வறுமைக் கோடு

வலியோ ரெளியோர் மீதினிலே வகுத்து வைத்தக் கோடாகும் பலியாய்ப் போகு மெளியோரும் பயமாய்ப் பார்க்கும் கேடாகும் வேலி தாண்டி வரவியலா விரக்தித் தருமே இக்கோடும் நீலிக் கண்ணீர் வடிக்கின்ற நீசர் செய்த பெருங்கேடாம் கானல் நீராய் வாழ்நாளும் கனவாய்ப் போய்தா னழிந்தது வானம் பார்க்கும் பூமிதானே வறுமைக் கோடு வழங்கியது இருளில் வாழ மின்வெட்டில் எல்லார் வீடும் சமமாக! பொருளா தாரக் கோட்டிற்றான் பெரிய விரிசல் பாகுபாட்டில் “கவியன்பன்” கலாம் 0508351499 http://www.kalaamkathir.blogspot.com/ — ”கவியன்பன்” கலாம், […]

Read More

தேர்வில் வெல்ல தேவையானவைகள்

திரும்பத் திரும்பப் படியுங்கள் தெளிவு வரும்வரை படித்தவை உள்ளத்தில் பதியும் தேர்வுக்கு முதல்நாளும் தேர்வின் அன்றும் ஆர்வமுடன் மீள்பார்வை அவசியம் வேண்டும் சாய்ந்தும் பக்கமாய்ச் சரிந்தும் படித்தால் மாய்ந்து படித்தும் மூளையில் படியாது ; உண்ண வேண்டிய உணவு காய்கனி திண்ணமாய்க் கிட்டும் தேர்வில் வெற்றிக்கனி குளிக்கு முன்பு குளிர்நீரை வாய்க்குள் ஒளித்துக் கொண்டால் உற்சாகம் வாய்க்கும் முழுதாய் முன்னுறக்கம் மூளைக்கு ஓய்வு பழுதிலாத் தெம்பாம் படித்தவர் ஆய்வு எழுதிப் பார்த்தால் எட்டும் அளவு வழுத்திச் சொல்வர் […]

Read More

பூப் பூவாய்ப் பூத்திருக்கு பூவுலகில்….!!

படைத்தவன் படைத்த  பாமாலை  பாரெங்கும் பூத்திருக்கும்   பூஞ்சோலை கருப்பையின் கதகதப்பு  அன்னையின் அரவணைப்பு  அத்தனையும் வாடாத பூ மனைவியின் இதழ்  மலரும் சிரிப்பு  மாதுளையின் பூ  கன்னச் சிவப்பு கவரும் ரோசாப் பூ மழலையின் மாசிலாப் புன்சிரிப்பு மல்லிகைப் பூ நண்பனின் நட்பு  நாளும் பாதுகாப்பு அரிதாய்ப் பூக்கும்  குறிஞ்சிப் பூ உறவுகள் என்பது கதம்பப் பூ அத்தனைக்கும்  ஆணிவேர் அன்பு ஆனால், கல்லின் மீது  பூ வீசியவர்கள் முதன் முதலாய்  ஒரு பூவின் மீது […]

Read More

படிப்பில் வேண்டும் பிடிப்பு

மூச்சு விடுதல் மட்டு மன்று முயற்சி கூட மனிதமே பேச்சில் கூறு மனைத்தும் விடாமல் பேணிக் காத்தல் மனிதமே பாய்ச்சும் நீரா லுயிரும் பெற்று பயிரும் வளர்தல் போலவும் காய்ச்சும் தங்கம் ஒளிர்தல் போன்றும் கடின வுழைப்பு வெல்லுமே ஊதும் சங்கின் அறிவிப் பால்நம் உறக்கம் களையச் செய்யுமே ஓதும் உன்றன் படிப்பால் செல்வம் ஓங்கி வளரச் செய்யுமே தீதும் நன்றும் பகுத்து முடிவைத் தீர்க்க வுதவும் கல்வியே போது மென்ற நிறுத்தல் குறியைப் போட்டு விடாது […]

Read More

காலம்

காலம் நிகழ்வுகளை நினைவுகளாய்ப் பதிந்து வைக்கும் ஒலிநாடா   இன்றைய செய்திகளை நாளைய வரலாறுகளாய்ப் பாதுகாத்து வைக்கும் பேரேடு   துக்கங்கள் யாவும் மறந்து போக வைக்கும் மாமருந்து   வாய்ப்புகளாய் வாசற்கதவினைத் தட்டும் உருவமில்லா ஓர் உற்ற நண்பன்   காத்திருத்தல் தவப் பயனாய் பொறுமை தரும் வரம்   மேலும் கீழுமாய்ச் சுழற்றிப் போடும் சக்கரம்   பிறப்பு, இறப்பு மறுமை யாவும் மறைத்து வைத்துள்ள இரகசியப் பெட்டகம்

Read More

நெஞ்சுப் பொறுக்குதில்லையே..!!!!

கொஞ்சும் அழகுத் தமிழ்மொழி                 குதறி விடத்தான் கொலைவெறி நஞ்சு கலந்து வருவதை              நன்க றிந்த நிலையினால் நெஞ்சுப் பொறுக்கு    தில்லையே             நேரமைத் திறனு  மின்றியே வஞ்சிக் குமிவர் பிழையினை             வளர விட்டக் கொடுமையே அஞ்சி அஞ்சி வாழ்வதால்           அன்னைத் தமிழும் சாகுமே கெஞ்சிக் கேட்டா லிவர்களின்             கொடுமை யின்னும் கூடுமே பஞ்சில் வைத்தத் தீயினாய்             பாழாய்ப் போகும் தாய்மொழி பிஞ்சு நாவுகள் சொல்லுமே            பிழையாய்த் தமிழைக் […]

Read More

குடியரசு தினம்

குடியரசு தினம்; கோபத்தில் மனம் குடியரசுக் கொண்டாட்டம் வருடந்  தோறும் *****குறைவின்றி விமர்சையுடன் நடந்த போதும் விடியாத இரவினிலே பிறந்த நாட்டில் *****விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப் பாட்டில் முடியாத நிலைமைக்கு வந்த தாலே *****முதலில்லா வியாபாரம் ஊழல் தானே படியாத அரசியலார் போடும் வேசம் ***** பகற்கொள்ளை நடக்குமெங்கள் பார(த) தேசம் புனிதமான ஆன்மீக வாழ்க்கை காணோம் ***** பொய்யுலகி  னாசையிலே மூழ்கிப் போனோம் மனிதமானம் என்னவென்றுத் தெரியாக்   காயம் *****மலையேறிப் போனதிங்கு மனித நேயம் […]

Read More

கவிதை பாடுவோம்

மலரை வருடிச் செல்லும் மாலை நேரத் தென்றல்; நிலவை கடந்து செல்லும் நீல வானின் மேகம்; புலவர் யாப்பில் மனமும் புரளும் தன்மை காண்பீர்! உலகில் மொழிகள் வேறாம்; உணர்வு என்றும் ஒன்றாம் ! திசைகள் வேறு வேறு; தெரியும் இலக்கு ஒன்றே அசைக்கும் நிலையில் பாடும் அனைத்து மொழிகள் கவியும் விசையாய் இயக்கும் மனதில் விந்தை கண்டால் புரியும் தசையும் உடலும் சிலிர்க்கத் தானாய் மூளை விரியும் வானின் பரப்பை மறந்து வண்ணப் பறவை காண்போம் […]

Read More

அன்றும் இன்றும்

அன்று: கன்னத்தில் முத்தமிட்டு கட்டியணைத்து உச்சிதனை முகர்ந்து உச்சந்தலையில் ஓதி சென்றுவா மகனே ”வென்றுவா மகனே” என்றுதான் புகழந்த தாய் அன்றுதான் கண்டோம் இன்று: “ஏழு மணியாச்சுடா எழுந்து வா சனியனே” கோபத்தில் வாயைக் கொப்பளித்து சாபத்தில் காலைச் சாப்பாட்டை அளித்து விரட்டியடிக்கும் வீரத்தாய்(?) இன்று அன்று: தாய்பாடும் தாலாட்டும் நோய்போகும் நல்மருந்தும் வாய்பாடும் மனக்கணக்கும் வாய்த்தது நமக்கு அன்று இன்று: தொடர்நாடகம் தருகின்ற தொல்லைக் காட்சியும் பக்கவிளைவுகளின் பக்கமே இழுக்கும் மருந்தும் கணிதப்பொறி,கைப்பேசி, கணினிகளால் மனக்கணக்கும் […]

Read More

அனைத்துக் கட்சிகளும் அரவணைத்து “அணையுங்கள்”

பாட்டன்மார் கெட்டியாய்த் தானே அணைகட்டிப் போட்டனரே சேட்டன்மார் மாத்திரம் எப்படித்தான் கற்றனர்ச் சேட்டைகளை நாட்டாமை தீர்ப்பு வழங்கவே கூட்டம் நடுவணாட்சிக் கூட்டாமல் தள்ளிவைத்தால் நாடோறும் பாடிடும் கூக்குரலே “கவியன்பன்”, கலாம்

Read More