என் ஆசை அலையில் எழில் அண்ணல் நபிகள் !

  என் ஆசை அலையில் எழில் அண்ணல் நபிகள் ! முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ     அல்லாஹு என்னுமுயர் நல்லவனே – உயர் அன்பினிலும் ஆற்றலிலும் வல்லவனே ! நில்லாது போற்றுகின்றேன் ; புகழுகின்றேன் – உன் நிறையருளைத் தொட்டுயிதைத் துவங்குகின்றேன் ! சொல்லாத புகழுரைகள் உனக்குயில்லை – நான் சொல்லிவரும் வார்த்தையிலும் புதுமையில்லை ! இல்லையில்லை உன்புகழுக் கெல்லையில்லை – காக்கும் இறையவனும் உன்னையன்றி எனக்குயில்லை !   […]

Read More

பெருமானே பெருந்தலைவர்

(முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ)     அல்ஹம்து லில்லாஹ் ! அகிலத்துப் புகழெல்லாம் அன்பாலும் அருளாலும் ஈருலகை அரசாளும் அல்லாஹு வல்லவனே ! உன்பாதம் காணிக்கை ! அருள்தா என்நல்லவனே அதுதான் என் கோரிக்கை !! சொல்லாலும் செயலாலும் பேருலகைக் காப்பதற்கு, சன்மார்க்க நெறிதந்த சாந்திநபி நாதருக்கு, ’ஸல்லல்லாஹு’ என்ற ஸலவாத்து மலர்தூவி சங்கையினை சமர்ப்பித்து சபையிதிலே சேருகிறேன் !   அங்காச புரியினிலே, அழகுமலர் சோலையிலே அருள்மணக்கும் நிலையினிலே வானொலியாம் […]

Read More

வேர்கள் : என்றும் வாழும் உமர்

முதுவைக் கவிஞர் ஹாஜி உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ அகிலத்தை ஆளுகின்ற அன்பான பேரிறைவா ! ஆரம்பம் உன்பெயரால்; அத்தனையும் உன்னருளால் ! மகிமைக்கு உரியதிரு மென்குரலார் மைதீ. சுல்த்தான் மன்னவராய் வீற்றிருக்கும் மன்றமிதை வாழ்த்துகிறேன் ! முகில் மட்டும் வானத்தில் வருவதிலே பயனென்ன? மதியோடு சேர்ந்துவந்தால் மதிப்பாரே ! வியப்பாரே !! தகைசார்ந்த வெண்ணிலவுக் கவிஞருடன் தமியேனும், தன்னடக்கம் கூறுகிறேன் ! துளிமுகிலாய் சேருகிறேன் ! விழுதுகளும் வேருடனே வீற்றிருக்கும் வேளையிலே, இந்த விழாவிற்கு இந்த […]

Read More

பசிக்க வைத்த நோன்பு ருசிக்க வைத்த மாண்பு

ஆன்மாவின் உணவாக ……ஆகிவிட்ட ரமலானே நோன்பும்தான் மருந்தாகி …..நோய்முறிக்கும் ரமலானே! பாரினிலே குர்ஆனைப் ….பாடமிட்ட ஹாபிழ்கள், காரிகளின் கிர்ஆத்கள் …..காதுகளில் சொட்டுந்தேன்! பகைவனான ஷைத்தானைப் ……பசியினாலே முறியடித்தாய்த் தொகையுடனே வானோரைத் …தொடரவும்தான் நெறியளித்தாய்! இருளான ஆன்மாவை …….இறைமறையின் ஒளியாலே அருளான பாதைக்கு ….அழைத்திடுமுன் வழியாமே! நண்பனாக மாற்றினாயே …….நாங்களோதும் குர்ஆனை நண்பனாகப் போற்றுகின்றோம் …. நோன்பையும்தான் மாண்பாக இம்மாதம் மறையோதி ….இரட்டிப்பு நன்மைகளை இம்மைக்கும் மறுமைக்கும் …இனிப்பாகத் தந்திடுமே புடமிடும்நல் லுடற்பயிற்சிப் ….புதுச்சுவையும் பெருகிடவும் திடமுடன்நாம் பெறுதலுக்குத் […]

Read More

ரமளான் தூது

(முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ ) அல்ஹம்து லில்லாஹி அகிலத்துப் புகழெல்லாம் அன்பாளும் அருளாளும் ஈருலகை அரசாளும் ! அல்லாஹு வல்லவனே ! உன்பாதம் காணிக்கை ! அருள் தா என் நல்லவனே ! அதுதான் என்கோரிக்கை ! சொல்லாலும் செயலாலும் பேருலகைக் காப்பதற்கு சன்மார்க்க நெறிதந்த சாந்தி நபி நாதருக்கு – ஸல்லல்லாஹு என்ற ஸலவாத்து மலர் தூவி சங்கையினை சமர்பித்து கவிதையினைப் பாடுகிறேன் ! அங்காச புரியினிலே அழகுமலர்ச் சோலையிலே, […]

Read More

விரதத்தின் நாட்கள் !

ஒரு மாதம் விரதத்தின் நாட்கள் ! வீணான எண்ணங்கள் விலங்கிடப் படட்டும் ! விரும்பத்தகாத வார்த்தைகள் விரட்டியடிக்கப் படட்டும் ! கருணையும், சாந்தியும் கஸ்தூரியாய் வாசம் வீசட்டும் ! பொறுமையும், அன்பும் பிறர்மீதும் பரவட்டும் ! வறுமையின் கோரம் வறியவர் மட்டுமன்றி வசதி படைத்தவரும் அறிய வரையறுப்பதுதான் நோன்பு ! அதை நேராய்க் கொள்வோம் ! நேர்மையின் வேராய்க் கொள்வோம் ! வசந்தம் நம் அனைவர் வாழ்விலும் சுகந்தமாய் வரவட்டும் ! அன்புடன் மு. பஷீர் பஷீர் […]

Read More

முப்பசி வென்ற முஸ்லிம்கள்

மௌலவி அல்ஹாஜ் முதுவைக் கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ பசியினையே பசியறியார் புரிந்திடவே பசிக்காகப் படைத்திட்டான் ரமளானிதையே ! “பசித்திருப்பீர்” ஓர்திங்கள் முழுதும் எனக்கே ! பகல்மட்டும் இரவல்ல ! என்றானிறையே ! பசிக்காக உண்போர்கள் புவியில்கோடி ! பசியெனவே மாண்டோர்கள் புவியில்கோடி ! ருசிக்காகத் தின்போரும் உலகில்கோடி ! ரமளானை உணர்ந்தோரும் உலகில்கோடி ! கட்டியவள் கனிவுடனே காத்திருப்பாள் ! கணவனையே வழிநோக்கிப் பார்த்திருப்பாள் ! கட்டிலையும் கன்னியையும் ஒதுக்கிவைத்துக் காணிக்கை செய்திடுவான் காமத்தை […]

Read More

தத்துவ ரமளான் ! (முதுவைக் கவிஞர் மௌலவி உமர் ஜஃபர் மன்பயீ)

எத்தனையோ மாதங்கள் வருடத்தில் வந்தாலும், இனிதான மாதமென ரமளானைத் தந்தவனே ! எத்தனையோ வேதங்கள் உலகத்தில் உதித்தாலும், எளிதான போதமென குர்ஆனை உதிர்த்தவனே ! எத்தனையோ வணக்கங்கள் அடியார்க்கு விதித்தாலும், ஏற்றமிகு நோன்பதனை ‘முடியாக’ வைத்தவனே ! உத்தமனே ! சத்தியனே ! உலகாளும் ரட்சகனே ! உரைக்கின்ற புகழெல்லாம் உனக்காகும் இறையவனே ! தத்துவத்தைத் தரணியிலே தரம்பிரித்துப் பார்க்கையிலே தனித்திருந்து விழித்திருந்து பசித்திருந்து வாழுவதை உத்தமர்கள் போற்றுகிறார் ! புகழுகிறார் ! பாடுகிறார் !! உலகமெலாம் […]

Read More

இரத்ததானம்

இரத்ததானம் தொடர்பாக நான் எழுதிய கவிதைகள் இரத்ததானம் – http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2010/06/blog-post_4301.html வறுமைக்கொரு பாடல் – http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2010/06/blog-post_812.html வறுமையின் நிறம் சிவப்பு – http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/2010/06/blog-post_2054.html நீங்களும் இரத்த தானம் செய்ய விரும்பினால் கீழ்க்கண்ட முகவரிகளைத் தொடர்பு கொள்ளவும். 1. Chennai corporation AIDS prevention and control society (CAPACS), 82, Thiru.vi.ka salai, Mylapore, Chennai-600004. Phone: 1931 (Toll Free) Email: chennaimacs@gmail.com, Website: http://www.tnsbtc.com 2. Tamilnadu state AIDS control and state blood transfusion council, 417, pantheon […]

Read More

வா ! ரமழானே ! வா ! (பீ. எம். கமால் , கடையநல்லூர்)

வா ! ரமழானே ! வா ! உன்னை வரவேற்க இரப்பைகளிலும் இதயங்களிலும் ஆயிரம்கோடி கரங்களோடு காத்திருக்கின்றோம் ! நீ பசிமாதம் ஆனாலும் எங்கள் ஆன்மாக்களுக்கு விருந்தளிக்கவல்லவா விண்ணிறங்கி வருகின்றாய் ? எங்கள் ஆன்மத் தங்கத்தை புடம்போட வருகின்ற புனித ரமழானே ! வா ! வா ! காபாவைச் சுற்றிவந்து கைக்குழந்தை ஆகின்றோம் ! ஆனாலும் இங்கே பொய்க்குழந்தையாகவே பொழுதைக் கழிக்கின்றோம் ! அந்தப் பாவத் துருவையும் கூட சுட்டெரிக்கும் உன் நெருப்பில் சாம்பலாக்கி விடுகின்றாய் […]

Read More