன்ருழைத்தவர், வெற்றியை ஈட்டுகிறார், முயலாதவர் முடக்கத்தை நாட்டுகிறார். மானிடர் கண்ட இயந்திரமோ… வியக்கின்ற ஆக்கம், அந்த மானிடரிலும், பலர் ஏனோ.. காலத்தை நொந்தார். விரும்பாத விரக்தி, திரும்பாத காலத்தை, கரும்பாக நினைக்காமல், துரும்பாக நினைத்து, அரும்பாகவும் நினைத்தார். முடியலை என்றே, விடியலைக் காணாது, கதியிது என்றும், சதியிது என்றும், விதிபழி சுமத்தி, வீனாகி போனார். இன்னும்.., ஏமாற்ற ஏக்கம், அசமந்த தூக்கம், விகார வீக்கம், விவாத தர்க்கம், விளைவோ […]

Read More

உங்களுக்கு இந்தியா வேண்டுமா ? வேண்டாமா ?

12.2.2012 அன்று சென்னை லயோலா கல்லூரியில் அணுசக்திக்கு எதிரான பெண்கள் போராட்டக்குழு சார்பில் நடைபெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை.  ___________________________  அவன் கொடுப்பதை குடிக்க வேண்டும்,  அவன் தருவதை படிக்க வேண்டும்,  நம் தினச்சாவு கூட – இனி  அணுச்சாவாகவே அமைய வேண்டும்  எனும் அமெரிக்க திமிரின்  ஆதிக்க குறியீடே,  கூடங்குளம் அணு உலை !  போராடும் தமிழகத்தின்  ஒரு பகுதியாக இக்கவியரங்கம்…  அனைவர்க்கும் வணக்கங்கள்.  ***  இடிந்தகரை உணர்ச்சிகள்  ஒரு கவிதைக்குள் அடங்குமா ?  தெக்கத்தி […]

Read More

உனக்காக எப்போது நீ அழப் போகிறாய் ?

உனக்காக எப்போது நீ அழப் போகிறாய் ? மனோயிச்சைகளுக்கு முன்னால் மண்டியிட்டு – நீ பாவங்களுக்கு முன்னால் பலவீனப்பட்டு நிற்கும்போதா ? தவறை கண்ணெதிரே கண்டும் தட்டிக் கேட்க தைரியம் இல்லாதபோதா ? நல்லறங்களின் நன்மை அறியாமல் – அவற்றை நகைப்புக்குரியதாய் நீ பார்க்கும்போதா ? குர்ஆன் ஓதக்கேட்டும் அழுகை வராமல் – கேளிக்கையின் கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக கண்ணீர் விடும்போதா ? அறச்செயல்களில் ஆர்வம் கொள்ளாமல் – அழியப்போகும் அற்ப இன்பத்தை நாடி நீ ஒடும்போதா ? […]

Read More

நெஞ்சுப் பொறுக்குதில்லையே..!!!!

கொஞ்சும் அழகுத் தமிழ்மொழி                 குதறி விடத்தான் கொலைவெறி நஞ்சு கலந்து வருவதை              நன்க றிந்த நிலையினால் நெஞ்சுப் பொறுக்கு    தில்லையே             நேரமைத் திறனு  மின்றியே வஞ்சிக் குமிவர் பிழையினை             வளர விட்டக் கொடுமையே அஞ்சி அஞ்சி வாழ்வதால்           அன்னைத் தமிழும் சாகுமே கெஞ்சிக் கேட்டா லிவர்களின்             கொடுமை யின்னும் கூடுமே பஞ்சில் வைத்தத் தீயினாய்             பாழாய்ப் போகும் தாய்மொழி பிஞ்சு நாவுகள் சொல்லுமே            பிழையாய்த் தமிழைக் […]

Read More

குடியரசு தினம்

குடியரசு தினம்; கோபத்தில் மனம் குடியரசுக் கொண்டாட்டம் வருடந்  தோறும் *****குறைவின்றி விமர்சையுடன் நடந்த போதும் விடியாத இரவினிலே பிறந்த நாட்டில் *****விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப் பாட்டில் முடியாத நிலைமைக்கு வந்த தாலே *****முதலில்லா வியாபாரம் ஊழல் தானே படியாத அரசியலார் போடும் வேசம் ***** பகற்கொள்ளை நடக்குமெங்கள் பார(த) தேசம் புனிதமான ஆன்மீக வாழ்க்கை காணோம் ***** பொய்யுலகி  னாசையிலே மூழ்கிப் போனோம் மனிதமானம் என்னவென்றுத் தெரியாக்   காயம் *****மலையேறிப் போனதிங்கு மனித நேயம் […]

Read More

மனைவி

மஞ்சள் நதிமுகம் அஞ்சிச் சிவந்திட மஞ்சம் விரித்து வைத்தாள் – தனதோர் நெஞ்சைத் திறந்து வைத்தாள் – அந்தப் பிஞ்சு மயில்தனைக் கட்டிப் பிடித்ததும் பிள்ளையைப் போல் குதித்தாள் – சுகமோ கொள்ளை என்றே கொடுத்தாள். சாய்ந்து இரண்டுளம் பாய்ந்து துடிக்கையில் தாலியைச் சாட்சி வைத்தாள் – உனக்கே ஆலிலைக் காட்சி என்றாள் – அவள் சாந்துப் பொட்டில் ஒருமுத்தமிட்டேன் –அதில் நீந்திக் களித்திருந்தாள் – முதல் சாந்தி முடித்திருந்தாள்! கட்டிக் கிடந்திரு கன்னம் வருடிய கைகளைப் […]

Read More

மதுரை பற்றி..

  மதுரை பற்றி.. கவிஞர் வைரமுத்து (1997)   பாண்டியர் குதிரைக் குளம்படியும் – தூள்         பறக்கும் இளைஞர் சிலம்படியும் – மதி தோண்டிய புலவர் சொல்லடியும் – இளந்         தோகைமார்தம் மெல்லடியும்             மயங்கி ஒலித்த மாமதுரை – இது             மாலையில் மல்லிகைப் பூமதுரை! நீண்டு கிடக்கும் வீதிகளும் – வான்         நிமிர்ந்து முட்டும் கோபுரமும் ஆண்ட பரம்பரைச் சின்னங்களும் – தமிழ்         அழுந்தப் பதிந்த சுவடுகளும்             காணக் கிடைக்கும் பழமதுரை – தன்             கட்டுக் கோப்பால் இளமதுரை! மல்லிகை மௌவல் அரவிந்தம் – வாய்         மலரும் கழுநீர் சுரபுன்னை குல்லை வகுளம் குருக்கத்தி – இவை         கொள்ளை அடித்த வையைநதி             நாளும் ஓடிய நதிமதுரை – நீர்             நாட்டிய மாடிய பதிமதுரை தென்னவன் நீதி பிழைத்ததனால்         தெரிந்து மரணம் அழைத்ததனால் கண்ணகி திருகி எறிந்ததனால் – அவள்         கந்தக முலையில் எரிந்ததனால்             நீதிக் கஞ்சிய தொன்மதுரை – இன்று             ஜாதிக் கஞ்சும் தென்மதுரை! […]

Read More

முகங்கள்

முகங்கள் க.து.மு. இக்பால் சோதனையின் மத்தியிலும் உறுதி காட்டும் சோராத மாந்தார்க்குச் சுடர் முகங்கள் வேதனையின் இடையினிலும் புன்னகைக்கும் வீரர்க்கு மங்காத ஒளி முகங்கள் சாதனைகள் பலபுரிந்தும் அடக்கம் பேணும் சான்றோர்க்கு வற்றாத அருள்முகங்கள் போதனைகள் பலநல்கும் பூமி மீது பொறுமையினால் பெருமைபெறும் புகழ் முகங்கள் அடுத்தவரின் நலம்கண்டு மகிழ்ச்சி கொள்ளும் அன்பாளர் திருமுகங்கள் தாமரைகள் அடுத்தவரின் துயர்கொண்டு வாட்டம் கொள்ளும் ஆன்றோரின் பொன்முகங்கள் நீர்த்துறைகள் அடுத்தவரின் இடர்கண்டு சிரித்திருக்கும் அழிவுக்கு வழிதேடும் இருள் முகங்கள் அடுத்தவரை […]

Read More

தலைவாரிப் பூச்சூடி உன்னை…

தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை! சிலைபோல ஏனங்கு நின்றாய் – நீ சிந்தாத கண்ணீரை ஏன் சிந்து கின்றாய்? விலைபோட்டு வாங்கவா முடியும்? – கல்வி வேளைதோ றும்கற்று வருவதால் படியும்! மலைவாழை அல்லவோ கல்வி? – நீ வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி! படியாத பெண்ணா யிருந்தால் – கேலி பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால்! கடிகாரம் ஓடுமுன் ஓடு! – என் கண்ணல்ல? அண்டை வீட்டுப் பெண்களோடு. […]

Read More