ஹைக்கூப் போட்டி !

ஹைக்கூப் போட்டி ! பரிசு ரூபாய் 5000/- இறுதி நாள் 10-12-2012 தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் நடத்தும் முதல் ஆண்டு விழாவிற்கான ஹைக்கூப் போட்டி ! கவிஞர்கள் தங்களின் சிறந்த ஹைக்கூவிலிருந்து இயற்கை சார்ந்த  3 ஹைக்கூ கவிதைகளை அனுப்பி வைக்கலாம். முழு முகவரி, கைபேசி எண்ணுடன் அனுப்ப வேண்டும். கவிதைகள் அனைத்தும் ஹைக்கூ இலக்கணத்திற்குட்பட்டு இருக்க வேண்டியது அவசியம். இறுதி நாள் :- 10-12-2012 அனுப்ப வேண்டிய முகவரி:- கவிஞர் சுடர் முருகையா பி3/ பிளாக் 59, ஜீவன் […]

Read More

கர்பலா

கர்பலா – இஸ்லாத்தின் வரலாற்று வடு!! – கவிஞர் அத்தாவுல்லாஹ்   கர்பலா- போராட்டக் களமல்ல உயிர்களை விதைத்த நீரோட்டக் களம் உயிர்த் தெழும் தியாக வாழ்க்கைக்கு அண்ணல் பெருமானின் பரிசுத்தப் பரம்பரையினர் தங்கள் இரத்தம் பிழிந்து பூசிய உயிரோட்டக் களம்! அலங்காரத் தலைமுடிகளில் ஆணவப் புழு புழுத்த மூளைகளில் யஜீதின் முள் முளைத்த கர்வங்களுக்கு கை கொடுக்க மறுத்த கண்ணியங்களின் சுத்தம்! பூவின் இதழ்களைப் பொசுக்கிப்போட – அங்கே காட்டுப் பன்றிகளே கனலேந்தி வந்தன ! […]

Read More

அருள் வேட்டல் (பி. எம். கமால், கடையநல்லூர் )

வித்தகன் உன்திருப் புத்தகத் தத்துவம் விளங்கிட அருள் புரிவாய் ! நித்தமும் மொத்தமாய் நின்திருப் பெயரையே நினைந்திட அருள் புரிவாய் ! உத்தமத் திருநபி உளத்தினில் என்னுளம் உறைந்திட அருள் புரிவாய் ! பித்தனாய் உன்னையே பற்ரிடப் பரமனே பெரிதுமே எனக்கருள்வாய் ! நோயினில் படுத்துடல் நொம்பலப்ப டாமலே நோயிலா வாழ்வருள்வாய் ! பாயினில் படுத்திடும் போதிலும் உன்பெயர் பரவிடர்க கருள்புரிவாய் ! சேய்எனை உன்திருக் கலிமாவே தாலாட்ட செய்தெனக் கருள்புரிவாய் ! போய்விளை யாடும்புல் வெளியிலும் […]

Read More

நூல் அறிமுகம் : அழகு ராட்சசி

கவிதை நூலின் பெயர்: அழகு ராட்சசி.   கவிதைகளின் வகை: புதுக்கவிதைகள்   விலை: ரூ. 60.   ஆசிரியர்: முனைவென்றி நா. சுரேஷ்குமார்.   பதிப்பகம்: ஓவியா பதிப்பகம்.   அணிந்துரை எழுதியவர்கள்:   திரு. வதிலைபிரபா அவர்கள். திரு. மன்னார் அமுதன் அண்ணா. யார் யார் படிக்கலாம்  மரணத்திற்குப் பிறகும் தன்னுடைய வாழ்க்கைத் துணையை நேசிக்கத் துடிப்பவர்கள் வாங்கிப் படிக்கலாம். கவிதை நூலிலிருந்து ஒரு கவிதை ————————————————— உன் செல்லக்குறும்புகள் எத்தனையோ முறை எல்லைமீறிய போதும் நான் ஒருமுறைகூட உன்னைக் கோபத்தில் […]

Read More

பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை !!!!!

பற்றி எரிகிறது …பாலஸ்தீன் காசாவில் வெற்றிக் கிடைத்திடவே …வேண்டும்தீன் நேசர்காள்! காலமும் காணாக் …காட்சித்தான் பின்ன பாலகர் செய்த … பாவம்தான் என்ன? கொடுமையிலும் கொடுமை …கொலைசெயுமிவ் வன்மை கடுமையுடன் தடுத்தால் …களைந்துவிடும் தீமை இறைவனின் கோபம் ….இஸ்ரவேலர் அடைவர் விரைவுடன் தீர்ப்பு …வந்திடவும்; மடிவர் இறுதிநாள் வருகைக்கு ….இக்கொடுமை ஒருசான்றா? உறுதியாய்க் கொடுமைக்கு …உள்ளமெலாம் உருகாதா? கொத்துக் கொலைகண்டு …குழந்தைகள் நிலைகண்டு கத்தும் கடல்கூட …கதறுமே பழிதீர்க்க தீர்ப்புநாள் வராதென்று ….தீதைச் செய்தாயோ? யார்க்குமே அடங்காத […]

Read More

குழந்தைகளுக்கு…!

நல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும் நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும் உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும் உத்தமராய் உலகினிலே திகழ்ந்திடவேண்டும்இளமையிலே கல்விதனை கற்றிடல் வேண்டும் இன்முகத்துடனே பழக அறிந்திடல் வேண்டும் தெளிவுடனே ஏடுகளைப்படித்திடல் வேண்டும் தேர்ந்த கல்வி கொண்டபின்னும் அடங்கிடல் வேண்டும்சொல்லும் செயலும் தூய்மையுடன் விளங்கிடல்வேண்டும் சோர்வு அயர்வு சோம்பலுமே நீக்கிடல் வேண்டும் கடமையதை தவறாமல் செய்திடல் வேண்டும் காரியத்திலென்றும் நல்ல உறுதியும் வேண்டும் வைகறையில்துயிலெழுந்து கொள்ளவேண்டும் வாழும்வகைத்திட்டங்களை வகுத்திடல் வேண்டும் மெய்வளர விளையாடித்தீர்த்திடவேண்டும் மேன்மைமிகு கலைகளையும் கற்றிடல் […]

Read More

அறிவு

அறிவு இடும் ஆணையினால் உடலுடன் உலா வருகிறோம்! எழும்புகளுக்கெல்லாம் சதைகளை சட்டையாய் போர்தி அசைவிற்கு இசைந்தாட மூட்டுகள் பொருத்தி, சுவாசத்தை வாங்கிக் கொடுக்க வாசல்கள் வைத்து காற்றழுத்த பைகள் கொண்டு நரம்புக்குள் ரத்த்ஙள் ஓட்டி உணவை உள் வாஙகி வைக்க குடோன்களும்–அதனை செரிமான்ம் செய்திட சுருள் குழாய்களும், சத்தானதை ஏற்றுக் கொண்டு சக்கையினை வெளியில் தள்ளி கிட்னீ இயந்திரத்தால் சுத்திகரிப்பும் செய்து–இது போல் மானுடல் அனைத்துருப்புகளையும் அறிவே இய்க்குகிறது! ஓரறிவான தாவரங்கள் முதல், ஐந்தறிவான விளங்கினத்திற்கும், கிட்டிடாத […]

Read More

மழை

மழை; மழையதை வேண்டு.. (வித்யாசாகர்) கவிதை!   மழை; மழையோடு கலந்துக்கொண்டால் இப்பிரபஞ்சத்தின் ரகசியசப்தம் கேட்கும்; மழையை இரண்டுகைநீட்டி வாரி மனதால் அணைத்துக் கொண்டால் இப்பிரபஞ்சம் நமக்குள் அடைபட்டுக் கிடக்கும்; மழை இப்பிரபஞ்சத்தின் உயிர்ச்சாறு இவ்வுயிர்களின் வெப்பத்தில் கலந்து இப்பிரபஞ்ச வெளியை உயிருக்குள் புகுத்தும் ஒரு தூதுவன்; மழை மழையில் நனைந்ததுண்டா நனையாதவர்கள் நனைந்துக் கொள்ளுங்கள்; மழை வரும்போது அண்ணாந்து முத்தமிடுங்கள்.. நாமுண்ணும் ஒவ்வொரு பருக்கை சோற்றுக்ககத்தும் மழையே உயிராக கரைந்துள்ளது; மழையில்லையேல் சோறில்லை மழையில்லையேல் வனமில்லை […]

Read More

ஏற்றுங்கள்; போற்றுங்கள்!

கவியரசர் கவிதை…..                அன்னை இந்திரா மறைந்த நாள் 30.10…..……….1984 ஏற்றுங்கள்; போற்றுங்கள்! திங்களோர்    முறைதான்   பூக்கும் சித்திர   வடிவம்   காட்டும் செங்கழு    நீர்ப்பூப்    போல தேயமோர்    திருநாள்   காண(த்) தங்களை     ஈந்தார்;    அந்தத் தலைவரை    எண்ணும்    நாளே மங்கலத்    திருநாள்;    இன்று வணங்குவோம்  அவரை  வாழ்த்த.   வெடித்தது    கருவி;    ஆங்கே வீழ்ந்தது   குருதி;    மண்ணில் துடித்தது      ஆவி;    ஆயின் தொட்டகை     விட்டா    ரில்லை பிடித்ததோர்     கொடியை    மார்பில் பிணைத்தவர்    மறைந்தார்;   அந்த படித்தளத்    தின்மேல்    தானே பறக்கின்ற    கொடியைக்     கண்டோம்!   ஏற்றுங்கள்     கொடியை    வானில்; ஏற்றிடும்    போதே       நெஞ்சில் போற்றுங்கள்    காந்தி     என்னும் புண்ணிய    மூர்த்தி     தன்னை; மாற்றுங்கள்     சமுதாயத்தை மாபெரும்     பரத     நாட்டில் ஆற்றுங்கள்    சிறந்த   சேவை; அன்னைக்கு    மகன்தான்   காவல்!   இந்தியா     பெற்ற     வாழ்வு எவரெவர்     கைக்கோ     சென்று சந்தியில்      நின்றார்     மக்கள் தாயகம்    நினைவா   ரில்லை […]

Read More

தாலாட்டு

பத்துமாத பந்தமதுவும் பனிக்குடம் உடைத்துவரும்! சித்தமெல்லாம் மகிழ்ந்திருக்க சிறுஉயிரின் வரவுபெறும்! முத்தமழைப் பொழிந்தவளாய் தாயுள்ளம் கனிந்துருகும்! தத்திவரும் மழலைகண்டு தாவிவரும் கரமிரண்டும்!! பட்டுமெத்தை தேவையில்லை தாய்மடியே சொர்க்கமடி! பால்மழலை பசியாறி களைத்துறங்கும் வேளையடி! தொட்டிலிலே கண்ணுறங்க தாய்பாடும் தாலாட்டு! மொட்டவிழா மலர்போல கண்ணசையும் சேய்கேட்டு!! தன்குலத்துப் பெருமைசொல்லி தாலாட்டுப் பாட்டுவரும்! நின்னழகைப் புகழ்ந்தபடி நீண்டபல வரிகள் வரும்! உன்முகத்தைப் பார்த்தபின்னே உனக்கு இணை ஏதுமில்லை – என பண்ணசைய கண்ணுறங்கும் பால்நிலவே தாலேலோ!! சொல்லாலே சுகம்தருவாள் அம்மாவின் […]

Read More