படிப்பில் வேண்டும் பிடிப்பு

மூச்சு விடுதல் மட்டு மன்று முயற்சி கூட மனிதமே பேச்சில் கூறு மனைத்தும் விடாமல் பேணிக் காத்தல் மனிதமே பாய்ச்சும் நீரா லுயிரும் பெற்று பயிரும் வளர்தல் போலவும் காய்ச்சும் தங்கம் ஒளிர்தல் போன்றும் கடின வுழைப்பு வெல்லுமே ஊதும் சங்கின் அறிவிப் பால்நம் உறக்கம் களையச் செய்யுமே ஓதும் உன்றன் படிப்பால் செல்வம் ஓங்கி வளரச் செய்யுமே தீதும் நன்றும் பகுத்து முடிவைத் தீர்க்க வுதவும் கல்வியே போது மென்ற நிறுத்தல் குறியைப் போட்டு விடாது […]

Read More

சொர்க்கபுரி அல்ல!

http://jmbatcha.blogspot.com/2012/03/blog-post.html இவன் தன் வீரிய எதிர்காலத்தை வீருகொண்டு அமைக்க முற்படுகையில் முளைக்கவே விடாமல் முழுவதுமாய் எண்ண விதைகளை அரபு நாட்டு ஆசையில்  அணைத்து விடுகிறார்கள்! பள்ளிப்படிப்பை முடிக்கும் முன்பே பாஸ்போர்ட் எடுக்கத் தூண்டி துள்ளித் திரியும் வயதிலேயே அரபுநாட்டை சொல்லிச் சொல்லி தூபமிட்டு அடிமைத்தன எண்ணத்தை கொடுமையாக புகுத்துகின்றனர்! ஏனோ என் சமுதாயம்  வெளிநாட்டு மோகத்தில்  வீணே வீழ்ந்து…!  உண்மை தெரியுமா.. உனக்காக உழைக்கிறான் உடலெல்லாம் வியர்க்கிறான் பாசத்தை நினைக்கிறான் பகலெல்லாம் உழல்கிறான்  பசியாலும் துடிக்கிறான் எங்கே […]

Read More

இறைவனும் குழந்தையும்!

http://jmbatcha.blogspot.com/2012/02/blog-post_25.html இறைவனும் குழந்தையும்! குழந்தைகள் இறைவனின் அருட்கொடை! அவனே நமக்கு அன்பாய் கொடுக்கும் அன்பளிப்பு! எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அருட்சுரப்பு! அவனின் கருணைக்கரங்களால் கற்ப உலகத்தில் காத்தவன் மிகத்தூய்மையின் அப்பழுக்கற்ற‌ பிள்ளையாய் புதிய மனிதப்பிறவியை நம் கரங்களுக்கு அவனே சொந்தமாக்குகிறான்! கற்பக்கோலறையின் இருட்டு வாசத்தில் சுவர்க்க போகம் கொண்டிருந்த மென்மையின் தாயே சேயாய் ஸ்தூல உலகில்..! உறுப்புக்களை அமைத்து ஒழுங்குற வடிவம் தந்து எழிழுடன் முழுமையக்கி கொஞ்சமும் நேர்த்தி குறையாது நம் மடிகளில் தாங்க கொடுக்கிகிறான்! “நீ மட்டுமே என்னை… வளர்த்தாய்.. அணைத்தாய்.. உயிரூட்டினாய்.. […]

Read More

காலம்

காலம் நிகழ்வுகளை நினைவுகளாய்ப் பதிந்து வைக்கும் ஒலிநாடா   இன்றைய செய்திகளை நாளைய வரலாறுகளாய்ப் பாதுகாத்து வைக்கும் பேரேடு   துக்கங்கள் யாவும் மறந்து போக வைக்கும் மாமருந்து   வாய்ப்புகளாய் வாசற்கதவினைத் தட்டும் உருவமில்லா ஓர் உற்ற நண்பன்   காத்திருத்தல் தவப் பயனாய் பொறுமை தரும் வரம்   மேலும் கீழுமாய்ச் சுழற்றிப் போடும் சக்கரம்   பிறப்பு, இறப்பு மறுமை யாவும் மறைத்து வைத்துள்ள இரகசியப் பெட்டகம்

Read More

கனவு

கனவே.. நானுறங்க நீயோ.. விழித்திருக்கிறாய் ஏன்? எண்ணங்களை சுமக்கின்ற, தலைக் கணமோ? பிள்ளையினை சுமக்கின்ற, பெண்டீருக்குக் கூட, இல்லை அது, உனக்கேன் அது…? செல்லாத இடம் சென்று, இல்லாததை காட்டுகின்றாய், கிள்ளாததை கிள்ளிக் கிள்ளி, பொல்லாததை தீட்டுகிறாய் அல்லாததை அள்ளி அள்ளி, அல்லாட வைக்கிறாய், அழகுதனை அதிகம் காட்டி, அழைக்கழிக்கிறாய், அசிங்கத்தை சிங்கமாக்கி, அதிர வைக்கிறாய், திகிலை திரட்டி காட்டி, திணர வைக்கிறாய், அநாகரீகத்தை நாகரீகமாக்கி அருவருக்க செய்கிறாய் கொடூரத்தினை கட்டவிழ்த்து, கொடுமைப் படுத்துகிறாய் இதெல்லாம்…. தீவிர […]

Read More

பதறிய மனது பாழ்

பதறிய மனது பாழ் ஓரிறையை எண்ணும் இதயத்தை கறையாக்க ஒழிந்திருக்கும் சைத்தானே ஒதுங்கு ! அருளூற்றாம் நல்இறையின் நிறைந்திட்ட கருணையை பெறுவதற்கே தொழுதிட்டேன் பொழுதும் ! அருளூறும் இதயத்தை அகந்தையால் பூட்டியே அல்லல்படும் மனிதா அறிந்திடு ! பொருளீட்டி வாழ்வதையே தொழிலாக எண்ணி அருளாளன் பாதையை மறவாதே ! ஒரு நாளில் பல நாளாய் செயல்பட்டே நீயும் புதுநாளை வரவேற்க புறப்படு ! திருவான இறைவனை தினமும்நீ தொழுது மறுவாழ்வுக்கு நன்மை குவித்திடு ! கல்வியும் ஒழுக்கமும் […]

Read More

பெண்ணினத் துரோகி

பெண்ணினத் துரோகி கரு என்ற பெயறால் கனவுலகில் நான் மிதந்தேன். உழைப்பின்றி உணவு கிடைத்தது உல்லாசமாய்  நான் வளர்ந்தேன். கருவறையில் பக்குவசூழலில்  கவலையின்றி  நான் இருந்தேன். அந்தோ விபரீதம் கண்டு பிடித்தனர் மருத்துவ வல்லுனர்கள்… நான் ஒரு பெண்ணாம்.! ஏமாற்றம்  என்னைச் சுமந்தவளுக்கு! ஒழித்துக் கட்டுங்கள் என ஓலமிட்டனர். என்னைக் கொடூரமாக கொலை செய்தனர். கருவறை மண்ணறையாகியது. பெண் மகவு  பிறக்கும் உரிமையை தடுத்திட காதகியும் ஒரு பெண்தான். அவள் பெண்ணுரிமை போராட்டக் குழு தலைவியாம். மக்கள்  […]

Read More

மனசு

இறைவனின் பேரருளால்… ———————————————- மனசு ——— மனசே..நீ.., எங்கு செல்கின்றாய்? இல்லாத ஊருக்கு, வழியைத் தேடியா? அரு சுவை உணவும் திகட்டி விடும், நீயோ… வியக்கின்ற விஷயங்களை திகட்டாது அசைபோடுகின்றாய், நடக்காத காரியத்தை, நாடி ஓடுகின்றாய், நிறைவேறாததை நினைத்து வாடுகின்றாய், கிட்டாததை பற்றிட முனைகின்றாய், முடியாததின் மேல் மோகம் கொள்கின்றாய், முடித்ததை நினைத்து ஆனவமும் கொள்கின்றாய் மனசே..நீ.., கிட்டாத கனிக்கு கொட்டாவி விடாதே, மற்றவர் செழிப்பில் மனம் புழுங்காதே, உடலுக்கு சோர்வுண்டு உனக்கேன் அது இல்லை இங்கும் […]

Read More

சுற்றுச் சூழல் தூய்மை

ஆக்கம் தமிழ்மாமணி, கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, செல்: 9976372229 சுற்றுச் சூழல் தூய்மை உலகத்தின் கவலையே இது தான் ! சுற்றுச் சூழல் தூய்மை நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ! இது, மனித வாழ்வுக்கு மட்டுமல்ல, புவியின் வாழ்வுக்கும் பொருந்தும் மனிதன் இயற்கையோடு இணைந்து வாழும்போது எந்தப் பிரச்சினையும் இல்லை ! மனிதன் இயற்கையை மீறுகிறபோதுதான் அவஸ்தை ! ஆபத்தெல்லாம் ! இயற்கைச் சீற்றம், இயற்கைச் சீற்றம் என்கிறோமே…! அதைச் சீண்டுவது … யார்? […]

Read More

சிரிப்பு

சிரிக்கனும் நல்லா சிரிக்கனும் மறக்கனும் கவலை மறக்கனும்   [2]   முகமது அழகும் அகமது அழகும் ஜெகமதில் துலங்கி பொலிவுரும் அதனால் சிரிக்கனும் கவலை மறக்கனும்     அரு சுவை போலே நகை சுவையிருக்கும் அடைகின்ற பேர்க்கே ஆனந்தம் கிடைக்கும் சிரிக்கனும் கவலை மறக்கனும்     புன்னகை அதுவே பொன் நகையாகும் மென்னகை நன்னகை தன்னகை கொண்டு சிரிக்கனும் கவலை மறக்கனும்   சிரிப்பில் பல வித ராகங்கள் பிறக்கும் சரி கம […]

Read More