சிரிப்பு ஒரு மாமருந்து

05- 05- 2013 “ உலக “ சிரிப்பு தினமாகும்.” மனமகிழ்ச்சியை தொலைத்து விட்டு வெறுமையில் வாடும் உள்ளங்கள் உலகில் ஏராளம், ஏராளம். சிரிப்பு தினத்தில் சிரிப்பை பற்றி சில சிறப்பான செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சிரிப்பு ஒரு மாமருந்து                                                    சிரியுங்கள், உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்                                                   அழுங்கள் நீங்கள் ஒருவர்தான் தனித்து அழுதுகொண்டிருப்பீர்கள்.. இன்று வாழ்வில் நாம் திரும்பிப் பார்க்கும் திசையில் எல்லாம் தெரிபவை இரண்டு. அவைகளில் ஒன்று அதிருப்தி. மற்றொன்று பேராசை. இந்த இரண்டும் தனித்தனியாக்கூட இல்லை.உள்ளங்கையும் புறங்கையும் போல ஒன்றின் இருபக்கங்களாக இருக்கின்றன.  யாரிடம் பேராசை இருக்கிறதோ அவரின் மறுபுறம் அதிருப்தியும் இருக்கிறது. கிடைத்தற்குத் திருப்திப்பட்டுக்கிடைக்க வேண்டியதற்காக உழைக்கும் ஆரோக்கியமான மனநிலை தென்படவில்லை. பணம் படத்தில் N.S. கிருஷ்ணன் பாடிய சிரிப்பு பாடலைப் பலரும் கேட்டு  இருக்கலாம். சிரிப்பில் பல வகையுண்டு. அவற்றில் சில:– வாய்விட்டு சிரிப்பது –    நமட்டு சிப்பு –    வாயை மூடிக்கொண்டு சிரிப்பது –   ஓகோ என்று சிரிப்புது-   அவுட்டு சிரிப்பு – வெடிச்சிரிப்பு –   ‘களுக்’கென்று சிரிப்பு –    பயங்கரமாய் சிரிப்புது –    புன்சிரிப்பு–  வயிறு வலிக்கச் சிரிப்பு – விழுந்து,விழுந்து சிரிப்பது –  குபீரென்று சிரிப்பு –   மனதுக்குள்ளே சிரிப்பு –   உதட்டளவில் சிரிப்பு ,   வெறிச்சிரிப்பு –  கலகல வென்று சிரிப்பு – ‘பக்’கென்று சிரிப்பு-   குலுங்கச் குலுங்க சிரிப்பு-    சங்கீத சிரிப்பு,   வஞ்சகச் சிரிப்பு,   கடைசியாக வருவதுதான் *கபட சிரிப்பு. எதையும் கேலி  செய்வதற்கு விஷயத் தெளிவு வேண்டும். அதை நகைச்சுவையோடு கேலி செய்வதற்கு புத்திசாலிதனம் வேண்டும். அதுவும் பிறர் மனம் புண்படாமல் கேலி செய்ய, கேலிசெய்வதற்குப் பக்குவமான  அறிவு வேண்டும். அத்துடன் சிந்தனையை தூண்டிவிட தெளிந்த மனம் வேண்டும். சிரிப்பு ஆக்கபூர்வமானது.  சிரியுங்கள்.  மனம் சுத்தமாகிறது.  ஆரோக்கியமடைகிறது. மனம் ஆரோக்கியமடைந்தால் அதைத் தொடர்ந்து உடம்பும் ஆரோக்கியம் அடைகிறது .அப்படி ஒரு மருந்து இருப்பதை  நாம் மறந்து விடுகிறோம். அவ்வளவுதான். சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்  . கடந்த 30 ஆண்டுகளாக நமது உள்ளத்திற்கும் , நோய்களுக்கும் இடையே  இயல்பானதொடர்பை ஆராய்ந்து வருகிறார்கள் உடற்கூறு வல்லுநர்கள். இந்த  ஆராய்ச்சியின் பலனாக ஒரு  உண்மையைக் கண்டறிந்தனர். சிரிப்பு ஒரு மாமருந்து.   நமது எண்ணங்களுக்கும் மன நிலைக்கும் ஏற்றபடி உடலினுள் இயங்கும் செல்களின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, அல்லது குறைகிறது என்பதே அது. 1993-ம்ஆண்டின் இவ்வாராய்ச்சியில் ஒரு பயனுள்ள உண்மை கண்டறியப்பட்டது. நமது நரம்புகள் ஒரு இரசாயனத்தை வெளியிட்டுக் கொண்டுடிருக்கிறது.  இதற்கு “CGRP” என்று  பெயர்.  இதுதான்நரம்புகளுக்கு அடியிலுள்ள  நோய் எதிர்ப்பு சக்தி செல்களின்  இயல்பை ஊக்குவிப்பதும், மட்டுப்படுத்துவதும். நமது மன அலைக்கு ஏற்ப ‘CGRP’ அதிகமாக உற்பத்தியாக்கி உடலில், நோய் எதிர்ப்புசக்தியும் அதிகமாக்கும். நாம் மனம் விட்டுச் […]

Read More

புன்னகை -புதுசுரபி

’தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்.’ ………   மதிய உணவு இடைவேளையில் நண்பர் அழகாக பாடிக்கொண்டிருந்தார்.   பொதுவாக, ”தர்மம் இருக்கப்பட்டவனுக்குப் பொருந்தும்; என்றும்இல்லதாவன் நிலை என்ன?  அவன் தலையைக் காப்பதுகேள்விக்குறியோ?? என்று விவாதம் சூடிபிடித்தது.   தர்மம் என்பது அனைத்து மதத்திலும் மிகவும் வலியுறுத்தப்பட்டஒரு வழிமுறை. ஒரு அரைத்துண்டு பேரிச்சம் பழத்தினையாவது தர்மம் செய்து அதன் மூலம் இந்தஉலகில் மட்டும் இல்லை, மறுஉலக வாழ்விலும் நரக நெருப்பிலிருந்து தலையைத் தக்கவைத்துக்கொள்ளும் சூட்சுமம் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. அட […]

Read More

உலக ஊடக சுதந்திர நாள்: மே 3

உலகமெங்கும் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க ஐ நா பேரவை மே 3 ஆம் நாளை ஊடக சுதந்திர நாள் என அறிவித்துள்ளது. ஜனநாயகத்தைக் காப்பாற்றும் போராட்டத்தில் கட்சி, ஆட்சி முதலான காப்பரண்கள் இல்லாமல் களத்தில் நிற்பவர்கள் ஊடகவியலாளர்கள். சர்வாதிகார ஆட்சியாளர்களின் முதல் இலக்காக இருக்கும் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தாக்குதலுக்கு ஆளாவதும் படுகொலை செய்யப்படுவதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஊடக சுதந்திரத்தைப் பொருத்தவரை இந்தியா மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. 179 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 140 ஆவது […]

Read More

சுய தொழில்கள்- சமோசா தயாரிப்பு

மற்ற எண்ணெய் பலகாரங்களை விட சமோசாவின் ருசி பலருக்கு பிடிக்கும். மேலும் கடைக்காரர்கள் சமோசா தயாரிப்பதில்லை. வெளியே வாங்கியே விற்கின்றனர். நல்ல தரம் மற்றும் சுவையோடு சமோசா தயாரித்து விற்பது லாபகரமான தொழில் என்று கூறுகிறார், கோவை மாவட்டம், சூலூரை சேர்ந்த ஜேம்ஸ். அவர் கூறியதாவது: தேவகோட்டையை சேர்ந்த நான் 13 வயதில் பிழைப்பு தேடி கோவை வந்தேன். ஓட்டல்களில் பல்வேறு வேலைகளை செய்து, பிறகு சமையல் மாஸ்டர் ஆனேன். பிறகு கோவையில் சமோசா தயாரிப்பவர்களிடம் தினசரி […]

Read More

மழையின் மடியில்

கடந்தகால நினைவுகளை கண்முன்கொண்டுவந்து நிறுத்தவும், பழையநாட்களை புதுபிக்கவும், வாய்ப்பளித்திருக்கும் வானலை வளர்தமிழ்தமிழ்தேர் இதழுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். தமிழ்த்தேர் அச்சிலேறிஅகிலத்தையும் வலம்வர வாழ்த்தும் நெஞ்சமாய் உங்கள் அன்புடன்மலிக்கா”வின் முதல் கவிதை  மழையின் மடியில் ================================= துளித் துளியாய் விழும் மழையே! துணைக்கு யாருமில்லையென எனைத் தொட்டுத் தீண்டி தூறல் சிந்தி அழும் மழையே! வா வா நானுமிருக்கேன் உன் துணைக்கு உன் தோழியாய்!   சிணுங்கி சிணுங்கி வரும் மழையே! சிவந்து சினந்து கொளுத்தும் வெயிலில் சூட்டைத் தணிக்கும் செல்லமழையே! வா வா நீர் வழியா வயல்வெளியும் செழிக்கட்டுமே உன்தயவால்!   மழையே குளிர் மழையே இயற்கையனைத்தும் உன்மடியில் மழையே வான் மழையே மயங்கும் மனமும் மனித உடலும் மழைத்துளியின் அன்புப் பிடியில்   மழையே அருள் மழையே மாபெரும் அருளாளன் மனமுவந்து அளித்த மாமழையே வா வா வெகு அழகாய் நலமாகுமே இவ்வுலகம்  உன் வரவால்!……….     பள்ளிக்கூட நியாபங்களையும், பருவத்தையும் எட்டிஎட்டி தொட்டுநின்றகாலம்,  மின்சாரம் துண்டிக்கப்பட்டு சூரிய ஒளியைகடன்வாங்கி ஒளிர்ந்து கொண்டிருந்த நிலாக்கால இரவொன்றில், வீட்டினுள்கவ்விய இருளின் பயத்தை விரட்ட முற்றத்தில் வந்தமர்ந்துமுழங்காலைகட்டிகொண்டு வானை வேடிக்கை பார்க்கையில்,இருளைகளைய முற்பட்ட மின்மினிகளின் வெளிச்சத்தை விரட்ட எண்ணி, திடீரெனமின்னல் மின்னி, இடி இடித்து துளித்துளியாய் கொட்டியதூறல்கள்,என்தேகம் தொட்டு விளையாட,சட சடவென பெருமழையாய்பெய்யத்தொடங்கியதும், மண்வாசம் மூக்கைத்துளைத்தபடி கண்களைகிறங்கடிக்க, இருந்த இடத்திலிருந்து எழாமல் நனைந்துகொண்டே இருந்தஎனக்குள் மின்னல்கீற்றாய் சிலவரிகள் மின்னி மின்னி இதயத்தை இடித்தன.   இதயத்தில் இதமாய் இடித்த எண்ணங்களை எழுத்துக்களாக்கமுயற்சித்ததின் விளைவு, சின்ன சின்னதாய் கிறுக்கிகொண்டிருந்த நான்முதல் முறையாக எண்ணங்களையும் உணர்வுகளையும் முழுமைப்படுத்தும்விதமாய், முழுக்கிறுக்களாய் உருப்பெற்று என் பள்ளி நோட்டில்  முளைத்தது முதல்கவிதை இந்த மழைக்கவிதை, ஆர்வமிகுதியால்சிலகிறுக்கல்களை சில இதழ்களுக்கு அனுப்பியபோதும் வெளிவராமல்போகவே, அலுச்சாட்டியம் செய்து அடுக்கடுக்காய் நிறைத்தனநோட்டையும், டைரியென்னும் நாட்குறிப்பையும், விடாமுயற்சியாய்அவ்வபோது மீண்டும் மீண்டும் பெயர்மாற்றி அனுப்பியதில் ஓரிருகவிதைகள் வெளிவந்தது, வெளிவந்த முதல் கவிதையும் 8வரி ”மழை”க்கவிதை ”மரியா” என்ற பெயரில் பதினைந்து வயதில் பதியமிட்டவிதைகள்பல ஆண்டுகள் கடந்து 2009 தில், பாலைதேசத்தில், இணையத்தில் வழியாகபூத்தன பலகிறுக்கல்கள் மலர்கள், அதன்வழியே வானலை வளர்தமிழ்தமிழ்தேர் இதழில் முளைத்தது என் மனவிதைகள் மணமணக்கும் தமிழ்பூவாய். அதனிலிருந்து தொடர்ந்து விதைகிறேன் க”விதை”களை. மண்ணில் விழும் விதைகள்யாவும் முளைத்து எழுவதில்லை, அதுபோல்விழும் விதைகளில் ஒரு விதையேனும் மண்ணை முட்டி முளைத்துப்பூக்காமல் இருப்பதுமில்லை. வான்மழை பூமியை நனைத்து மண்ணுக்குள்நுழைவதுபோல், என்மன உணர்வுகள், பிறரின் மனங்களைத்தொட்டுஉணர்வுகளுக்குள்ளும் நுழைய, தூவிக்கொண்டேயிருப்பேன் கவிதைமலர்களை..     அன்புடன் மலிக்கா  

Read More

ஒரு யோசனை – தமிழ்த்தேனீ

யோசிக்காம எடுக்கற எந்த முடிவும் சரிப்பட்டு வராது. யோசித்துக்கொண்டே இருந்தால் நேரம் போய்விடும் விரைவில் ஒரு முடிவுக்கு வந்து விடுங்கள்.  இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை மிகவும் கவனமாகக் கையாண்டு பயனுள்ளதாக யோசனை செய்து  ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் யோசித்தேன் ! யோசித்தேன் ! யோசித்துக்கொண்டே இருக்கிறேன். யோசித்தால்தான் எந்த ஒரு செயலையும்  சரியான முறையில் செய்யமுடியும் . வருமுன் காப்பது நல்லது வந்தபின் வருத்தப்படுவது என்பது  அறிவு பூர்வமான செயல் அல்ல . […]

Read More

கன்னல் நபி வாழ்வின் கால வட்டம்

கன்னல் நபி வாழ்வின் கால வட்டம்   தோற்றம்          -கி.பி. 571- ம் ஆண்டு   ஏப்ரல் திங்கள் 20 –ம் நாள் நபி விருது பெறல் –கி.பி.610 –ம் ஆண்டு   ஆகஸ்ட் திங்கள் 6- ம் நாள் தாயிப் விஜயம்    -கி.பி. 619 ம் ஆண்டு  பிப்ரவரி  திங்கள் 6 –ம் நாள் விண்ணகப் பயணம் (மிஃராஜ்)         – கி.பி. 619 ம் ஆண்டு   மார்ச்   திங்கள் 22 –ம் நாள் மதீனா மாந்தர் ஈமான் கொள்ளல் […]

Read More

மே தின சிறப்புக் கவிதை

  இதோ ஒரு காக்கா கதை ! ( கவி சேலம் கே. பஷீர் )     ஒட்டிய கன்னங்களும் உட் குழிந்த கண்களும் பரட்டைப் பஞ்சுத் தலையுடனே வேப்பமரத் தடியினிலே ………     பருப்பு மசால் வடையினைப் பாட்டி பாங்குடன் சுட்டனளே ! – வாசமதை இருப்புக் கொள்ள முடியாமலே வடை ஒன்றை வாய்விட்டுக் காகம் கேட்டதே !     காசேதுமில்லாமல் வடை லேசாய் கிட்டிடுமா ? என்றனள் – பாட்டி […]

Read More

விழிப்புணர்வு வரிகள்

விழிப்புணர்வூட்டும் வாசகங்களை சுவரில் எழுதுவதை, சேவையாக செய்து வரும், பசுபதி நாதன்: ஆரம்பத்தில், வருமானத்திற்காக சினிமா விளம்பரம் எழுதும் வேலை செய்து, மிக கஷ்டமான சூழ்நிலையில் தான், வாழ்ந்தேன். “நீ எந்த நிலையில் எப்படி இருந்தாலும், உன்னால் முடிஞ்ச ஒரு குண்டூசி நல்லதையாவது, இந்த சமூகத்துக்கு செய்தால் தான், வாழ்க்கை முழுமையடையும்’ என, என் அப்பா அடிக்கடி சொல்லுவார். இது என் சிந்தனையில், என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. ஒரு நாள் சினிமா தியேட்டர் வாசலில், என் மனதில் […]

Read More

சரித்திர நாவல்கள்-(2012 வெளியானது வரை)

அய்க்கண்_அதியமான் காதலி அய்க்கண்_இளவெயினி அய்க்கண்_கரிகாலன் கனவு அய்க்கண்_நெய்தலில் பூத்த குறுஞ்சி அய்க்கண்_நெல்லிக்கனி அய்க்கண்_ஊர்மிளை அகிலன்_கயல்விழி அகிலன்_வேங்கையின் மைந்தன் அகிலன்_வெற்றித்திருநகர் அமுதா கணேசன்_பொன் மயிலின் கதை அமுதா கணேசன்_தஞ்சை இளவரசி அண்ணாமலை . கே_செஞ்சித் தளபதி அண்ணாமலை எம். _குருதிச்சோறு அண்ணாமலை. எம். கருப்பூர்_பல்லவன் பாவை அனுஷா வெங்கடேஷ்_காஞ்சித் தாரகை அனுஷா வெங்கடேஷ்_காவிரியின் மைந்தன் அனுஷா வெங்கடேஷ்_தில்லையில் ஒரு கொள்ளைக்காரன் அரசு_கோபெருஞ்சோழர் அரசுமணி .க_பல்லவர் கதைகள் அறிஞர் அண்ணா_இரும்பாரம் அறிஞர் அண்ணா_இரும்பு முள் வேலி அறிஞர் அண்ணா_கலிங்க ராணி […]

Read More