பாதைகள் ———— ஜே.எம். சாலி

பாதைகள் ஜே.எம். சாலி     சபியா வந்திருக்கிறாள். நிரம்பவும் தளர்ந்து போயிருக்கிறாள். நாற்பத்தெட்டு வயதில், சற்று அதிகமாகவே நரையோடி இருக்கிறது. வயதுக்கு வந்த மூன்று பெண்களை வீட்டோடு வைத்திருக்கும் கவலைதான் காரணமோ? அப்துல் கபூர், பார்த்ததும் பார்க்காதது போல் தலையை தாழ்த்திக் கொண்டார். சன்னமான குரலில் “சவுக்கியமா இருக்கிறியா. தங்கச்சி?” என்றார். ‘வந்தக் காரியத்தைச் சொல்லச் சொல்கிறார்’ என்பதைச் சபியா புரிந்து கொண்டாள். அவ்வப்போது, தம்மைத் தேடி வருபவர்களில் சபியாவும் ஒருத்தி என்பதைத் தவிர, அதிகமாக […]

Read More

முன்னுதாரணமான ஆசிரியர் !

( எஸ்.வி.எஸ். ஜெகஜோதி )   வகுப்பறைக்கு பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்குச் செல்லும் வழியில் பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக்குப்பைகளை எடுத்து வைத்தார். மாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான்தான் இதையெல்லாம் எடுத்துக்கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது […]

Read More

ஜம் ஜம் பசிக்கு உணவு …! நோய்க்கு மருந்து ..!

  ( ஆபிதா அதிய்யா )    நிலத்தில் கிடைக்கும் அனைத்து நீரிலும் ‘ஜம் ஜம்’ மிகவும் தூய்மையானது. அதில் ஒருவர் தமது பசிக்குரிய உணவையும் நோய்க்கான மருந்தையும் கண்டு கொள்ளலாம்.” ( நபிமொழி )   முஸ்லிம்கள் ஜம்ஜம் தண்ணீரைத் தனித்துவமானதாகவும், சிறப்பானதாகவும் கருதுகின்றார்கள். இந்த அற்புதமான நீரை முஸ்லிம்கள் தாங்கள் விரும்புகின்ற நேரத்திலெல்லாம் அருந்துவதற்குப் பேராவல் கொள்பவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் ஹஜ் உம்ரா செய்பவர்கள், இந்த நீரின் எடையைக்கூட பொருட்படுத்தாமல் தங்கள் ஊருக்கு எடுத்துச்சென்று, […]

Read More

மகரிஷி கவியோகி

  ( அரும்பாவூர் மு. சாஹிரா பானு )   பன்மொழிப் புலமை, தமிழ்க்கவிதை, நாடகம், புனைகதை, இலக்கிய விளக்கம், வாழ்க்கை வரலாறு, கல்வி, அறிவியல், ஆன்மீகம், இதழியல் எனப்பல துறைகளில் சாதனை படைத்தவர் கவியோகி சுத்தானந்த பாரதியார். “மொழிபெயர்ப்புத் துறை முன்னோடிகளுள் ஒருவர்” என்னும் பெருமையும் இவருக்குண்டு. வாழ்க்கையில் நம்பிக்கையூட்டக் கூடியதும் தொழில் சார்ந்ததுமான செய்முறைக் கல்விக் கொள்கையை வகுத்துத் தந்தவர் சுத்தானந்தர். அக்கல்வி தாய்மொழி வாயிலாகவே அமைய வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறினார். இவரின் […]

Read More

’மணிக்கொடி’யைப் பதிவு செய்தவர்’

  ( அரும்பாவூர் மு. சாஹிரா பானு )   ’கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடுமை இளமையில் வறுமை’ என்றார் ஒளவை. ராமையாவிற்குப் பிறப்பிலிருந்தே வறுமை பிடித்துக் கொண்டிருந்தது. தாய், தந்தை, உடன் பிறந்தோர் ஐவர் எனக் குடும்பம் பெரிதாக இருந்தது. அண்ணன்மார் நால்வரும் படிக்கவில்லை. படிக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால் சிறுவன் ராமையாவுக்கு மட்டும் எப்படியாவது படிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. வத்தலக்குண்டில் இருந்த ஜில்லா போர்டு நடிநிலைப்பள்ளியில் மூன்றாம் பாரம் […]

Read More

தெரிந்து கொள்வோம் வாங்க : ஆங்கிலம்

நம் அன்றாட வாழ்வில் பலவிதமான ஆங்கிலச் சொற்களை அதற்கான தமிழ் சொற்களை அறியாமலேயே பயன் படுத்தி வருகிறோம். நம்மில் பலருக்கும் அந்த வார்த்தைகளுக்குரிய தமிழ் சொற்கள் தெரியாது என்பது தான் உண்மை. ஆகவே தான் இங்கு நாம் உபயோகித்து வரும் பல ஆங்கில சொற்களுக்கு நவீன தமிழ் சொற்களை பதிவாகத் தருகிறேன். நாமும் தெரிந்து நம் பிள்ளைகளுக்கும் கற்பிக்கலாமே! தேவையுள்ளோர் இதனை பிரதி எடுத்து வைத்துக் கொள்ளலாம்.   நவீன தமிழ் அருஞ்சொற்பொருள்/GLOSSARY OF MODERN TAMIL […]

Read More

கவிதை போட்டி

தமிழ் புலமை திறமையை வெளிபடுத்த சந்தர்ப்பம்,வாழிய உலக நல நற்பணிமன்றம் பழனியில் நடத்தும் தமிழ் கவிதை போட்டி தலைப்பு சுற்று சூழல் சீர்கேடும்- தீர்வுகளும் கவிதை நூல்வடிவில் ஆக்கம் பெற நிபந்தனையின்றி தன்களுக்குசம்மதம் என இணைப்புகடிதம் , கவிதை ஆ-4 அளவு பேப்பரில் இர்ண்டு பக்கங்களுக்கு மிகாமல் 30-06- 2013 ம் தேதிக்குள் அனுப்பவேண்டிய முகவரி இல ஞானசேகரன் , தலைவர், வாழிய உலகநல நற்பணி கன்றம், 7- மங்கலம் தெரு, பழ்னி அலைபேசி: 94422 41622 […]

Read More

எம்.ஜி.ஆரின் கடைசி நாட்கள்…

                                                                                                                                                                                      Written by எம்.குணா                                                                                                                                                                                                           மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு வருகிற டிசம்பர் 24&ம்தேதி  23&ஆண்டு நினைவுநாள். உறவுகள் முகத்தைக்கூட மறைந்தவுடன் மறந்துவிடுகிற  மக்கள், எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ‘தலைவா… உங்களை  மறந்தால்தானே நினைப்பதற்கு…’ என்று சுவரொட்டி ஒட்டி தங்களின்  பாசவெளிப்பாட்டைக் காட்டுகின்றனர். மறைந்த அந்த மக்கள் தலைவனின் கடைசி  நாட்கள் பற்றிய ஒரு சின்ன அலசல்… 1987 டிசம்பர் 2… ராமவரம்  தோட்டம். ஆறு மாச ஆண் குழந்தையோடு நடிகர் ராஜேஷ் வந்தார். […]

Read More

மூளைச் சூடு – ஈரோடு கதிர்

கோடை ஒரு அசாதாரண சூழலைத்தான் பரப்பிக் கொண்டேயிருக்கின்றது. வெயிலைத் தாங்கமுடியவில்லை என்று சொல்வது ஒரு காலத்தில் ஆடம்பரமாக இருந்திருக்கலாம். இப்போது எவராலும் தாங்க முடியவில்லைதான். உண்மையில் வெயில் அத்தனை சுடுகிறதா அல்லது வெயிலை, வெக்கையைத் தாங்கும் குறைந்தபட்ச தாங்குதிறனையும் நாம் இழந்துவிட்டோமா எனத்தெரியவில்லை. கை பேசியில் பேசிக்கொள்வோரிடம் நாளுக்கு நாள் வழக்கத்திற்கு மாறாக குரல்கள் உரத்து ஒலிப்பதாக உணர்கிறேன். சட்டெனக் குரல் உயர்ந்து “நான் சொல்றத முதல்ல கேளு” என்பது போன்ற சண்டைக்கான அனுமதி நுழைவை எளிதாக வழங்கிவிடுகின்றன. நேர […]

Read More