சமத்துவ சகோதரத்துவ ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா

சமத்துவ சகோதரத்துவ ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா—————————————-இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் அமைந்துள்ளது எங்கள் கீழச்சிறுபோது கிராமம். இந்துக்கள், இஸ்லாமியர்கள் என இரு இறை நம்பிக்கை கொண்ட மக்களை உள்ளடக்கியது எங்கள் கிராமம். இரு இறை நம்பிக்கை கொண்டாலும் ஒரு தாய் பிள்ளைகள் போல உறவுமுறை கொண்டாடி வாழ்ந்து வருகிறோம். எங்கள் பஞ்சாயத்து தலைவர் திருமதி. ஜெய்சங்கர்கவுன்சிலர் திரு செய்யது அலி. எங்கள் ஊரில்பள்ளிவாசலும் உண்டுபக்தி மெச்சும்கோவில்களும் உண்டு தீபாவளி கறிக்கு எங்கள் ஆடுகளை அஸ்ரத் தான் […]

Read More

வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா; மீண்டும் பல்டி அடித்த நிதிஷ்குமார்!

வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா; மீண்டும் பல்டி அடித்த நிதிஷ்குமார்! பாஜக அரசு கொண்டுவந்த வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு பாஜகவின் கூட்டணி கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் அளித்த ஆதரவை திரும்பப்பெற்றது. ஐக்கிய ஜனதா தளத்தின் செயல் தலைவர் சஞ்சய் ஜா, சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் மொகத் ஜமா கான் ஆகியோர் ஒன்றிய அமைச்சர் கிரிண் ரிஜிஜுவை சந்தித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

Read More

துபாயில், கலைஞர் நூற்றாண்டு… கோலாகல விழா !

துபாயில், கலைஞர் நூற்றாண்டு… கோலாகல விழா ! துபாய் :ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் , முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 6 ஆம் ஆண்டு நினைவேந்தலும் ,கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவும் , அமீரக தி.மு.க. பொறுப்பாளரும் , தமிழ்நாடு அரசுஅயலக அணி உறுப்பினருமான எஸ்.எஸ். மீரான் அவர்களின் ஏற்பாட்டில்வெகு விமர்சையாக கொண்டாட பட்டது. விழாவிற்கு தாயகத்திலிருந்து , தி.மு.க. மாணவரணி தலைவர். வழக்கறிஞர்.இரா. ராஜீவ் காந்தி அவர்களும் , எழுத்தாளர், தி.மு.க.ரைடர்ஸ் ஒருங்கிணைப்பாளர் அ.ராசா தமிழ் […]

Read More

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை : தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை. சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 179 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 14.42 கோடி நூலுரிமைத் தொகை அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இவ்வரிசையில், […]

Read More

கவி.கா.மு.ஷெரீப்பிறந்த தினம் இன்று

இந்திய விடுதலைப்போராட்ட வீரரும்,பிரபல நாவலாசிரியர், பத்திரிக்கையாசிரியர், கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியருமான,கவி.கா.மு.ஷெரீப்பிறந்த தினம் இன்று.( 11 ஆகஸ்ட் 1914) இவரின் புகழ்பெற்ற சில பாடல்கள்.. சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா…… வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா,… பணம் பந்தியிலே குணம் குப்பையிலே…… வானில் முழுமதியைக் கண்டேன் வனத்திலொரு பெண்ணைக் கண்டேன்…. நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்,… ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே,… ஒன்றுசேர்ந்த அன்புமாறுமா உண்மைக்காதல் மாறிப்போகுமா…… அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை…… […]

Read More

சென்னை : 151 வது இலவச கண் அறுவை சிகிச்சை முகாம்

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பார்ந்த சகோதரர்களே வருகின்ற 22- 9-24 ஞாயிற்றுக்கிழமை 151 வது இலவச கண் அறுவை சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. இந்த கண் அறுவை சிகிச்சை முகாமில் 12,500 பேர்கள் இலவசமாக அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள். இந்த முகாமை பயன்படுத்தி பலன் பெற்றுக் கொள்ளுங்கள்

Read More

தமிழில் மனைவி என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்

தமிழில் மனைவி என்னும் சொல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்…‌ உசாத்துணை:கழகத்தமிழ் அகராதி

Read More

மரபுடைமை நிலையம் சிங்கப்பூர் நாகூர் தர்கா – ஜே.எம். சாலி —

15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித மகான் சையது ஷாஹுல் ஹமீது காதிர் அவர்களின் நினைவு சின்னமாக இந்திய முஸ்லிம் சமூகத்தினர் 1827 – 1830 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தெலுக் ஆயர் ஸ்திரீட்டில் நாகூர் தர்காவைக் கட்டினர். சிங்கப்பூரர் நாகூர் தர்கா  1974-ஆம் ஆண்டு நவம்பர் 29- ஆம் தேதி தேசி நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. தர்காவை மறுசீரமைக்கும் திட்டம் 1994 ஆம் ஆண்டில் பரிந்துரைக்கப்பட்டது. ஹாஜி ஷரஃப்தீன் தலைமையில் அமைந்த 18 உறுப்பினர்களைக் கொண்ட […]

Read More

தியாகத் திருநாள்!

தியாகத் திருநாள்! எண்ணற்ற தியாகங்கள் இவ்வையத்தில் வரலாற்றிலும் வாழ்விலும்!நாட்டுக்காக மொழிக்காக உறவுக்காக நட்புக்காக காதலுக்காகவென! உயிர் உறவுகள் உடமைகள் சொத்துக்கள் சுகங்களெனப் பலவற்றின் தியாகம்! ஆயினும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்ப் போற்றப்பட்டு வரும் ஒரே தியாகம் இப்ராஹீம்(அலை)நபி அவர்களுடையது தான்! தள்ளாத முதுமையில் தனக்குப் பிறந்த ஒரே மகனை இறைவனின் ஆணையேற்றுப் பலிப்பீடம் ஏற்றியது! சுய நலமே சூழ்ந்திருக்கும் இவ்வுலகில் நாம் தியாக உணர்வு பெற்றிட உணர்த்தும் நாளே தியாகத் திருநாள் பக்ரீத்!! -இமாம்.கவுஸ் மொய்தீன் drimamgm@hotmail.com

Read More