குழந்தை எனும் கவிதை

உயிரும் மெய்யும் கலந்திருக்கும் உன் புன்னகை மொழி …! இசைக்கருவிகள் மழலை ஒலி முன்னே மண்டியிடுகின்றன! மலர்கள் இதழ்களை விரிக்கின்றன உன் சுவாசத்தை அவைகளின் வாசமாக்கி வசப்படுத்திக் கொள்ள..! அல்லும் பகலும் அழகூட்டும் உன் விழிகளால் விண்மீன்கள் வெட்கித்துத் தோல்வியை ஒப்புக்கொள்கின்றன..! கருவறையின் கதகதப்பை உன்னிடம் காற்றும் கடன் கேட்கும் விஞ்சும் பட்டு மேனியைக் கொஞ்சம் தொட்டுப் பார்க்கக் கெஞ்சும் மலர்த்தோட்ட்ம்! ப்ரசவத்தில் கதறினாள் உன் தாய் நீ பிறந்ததும் அவள்மீது பட்ட உன் பார்வையால் பட்டெனப் […]

Read More

சிரிப்பு

சிரிச்சா போதும் சிங்காரம் பூக்கும் நகை சுவையாலே புன் மனதும் ஆரும். [சிரிச்சா போதும்] புணிதத்தின் தன்மையில் நகை சுவை வேண்டும், புரம் பேசிதானே நாம் நகைக்க வேண்டாம். மெய்யானதாக நகை சுவை வேண்டும், பொய்யான கூற்றை நாம் உறைக்க வேண்டாம். பினி போக்கும் மருந்தாம். முப்பதில் ஒரு நாள் கூடியே ஒன்றாய், தப்பது முறிய நாம் சிரிப்போம் நன்றாய். [சிரிச்சா போதும்] அறிவொளியும் கூடும் நகை சுவையாலே, அறியாமை நீங்கி புது பொழிவை காண்போம். சிநேகங்கள் […]

Read More

பயணங்கள்

தந்தையின் விந்தும் கருவறை நோக்கித் தனிமையில் முதன்முதற் பயணம் முந்தவும் பின்னே இறையருள் கொண்டு முயற்சியால் வென்றதும் பயணம் பந்தென உருண்டு பக்குவத் திங்கள் பத்தினில் கருவறைப் பயணம் வந்திடும் தருணம் வந்ததும் நலமாய் வையகம் கண்டதும் பயணம் கருவறைப் பயண மிருந்ததை மறந்து கனவினில் மிதந்திடும் நீயும் ஒருமுறை எழும்பித் தீர்ப்பினைக் காணும் உறுதியை நம்பியே மரணம் வருவதும் பயணம்; அதுவரை உலகில் வாழ்வதும் நிலையிலாப் பயணம் பருவமும் மாறி வளர்சிதை மாற்றம் படிப்பினைக் கூறிடும் பயணம் மடியினில் சாய்ந்து […]

Read More

கணினி

இறைவனின் பேரருளால்……….. ———————————————————— கணினி ————– இறைவனின் வல்லமையை எச்சரிக்கும் கனினி, உள்ளங்கையில் உலகமே அடக்கம். அதனால் மனித ஆரோக்கியமே முடக்கம். மனிதனே ஆக்கினான் அதுவோ மனிதனையே ஆட்டுகிறது கனினி பணியாற்றல்-இனி மூளைக்கோ என்றும் விடுமுறை சிந்தனையில் பிறந்ததோ சிந்தனையை சிறை பிடித்தது நாட்டுக்கு நாடு குற்றச் சாட்டுகள் ரகசியங்கள் களவாடப் படுகிறதென்று ரகசியம் மட்டும் தானா? கனினியால் கன்னிகள் களவாடல் கண்ணியம் களவாடல் பிஞ்சுள்ளங்கள் களவாடல் வேண்டாத காதலுக்காய் தூண்டாத உள்ளத்தை தூண்டியே சிதைத்து தூரமாய் […]

Read More

கர சேவகரே வருவீரா

(பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த நாளில் இடிந்து போய் எழுதியது என்று கவிப் பேரரசு எழுதிய இந்த கவிதை தமிழுக்கு நிறமுண்டு என்ற நூலில் வெளிவந்துள்ளது..) இணைக்க வேண்டும் கர சேவகரே வருவீரா காடுகள் மலைகள் திருத்த வேண்டும் கர சேவகரே வருவீரா வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும் கர சேவகரே வருவீரா மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள் நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள் படைப்பதற்கில்லை வித்துன்னும் பறவைகள் விதைப்பதில்லை விளைந்த கேடு வெட்கக் கேடு சுதந்திர இந்தியா ஐம்பதாண்டு […]

Read More

சுற்றுப்புறக் காட்சி கற்றுத்தரும் மாட்சி

ஆழ்கடலில் குளித்தாலும் அழுக்கெல்லாம் போகா வாழ்வினிலே மலிந்துள்ள அழுக்கெல்லாம் போக தாழ்மையுள வழிபாடாம் தொழுகைஎனும் யோகா பாழ்படுத்தும் இறப்பைஎண்ணிப் பக்குவமாய் வாழ்க! கூரைகளும்நனி சிறக்கும்படி   கூறுதல்நெடு  நோக்கம் கூரையிலுள    விசிறிச்சுழற்  குளிர்ப்பேச்சினைக் கூறும் கூறிடும்மணிக் கடிகாரமும்    கழியும்பொழு தாலே மாறிடும்மணி  களின்நேரமும் மதித்தாருயர் வாரே செய்யும்தொழில்  எல்லாம்நலம்     சேரும்நலம்  ஆக பொய்யும்கள    வும்போக்கிடு     பேசும்புகழ்   சேர மெய்யும்மன    மும்கூடிய      மெய்யாம்பணி யாlலே பெய்யும்மழை   காணும்நிலம்    பூக்கும்வளம் போல நாட்காட்டியும்  சொல்லும்விதம்     நாளும்புதுச்  செய்தி ஆட்கொள்ளவே வேண்டும்மனம் ஆர்வம்பெறச் செய்யும் வேட்கைதரும் வேகம்தினம்  வேண்டும்செயல் நோக்கம் தாக்கம்தரும்  ஆற்றல்பெறத்   தள்ளும்கத  வைப்போல் சன்னலும் நம்மிடம் சொல்லிடுமே -நாம் செகத்தினை நோக்குதல் வேண்டுமென்றே – நம் முன்னால் நிலைக்கண்   ணாடியும்தான் – சொல்லும் முன்னால் பிரதி பலிக்கவேண்டும்- என்றே சொன்னால் புரியா விடைகளெலாம்  -நம்மைச் சுற்றிலும் காட்சியாய்ச் சுழல்வதைக்காண் !- எதையும் உன்னால் முடியும் கனவுகளும் […]

Read More

வறுமைக் கோடு

வலியோ ரெளியோர் மீதினிலே வகுத்து வைத்தக் கோடாகும் பலியாய்ப் போகு மெளியோரும் பயமாய்ப் பார்க்கும் கேடாகும் வேலி தாண்டி வரவியலா விரக்தித் தருமே இக்கோடும் நீலிக் கண்ணீர் வடிக்கின்ற நீசர் செய்த பெருங்கேடாம் கானல் நீராய் வாழ்நாளும் கனவாய்ப் போய்தா னழிந்தது வானம் பார்க்கும் பூமிதானே வறுமைக் கோடு வழங்கியது இருளில் வாழ மின்வெட்டில் எல்லார் வீடும் சமமாக! பொருளா தாரக் கோட்டிற்றான் பெரிய விரிசல் பாகுபாட்டில் “கவியன்பன்” கலாம் 0508351499 http://www.kalaamkathir.blogspot.com/ — ”கவியன்பன்” கலாம், […]

Read More

அருள் வேட்டல்

(பி. எம். கமால், கடையநல்லூர் ) வித்தகன் உன்திருப்  புத்தகத் தத்துவம் விளங்கிட அருள் புரிவாய் ! நித்தமும் மொத்தமாய் நின்திருப்  பெயரையே நினைந்திட அருள் புரிவாய் ! உத்தமத் திருநபி  உளத்தினில் என்னுளம் உறைந்திட அருள் புரிவாய் ! பித்தனாய் உன்னையே பற்ரிடப் பரமனே பெரிதுமே எனக்கருள்வாய் ! நோயினில் படுத்துடல் நொம்பலப்ப  டாமலே நோயிலா வாழ்வருள்வாய் ! பாயினில் படுத்திடும் போதிலும் உன்பெயர் பரவிடர்க  கருள்புரிவாய் ! சேய்எனை உன்திருக் கலிமாவே தாலாட்ட செய்தெனக் […]

Read More

உலக கவிதை தினம்

மார்ச்21 ஆம் நாளை ஆண்டுதோறும் உலக கவிதை தினமாக (World Poetry Day)   ஐக்கிய நாடுகள்கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்புஅறிவித்துள்ளது. 1999ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அறிவித்தாலும் சில நாடுகள் மட்டுமே இதனை செயல்படுத்தி இன்று உலகம் முழுக்க படிப்படியாக கவிதை நாளை கொண்டாடி வருகின்றன. இலக்கிய அமைப்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், கவிதை எழுதுவதை ஆர்வப்படுத்தும் நோக்கிலும் அனைத்து நிலை இலக்கிய அமைப்புகள் இவ்விழாவை நடத்த யுனெஸ்கோ கேட்டுக் கொண்டுள்ளது.  சர்வதேச கவிதை இயக்கங்களுக்குபுதிய அங்கீகாரம் மற்றும் உத்வேகம் கொடுக்கவேண்டும்”,,, எழுதி வெளியிடுவதை மற்றும் உலகம் முழுவதும் கவிதை கற்பித்தல் மற்றும், படித்தல்ஊக்குவிப்பது என்ற நோக்கில் உலக கவிதை தினம் கொண்டாடப்படுகிறது.

Read More

ஐ நா சபையின் வாக்குமூலம்

(பீ. எம். கமால், கடையநல்லூர்) pmkamal28@yahoo.com   ஐ நா சபையாக ஆரம்பிக்கப்பட்ட நான் பொய் நா சபையாகப் போய்விட்டேன் இப்போது !   உலகத் தலைவர்களே ! வாருங்கள்; என்னிடத்தில் உலகப் பயங்கரவாதி உருவாக்கி வைத்திருக்கும் கத்தரிக் கோல் எந்தன் கைகளிலே உள்ளது ! முடிவெடுக்கும் இடமாக முன்னாளில் நானிருந்தேன் ! இப்போதோ முடிஎடுக்கும் சலூனாக மாறிநான் போய்விட்டேன் ! என் உச்சந்தலையில் உட்கார்ந்து இருக்கின்ற பெயர்ப் பலகை மாற்ற பெரியோரே வாருங்கள் ! ஐ […]

Read More