பாலைவனத் தொழிலாளியி​ன் வேலை கூறும்

1) சுயமாகத் தொழிலைத்தான் செயல்படுத்த வழியின்றி அயல்நாட்டில் பணியாற்றி அடிமையாய் வளர்ந்துகொண்டு துயரத்தைக் குடும்பத்தில் துடைத்திட்டப் பணமெல்லாம் வியர்வையின் விதைகளிலே விளைந்திட்ட விருட்சமன்றோ?   2) இரைதேடும் பறவையாய் இழந்திட்டார் உறவையே கரைதேடும் படகாகக் கலக்கத்தி லுழைக்கின்றார் விரைவாகக் கடனெல்லாம் விடுதலையா குமென்றெண்ணி தரைமீது தவிக்கின்றார் தகிக்கும்வெய் யிலிலன்றோ?     3) பாலையாம் வாழ்க்கையை பைஞ்சோலை யாயாக்க பாலையாம் நாட்டிற்குள் பாதங்கள் வைத்தநாளாய் காலைத்தூக் கத்தையே காசாக்கி வீட்டிற்கு ஓலையாய் மாற்றத்தான் ஓயாமல் வேலையாம்   […]

Read More

பொறுமை பெறும் பெருமை

கருவின் பொறுமை கவிதைக் குழந்தைத் தருவின் வளர்ச்சித் தளிர்விதை மூலம் முகிலின் பொறுமை முழங்கும் மழையாய்த் துகிலின் பிறப்புத் தறியின் பொறுமையாம் வானிலாத் தோற்றம் வளர்பிறை மாற்றமே தேனீப் பொறுமையேத் தேனின் சுவையாய் பொறுத்தா லரிசியும் பொங்கிடும் சோறாய்ப் பொறுத்தால் கிடைக்கும் புகழ்       யாப்பிலக்கணம்: பஃறொடை வெண்பா — ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்) அபுதபி(இருப்பிடம்)   எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com   மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com                                        shaickkalam@yahoo.com                                        kalaamkathir7@gmail.com […]

Read More

கலங்கரை விளக்கு

சேகரப் புதையலே நட்பு              சோதனை விடைகளே நட்பு சாகர விடியலே நட்பு            சாதனைத் தூண்டுதல் நட்பு தாகமேத் தீர்த்திடும் நட்பு          தாயினைப் போலவே நட்பு வேகமாய்ச் செயல்படும் நட்பு        வேரிலே உறுதியாம் நட்பு    கலங்கிடும் பொழுதினில் எமக்கு                  கலங்கரை விளக்கென நட்பு   துலங்கிடும் பண்புகள் எமக்கு                 துணைதரும் கலங்கரை விளக்கு   நலந்தரும் நூலகம் எமக்கு           நாளெலாம் கலங்கரை விளக்கு […]

Read More

பொய்மை விலகும்; மெய்நிலை விளங்கும்

மூலமே மெய்யென்பேன் மற்றவைப் பொய்யென்பேன் கோலமாய் மாறியேக் கொண்டாடும் மாயையாம் வீட்டுக்குள் ளுறங்கும்நீ வீதியே வீடென்று நோட்டத்தி லறிவாயே நான்கு சுவரின்றி நீர்க்கு மிழியைநீ நீரென்ற றிதலேமெய் பார்க்கு மிடமெல்லாம் படைப்ப்பினை யாய்வுசெய் பொய்யென்னும் திரையினைப் போக்கி மனக்கண்ணால் மெய்நிலைக் காண முயல். ” கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம் என் வலைப்பூத் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ யாப்பிலக்கணம்: வெண்கலிப்பா(வெண்டளை+கலித்தளை) — ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்) அபுதபி(இருப்பிடம்)   எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com   மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com […]

Read More

என் தேசம் = பாரதம்

எந்தேசம் காணுமே இன்று விடுதலைச் சந்தோசக் கொண்டாட்டச் சங்கமம்- இந்நேரம் பாட்டின் தலைப்பிலும் பாரதம் என்பதைப் போட்டேன் பொருத்தமாய்ப் போச்சு (வெண்பா) ******************************​******************************​******** நுனிநாக்கி லாங்கிலம் நுட்பக் கணினி தனியார்வ நோக்கில் தணியாத தாகம் இனியென்ன வேண்டுமிங் கிந்தியர் என்றும் நனிசிறந்தே வாழ்வர் நவில். ******************************​******************************​(வெண்பா) கடின உழைப்பும் கடமை யுணர்வும் படியும் குணமும் பலமான போட்டியுறும் சந்தையில் இன்று சிறப்பான எங்கள் இந்தியர் என்றே இயம்பு. ( வெண்பா) ******************************​******************************​************ காடும் மலையும் கடலுமே தாண்டி […]

Read More

மரணம் ஒரு பயணம்

இரவும் பகலும் மாறும்           இறைவன் வகுத்த நியதி வரவும் செலவும் சேரும்           வணிகக் கணக்கின் நியதி இரவு மட்டு மிருந்தால்          இயங்க மறுக்கு முலகம் வரவு மட்டு மிருந்தால்        வணிக வளர்ச்சி விலகும்     உறவும் பிரிவு மிணைந்து         ஊடலும் காதலும் கலந்து பிறப்பின் முடிவி லுறவைப்          பிரியு முயிரும் பறந்து இறப்பின் மூலம் சென்று         இறையைக் காண; மீண்டும் பிறந்து மறுமை வாழ்வும்        […]

Read More

உதைப் பந்து

எல்லை வரம்பினுள் எல்லாம் படரவே எல்லைப் பிடியி லெதுகைத் தொடரவே எல்லைத் தவறா  இனிமைத் தொடையுடன் சொல்லின் சுவையெனும் சொந்தப் படையுடன் வல்லமைக் காட்டும் வளமிகு மோனையும் மெல்ல நகர்த்திட மெல்லிசைச் சேனையும் வெல்லு மணியாய் விரைவுடன் பந்துப்பா நில்லா  உதையும் நெடுகிலு  மிந்தப்பா வெல்லம் கலந்த வரிசையாம்  சீர்களில் சொல்லைப் பதித்திடச் செய்யுளின்  வேர்களில் வில்லினு ளம்பாய் விரையு மிலக்கு கல்லி லெழுத்தாய்க் கலக்கு     யாப்பிலக்கணம்:”கலிவெண்பா — ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்) அபுதபி(இருப்பிடம்) […]

Read More

நட்பு

சேகரப் புதையலே நட்பு              சோதனை விடைகளே நட்பு சாகர விடியலே நட்பு            சாதனைத் தூண்டுதல் நட்பு தாகமேத் தீர்த்திடும் நட்பு          தாயினைப் போலவே நட்பு வேகமாய்ச் செயல்படும் நட்பு        வேரிலே உறுதியாம் நட்பு         யாப்பிலக்கணம்: விளம், விளம்,மா என்னும் வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்   — ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்) அபுதபி(இருப்பிடம்)   எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com   மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com […]

Read More

ஊடகம்

ஊடகம் பேசிடும் தன்மை               ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு               நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை              பார்த்திடும் தோரனை வெம்மை வேடமேப் போடுதல் என்றும்              வேகமாய்த் தீர்த்திட நின்று தீவிர வாதியாய்க் காட்டி           தீர்த்திட ஏனிதில் போட்டி? மேவிடும் வேற்றுமை யாரால்?           மேதினி கூறிட வாராய்! பாவிகள் காட்டிடும் வஞ்சம்          பாலினு லூற்றிடும் நஞ்சாம் தாவிடும் ஓரினம் நம்மை          தாழ்ந்திடக் கூவுதல் […]

Read More

முயன்றால் வெல்லலாம்.​.!!!

கல்லினை உளியால் நீக்கி             கவின்சிலைப் படைக்கும் சிற்பி சொல்லினைச் சீராய்க் கோர்க்கும்             சொல்வனம்  புலவன்  யாப்பில் நெல்லினை  விதைத்து  ஆவல்             நெருங்கிடக் காக்கும் வேளாண் வில்லென வளைந்து  நெற்றி              வியர்த்திட உழைக்கும் போழ்தும் வல்லமை முயற்சி தந்த            வழிகளின் துணிவு என்போம்                துயரமாம் நோயில் வீழ்ந்துத்             துடித்திடும் எவர்க்கும் மிக்க நயத்தகு வார்தை மூலம்            நலம்பெற வாழ்த்திப் பேசு உயர்ந்திடப் போகும் தூரம்           […]

Read More