அணைக்கட்டு அன்பை அணைக்கட்டும்

’முல்லைப் பெரியாறு’ சொல்லிப் பாரு நற்றமிழ்ப் பேரு நம்மை ஏய்ப்பது யாரு? உடைக்க நினைப்பது ஒற்றுமை உணர்வுகளை தண்ணீரை வைத்து தானியம், காய்கறி அரிசியும் பயிரிட்டாயா அரசியலைப் பயிரிடுகின்றாய் அண்டை மாநிலமே அரிசியும் பருப்பும் தந்தும் சண்டைப்  போட்டே சகோதர்களின் மண்டை ஓட்டை வைத்து மல்லுக்கு நிற்கின்றாய் உடைப்பதில் தான் இடைத்தேர்தல் வெற்றி கிடைப்பதென்பது  மடையர்களின் சூழ்ச்சி தமிழின் உதிரமாய் உன்றன் மொழியும் தமிழனின் உதிரமும் தட்டிப் பறிக்கின்றாய் உன்றன் பூமியில் உள்ள சாமியைத் தேடி உன்றன் […]

Read More

கவிதை என்பது

கவிதைகள் என்பது: உயிரின் மீது பதியும் உயிரெழுத்து மெய்யின் புலன்களை மெய்யாகவே புலன்விசாரணை செய்யும் மெய்யெழுத்து நிராயுதபாணிகளான நியாயவான்கட்கு ஆயுதமாய்க் காக்கும் ஆயுத எழுத்து கேள்விக்குறியாய் கூனிவிட்ட சமுதாயத்தை ஆச்சர்யக் குறியாய் ஆகாயமாய்ப் பார்த்திட ஆன்மபலம் ஊட்டும் கவிதைகள் யாவும் பொய்மைகள் அல்ல; ஈற்றெதுகையில் மிளிரும் இறைமறையும் இலக்கிய நடையால் இதயத்துக்குள் உறையும் பெருமானார் முஹம்மத்(ஸல்) அருள்மொழிகள் யாவும் புதுநடையில் போதிக்கும் புரட்சிகளாய் சாதிக்கும் செய்யுளின் யாப்புத்தறியில் பொய்யாமொழிப் புலவன் நெய்து தந்த  திருக்குறள் மெய்”மை” தானே […]

Read More

புன்னகை

இதயக் கண்களைக் கூச வைக்கும் மின்னல்   உள்ளத்தின் வார்த்தைகள் உள்ளடக்கிய உதட்டின் மொழி   உணர்வின் சூரியக் கதிர்கள் உதடுச் சந்திரனில் பிம்பம் இதழ்களின் ஓரம் இளம்பிறையின் வடிவம்     சீறும் பாம்பு மனிதர்களை ஆறும்படி ஆட்டுவிக்கும் மகுடி   காந்தமாய் ஈர்க்கும் சாந்த சக்தி   அரசனையும் அடக்கும் அறிஞர்களின் ஆயுதம்   விலைமதிப்பில்லா வைரம்   வையகத்தை வசப்படுத்தும் வசீகரம்   செலவில்லா தர்மம்   அசையும் ஈரிதழ்கள் இசையாய் ஊடுருவி […]

Read More

வயசு வந்து போச்சு

  வயசு வந்து போச்சு” (ஒரு முதிர்கன்னியின் முனகல்) வயசு வந்து போச்சு மன்சு நொந்து போச்சு ஆண்டுகள் பெருகிப் போச்சு ஆயுளும் அருகிப் போச்சு உணர்வுகள் கருகிப் போச்சு கண்களும் அருவியாச்சு   வரன் பிச்சைக்காரர்களால் சவரன் இச்சைக்காரர்களால் முதிர்க்ன்னி நிலையில் வாழ்ந்தோம் புதிர்ப்பின்னிய வலையில் வீழ்ந்தோம்   நரையும் வந்தாச்சு வாழ்க்கை நாடகத் திரையும் விழுந்தாச்சு அலை ஓய்வது எப்போது? நில்லை மாறுவது எப்போது?   சாதியும் சவரனும் பிரதிவாதி ஆன போது நீதியும் […]

Read More

வெற்றிப் படிகள் எட்டு; வெற்றிக் கொடிகள் நட்டு

இந்தப்பா ஒரு சந்தப்பா   எளிமையான கனவேற்றால் இலக்கும் எட்டும் .. எதிர்ப்போரை அன்பென்னும் கயிறே கட்டும்! தெளிவான எண்ணங்கள் வெற்றி ஈட்டும்    தோற்றாலும் வென்றாலும் பொறுமை காட்டு     அளவான நம்பிக்கை உனக்குள் வேண்டும்          அதற்குள்ளாய் வாழ்க்கையை அமைக்க வேண்டும் வளமான வொழுக்கத்தைப் பேண வேண்டும்        வரம்புக்கு ளடங்கித்தான் வாழ வேண்டும்   புரிகின்ற மொழியாலே நீயும் சொல்லு        பிறர்நாடும் அமைதிப்புன் னகையால்  வெல்லு விரிகின்ற நட்பென்னும் வளையம் […]

Read More

வண்டியும் வாழ்க்கையும்

வண்டியைச் சீராக ஓட்ட வேகக் கட்டுப்பாடு வாழ்கையைச் சீராக்க விவேகம்   வண்டியை ஓட்டவும் வாழ்க்கையை நகர்த்தவும் வேண்டியது ஒன்றே திறமை   வண்டிப் பயணமும் வாழ்க்கைப் பயணமும் சுகமாக அமையும் குறைவான சுமைகளால்   வண்டிப் பயணத்திலும் வாழ்க்கைப் பயணத்திலும் கண்டிப்பாகத் தேவை கவனித்து உதவும் தோழமை   வண்டிக்கு ஊற்றும் எண்ணையிலும் வாழும் உடலுக்கான உண்டியிலும் தேவை தரம்     வண்டியில் மின்கலன் வாழ்கையில் உடல்நலன் கண்டிப்பாக ஏற்றுக மறுசக்தி   வண்டிப் […]

Read More

நான்

நான் என்றால் “அகம்பாவத்தின் அடையாளம்; அகம் பாவங்களை ஆக்ரமிக்க ஆரம்பத்தளம்” ஆன்மீகக் கூற்று   “தன்னம்பிக்கையின் ஊக்க மருந்து; உற்சாகத்தின் ஊற்று நான் என்கின்ற கூற்று” உளவியலார்க் கூற்று   உன்னால் மட்டுமே முடியும் என்றால் தற்பெருமை உன்னால் முடியும் என்றால் தன்னம்பிக்கை   “நான் யார்?” மூளையின் மூலையா? உடலின் கூடா உயிரும் போனதும் பெயரும் போகின்றது மெய்யும் பொய்யானது மெய்யின் மீதானப் பெயரும் பொய்யானது   உள்ளிருக்கும் நான் உயிரின் ஒளியா? எந்தையின் விந்தா? […]

Read More

புதியதோர் உலகம் செய்வோம்

தாயும் ஒன்றே- தந்தையும் ஒன்றே ஆயிரம் பிரிவுகள் ஏன் இங்கே? தெருவைத் திருத்தினால் ஊரைத் திருத்தலாம் ஊரைத் திருத்தினால் உலகத்தைத் திருத்தலாம் கலகம் இல்லா உலகம் காண்போம் ஊரை இணைக்கும் கோடுகளே ஊரைப் பிரிக்கும் கேடுகளானது வேற்றுமைத் தீயால் வெந்து மடிகின்றோம் வாஞ்சை வாளியால் அன்பு நீரெடுத்து வாரி அணைப்போம் சிரட்டை அளவேனும் சிரத்தை நினைப்போம் கத்தியில் நட்ப்பது போல் பத்திரமாகவும்; கண்ணாடிப் பாத்திரமாகவும் பக்குவமாய்க் கோத்திரப் பெருமையின்றி பழகுவோம் அண்டைத் தெருவோடு சண்டைப் போட்டே மண்டை ஒடு மலிவானால் […]

Read More

ஏன்?”

கேள்வி அல்ல; வேள்வி   அறிவுச்சுரங்கங்களின் அற்புதத் திறவுகோல்   அறிவியல் குழந்தைகள் அவதரிக்க வைக்கும் உயிரணு   கண்டுபிடிப்புகளின் கண்டுபிடிப்பு   சூத்திரங்களின் சூட்சமம்   ஞானிக்கள் என்னும் தேனீக்கள் சேமித்த மகரந்தப் பொடி   தேடலின் துவக்கம் முடிவேயில்லாத் தேடல்   பிறப்பையும்  இறப்பையும் புரிய வைக்கும் ஞான ஒளி புத்தியைக் கூராக்கும் ஞான உளி   அறியாமை இருள் விலக்கும் பகுத்தறிவுப் பகலவன்   “நான் பிறந்த காரணத்தை நானே அறியு முன்னே […]

Read More

எண்ணத்தில் …….

எண்ணத்தில் தூய்மை வேண்டும் ***** இதழ்களில் வாய்மை வேண்டும் மண்ணைப்போல் பொறுமை காட்டு ***** மனத்தெழு யிச்சை யோட்டு விண்ணைப்போல் உயர்ந்த நோக்கம் ***** வேற்றுமைத் தீயைப் போக்கும் கண்ணுக்கி மைபோல் நட்பு ***** காத்திடும் கூட்ட மைப்பு யாப்பிலக்கணம்: காய்+மா+தேமா (அரையடிக்கு) விளம்+மா+தேமா (அரையடிக்கு) என்னும் வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம் “கவியன்பன்” கலாம் குறிப்பு:இப்பாடல் அண்மையில் (30/09/2011 அன்று) துபையில் நடாத்தப்பட்ட அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முதற்பொதுக்குழுக் கூட்டத்தில் எனது (கல்லூரித்) தமிழாசிரியர் […]

Read More