சுயகுறிப்பேடு (DIARY)

சுயகுறிப்பேடு சுயசரிதை வீடு கட்ட அடித்தளம்   சாதனைகளின் வீட்டுப்பாடம் நம்க்குள்ளே சதய சோதனைக் கூடம்   மின்னஞ்சலில் மின்னலாய்ப் போன அன்புக் காற்றை அடைத்து வைக்கும் இதயம்   இப்புத்தகமே வரம் புத்தரின் போதி மரம்   இம்மையில் எமது நன்மை தீமைகட்கு மறுமையில் பட்டோலை இஃதொரு நகலோலை   கடன்பட்டார் நெஞ்சம் கலங்காதிருக்க இதன் பங்கு உடன் எச்சரிக்கும் அபாயச் சங்கு   க்தைகளின் புதையலாகும் கவிதைகளின் விதைகளாகும்   எழுதுகோலின் கூர்முனையை உழுதிடும் […]

Read More

தேனீ

தொலைநோக்குப் பார்வை கொள்க               தொடராய் முன்னே செல்க வேலைகளைப் பகிர்ந்து கொள்க              விகிதமும் சமமாய்க் கொள்க அலைபோலக் குழப்பம் வந்தால்            அலசியே யாய்ந்து கொள்க வலைபோலப் பின்னும் பேச்சால்            வம்புகள் வளர வேண்டா     யாப்பிலக்கணம்: காய்+மா+தேமா (அரையடிக்கு) —                                  விளம்+மா+தேமா(அரையடிக்கு) என்னும் வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம்   இவை நம்மால் முடியுமா? என்று ஐயமாக உள்ளதா? தேனீக் கூட்டத்தைப் பாருங்கள்; அவற்றிற்குக் கற்றுக் கொடுத்தவன் யாருங்க? (அவன் […]

Read More

இறையருளும் மனித முயற்சியும்

1) ஆற்றல் மிக்கோ னாற்றற் றானே ஆற்று நீரும்; அள்ளி நீயும் போற்றி நன்றாய்ப் பேண்.   2) கட்வுளி னருளினால் கடலிலே உயிரினம்; படகிலே வலையுடன் பயணமாம் முயற்சியால் நடக்குமே வணிகமும் நலம்   3) கிணற்றுநீரும் பெருகுவதும் கருணையா ளனருட்டானே உணர்ந்துநீயும் முயல்கின்றா யுனதுவாளி கயிற்றினாலே குணங்களிலே விடாமுயற்சி குழைத்து.   4) கதிரவனொளி கட்லுறவினால் கருமேகமாய் உருவாகுதல் கதியமைத்திடும் பரம்பொருளருள்; கருணையாளனை மறவாமலே துதித்துதினமும் முயற்சிகளிலேத் தொடர்.   5) தூணின்றி நிற்கின்ற தூக்கிய வானத்தை […]

Read More

தெருக்களின் பாகுபாடு உருக்குலைக்கும் ஒற்றுமைக் கூடு

ஊரை இணைக்கும் கோடுகளே ஊரைப் பிரிக்கும் கேடுகளானது   வேற்றுமைத் தீயால் வெந்து மடிகின்றோம் வாஞ்சை வாளியால் அன்பு நீரெடுத்து வாரி அணைப்போம் சிரட்டை அளவேனும் சிரத்தை நினைப்போம்   கூட்டமைப்பு என்னும் கூடாரம் அமைத்தோம் ஓட்டுக்காகப் பிளக்கும் வேட்டமைப்புகளை வெளியில் நிறுத்துவோம்   உளத்தூய்மைப் பற்றினால் உருவாகும் ஒற்றுமை கத்தியில் நட்ப்பது போல் பத்திரமாகவும்; கண்ணாடிப் பாத்திரமாகவும் பக்குவமாய்க் கோத்திரப் பெருமையின்றி பழகுவோம்   எதிர்மறை எண்ணங்களின் புதிர்களால் புறம்பேசுவதைப் புறந்தள்ளுவோம்   அண்டைத் தெருவோடு […]

Read More

துளிப்பாக்​கள் (ஹைக்கூ)

சுமந்த போழ்தும் சும்ந்த பின்னும் சுமப்பது – தாயின் தியாகம்   ஊருக்கு விருந்து வைக்கவும் ஊரையே விருந்தாக்கவும்- ஒற்றைத் தீக்குச்சி   மானம் காப்பதும் மானமிழந்தால் கோர்ப்பதும் – ஒன்றே முடிச்சு   மணந்தால் மறப்பதும் மணக்காவிடில் மறக்காததும்- அதே காதல்   உணவின் முடிவு மறுவுலகின் துவக்கம் – அதுவே மரணம்   ஊரை இணைப்பதும் ஊரைப் பிரிப்பதும் – அதே தெருக்கள்   பிறரைக் காப்பதால் தன்னைக் காப்பது – அதே தர்மம் […]

Read More

எட்டுக் குணங்களால் எட்டும் வளங்கள்

அன்பைப் பெருக்கு அனைத்தும் செழித்திடும்              வம்பு வளர்த்தால் வளமே அழிக்கும்   நம்பி இறங்கு நலமே கிடைத்திடும் வெம்பி கிடந்தால் வளங்கள் உடையும்   நோக்கம் இருந்தால் நெருங்குமே சக்திதான் ஊக்கம் குறைந்தால் உடையுமே யுக்திகள்   நல்ல மனத்தில் நலமே தங்கிடும் பொல்லாப் பகையால் பிளவுகள் பொங்கிடும்   ஐயம் களைதல் அவசியத் தேவையாம் பொய்யும் புறமும் பொசுக்கிடும் சேவையை   எதிர்மறை எண்ணம் இருந்தால் தடைதான் புதிர்கள் பெருகினால் பூஜ்யம் விடையாம்   நன்றி […]

Read More

ஈரம்

ஈரமுள்ள நிலத்திற்றா னெழுந்துவரும் நல்விதைகள் ஈரமுள்ள மனதிற்றா னெழுதவரும் கவிதைகள் ஈரமுள்ள கர்ப்பத்தி லியங்கிவரும் குழந்தைகள் ஈரமுள்ள வுதடுகளி லெழும்காதற் போதைகள்   ஈரமுள்ள வுறவுகளி லெப்பொழுதும் நன்மைகள் ஈரமுள்ள வுணர்வுகளி லிரக்கத்தின் தன்மைகள் ஈரமுள்ள இதயந்தா னிரத்தத்தி னோட்டமாகும் ஈரமுள்ள ஈகையினா லேழ்மையுமே யோட்டமிடும்    ஈரப்பசையு மில்லையெனி லினியுறவும் தூரமாகும்  ஈரமின்றி வாழ்ந்தாலே யில்லறமும் பாரமாகும்  ஈரச்சு   ருதியினின் னிசைதானி லையுமாச்சு  ஈரக்காற் றில்லையெனி லென்னாகும் நம்மூச்சு  ஈரமென்னு மீரெழுத்தே இக்கவியின் தலைப்பெழுத்து  ஈரமென்னு […]

Read More

யான் படித்தப் பள்ளி; உயர்கின்றது மதிப்பை அள்ளி

யான்படித்தப் பள்ளித்தரம் உயர்வானச் செய்தியினால் தேன்குடித்த  வின்பம்போல் தித்திப்பை எய்தினேனே யான்வடிக்கும் பாக்கட்கு யாப்புத்தந்      தபள்ளி யான்குடித்தத் தமிழ்ப்பால் இன்னுமூறு மேயள்ளி   காதிர்மு கைதீனென்(னும்) கல்விச்சாலை கண்டேனே சாதிமத பேதமற்ற சமத்துவமேக் கொண்டேனே ஆதியிறை ஞானமுள்ள ஆசானைப் பெற்றேனே நீதிக்கதைகள் மூலம்தான் நெறிமுறைகள் கற்றேனே   தமிழ்வழியிற் கற்றாலும் தரமான ஆங்கிலமும் அமிழ்தெனவே ஊட்டியதால் அயல்நாட்டிற் பிழைக்கின்றோம் இமைகள்தான் கண்களையே இயல்பாகக் காப்பதுபோல் சுமையாகக் கருதாமல் சுகமாகக் கற்பிக்கும்   தியாகமுள்ள ஆசான்கள் திகழ்கின்ற பள்ளியாகி […]

Read More

ஈமானிலே ………

அல்லாஹ்வின் அடியார்கள் முஃமீன்களே – அவனை            ஐவேளை தொழுவதற்கு வாருங்களே இல்லாத ஏழைக்கு ஸக்காத்தையே – ஏழைவரியாக          இரண்டரை சதவீதம் வழங்குங்களே பொல்லாத பாவங்கள் கரைந்தோடவே- இந்தப்         புனிதரமலானில் நோன்பை நோற்பீர்களே கல்லான உள்ளங்கள் கசிந்திடுமே – அந்தக்         கஃபாவில் ஹஜ்ஜை செய்வீர்களே சொல்லாலும் செயலாலும் ஒன்றான – நமது         சுந்தரநபி வழியே நன்றானது வல்லான் வகுத்திட்ட குர்-ஆனிலே – நல்ல         வலிமை ஊட்டும் ஈமானிலே     […]

Read More

சென்றுவா ரமலானே

புடம்போட்டத் தங்கமாய்ப் புத்துணர்வை யூட்டி தடம்புரளா வாழ்வுக்குத் தக்கவ்ழி காட்டி கடந்து பயணிக்கும் கண்ணிய மாதம் நடந்து முடிந்த ரமலானின் தேர்வில் கடமை முடித்தோம் கருணை வரவால் உடனிருந்தாய் எங்களுடன் உண்மைத் தோழா விடைபெறு முன்னை விழிநீர் சுரந்து மடைதிறக்கச் சொல்வேன் மகிழ்வுடன் சென்றுவா         யாப்பிலக்கணம்: இயற்றரவிணைக் கொச்சகக்கலிப்பா — ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்) அபுதபி(இருப்பிடம்)   எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com/   மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com                                        shaickkalam@yahoo.com […]

Read More