சுன்னத் செய்வதன் நன்மைகள் ஆய்வு முடிவுகள்

சுன்னத் செய்வதன் நன்மைகள் ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தும் மருத்துவ ஆய்வுகள் டாக்டர் த முஹம்மது கிஸார் மருத்துவ அறிவியல் என்ன என்றே அறிந்திராத 1400 ஆண்டுகளுக்கு முன்பே முஸ்லிம்கள் தங்கள் திருத்தூதர் கற்றுத்தந்த வாழ்வியல் வழி என்று தொன்று தொட்டு கத்னா எனப்படும் ஆண் உறுப்பின் முன்தோலை நீக்கும் முறையை கையாண்டு வந்தனர். இன்று வரை அதைக் கடைப்பிடித்தும் வருகின்றனர். இன்று மருத்துவ அறிவியல் அபரிவிதமான வளர்ச்சி கண்டபோது, உலகிலே குழந்தை மருத்துவத்தின் மிக உயர்ந்த அமைப்பான […]

Read More

”வரதட்சணை ஓர் சமூகக் கேடு”

  ( மெளலானா அல்ஹாஜ் M. சதீதுத்தீன் பாகவி MFB, AU. ) தலைமை இமாம், அடையார் பெரியபள்ளி – சென்னை 20 )   இஸ்லாமியத் திருமணங்களின் மேன்மை :- உலகில் தோன்றிய மதங்கள் – மார்க்கங்கள் பலவும் திருமணம் புரிந்து வாழ்வதை வற்புறுத்தினாலும் திருமணத்தின் பல்வேறு உட்பிரிவுகளையும் சட்டங்களையும் தெளிவுற வகுத்துத் தந்த பெருமை இஸ்லாத்தை மட்டுமே சாரும். ஒரு பெண்ணைப் பெற்றவன் அவளை மணமுடித்து தருவதற்குள் சக்கையாய் பிழியப்படுகின்ற இன்றைய வரதட்சணை உலகில் […]

Read More

இது விற்பனைக்கு அல்ல !

  ( காயல் யூ. அஹமதுசுலைமான் )   அது ஒரு வெயில் கொளுத்தும் மதிய வேளை மணி 1.30 க்கும் 2க்கும் இடையில் இருக்கும். ஆங்காங்கே காணும் இடமெல்லாம் கானல் இடம்பெயர்ந்து கொண்டிருந்தது. பெரிய போக்குவரத்து நெரிசல் என்றுகூட சொல்ல முடியாது. ஆனால் நான்கு முனை சிக்னல் கொண்ட சாலைகள். ஒரு முனையில் இருந்து வாகனங்கள் நேர் ரோட்டில் சீறிக்கொண்டும் மறுமுனையில் உள்ள வாகனங்கள் எல்லாம் ‘யு’ டேர்ன் போட்டுக் கொண்டுமிருந்தன. பாதசாரிகளோ பச்சை மனித சிக்னலுக்காகக் […]

Read More

பழுதாகி நிற்கும் அரசு பஸ்கள் முதுகுளத்தூர் பயணிகள் தவிப்பு

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்கள், பராமரிப்பின்றி பழுதடைந்து நடுரோட்டில் நிற்பதால், குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் பயணிகள் தவிக்கின்றனர்.முதுகுளத்தூர் அரசு போக்குவரத்து கிளை டெப்போவில் 46 பஸ்கள் மதுரை, ராமேஸ்வரம், தஞ்சாவூர், வேளாங்கன்னி, கோயம்புத்தூர், திருநெல்வேலி உட்பட பல பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள், போதிய பராமரிப்பின்றி உள்ளன. மழை காலங்களில் குடையுடன் பயணிக்க வேண்டி உள்ளது. கோடை காலங்களில் டயர்கள் பஞ்சராகி நடுரோட்டில் நிற்கின்றன. சில பஸ்களில் இன்ஜின் பழுதாகி, குறிப்பிட்ட […]

Read More

இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே!

By இலக்குவனார் திருவள்ளுவன் First Published : 13 May 2013 11:08 AM IST தாய்மொழி வாயிலாகப் பயில்பவர்கள் தம் தேசிய இனத்தை உணர்ந்து, எழுச்சியுடன் திகழ்கிறார்கள்.  அயல்மொழி வாயிலாகப் பயில்பவர்கள் அடிமை எண்ணத்தில் ஊறித், தன் முனைப்பின்றிப் பெயரளவிற்கு வாழ்கிறார்கள். எனவேதான் கல்வியாளர்களும் மக்கள் நலம் நாடும் அரசியல் தலைவர்களும் தாய்மொழி வழிக்கல்வியை வலியுறுத்துகிறார்கள்.   கல்விக்கு அடிப்படை கேட்டல் ஆகும். தெய்வப்புலவர் திருவள்ளுவர்,செல்வத்துள்  செல்வம் செவிச்செல்வம்  (திருக்குறள் 411) என்றதும் அதனால்தான்.          கற்றிலன் ஆயினும் […]

Read More

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்..

புகழ் என்பதொரு உச்சாணிக் கொம்பின் தேன் மாதிரி. எட்டியெடுக்க தேனடை விட்டு உதிரும் ஈக்கள் வந்து மனிதரைச் சுற்றிக் கொள்வதைப் போலவே; புகழ் கொண்டோரைச் சுற்றி தலைகொத்தும் மனிதர்கள் ஏராளமாய் திரிகின்றனர். தான் வென்றதைக்காட்டிலும் பிறர் தோற்ற வலி ஆழமான வடுவைக் கொண்டதென புரியாதோர் தலைகொத்தும் ஈக்களை தானே தேடிக்கொள்கின்றனர். தேடித் தேடிக் கொணர்ந்து சிறுகச் சிறுகச் சேகரித்த தேனியின் உழைப்பைப் போலவே தனது லட்சியத்தை வெல்லப் போராடும் மனிதர்களின் உழைப்பும் கவனத்தில் கொள்ளத்தக்கது. ஒரு வெற்றி என்பது […]

Read More

கழுகுமலை ஒரு கலைக்கருவூலம்

  மூதறிஞர் கு, அருணாசலக் கவுண்டர் கோயில்பட்டியிலிருந்து சங்கரன் கோயில் பாதையிலே பன்னிரண்டாவது மைல் கல்லில் கரிசல் காடும் கரம்பும் சூழ்ந்த புன்செய் பிரதேசத்திலே கழுகுமலையைக் காணலாம்.  மலை என்பது வெறும் பெயரளவிலே தான்.  சுமார் 300 அடி மொட்டைப்பாறையே அது.  அதன் உச்சியிலே தெரிவது பிள்ளையார் கோயிலும் தீபத்தம்பமுமே.  மலை மீதேறி அங்கே செல்வதற்குச் சரியான பாதை இல்லை.  சற்று சிரமத்துடன் தான் செல்லவேண்டும்.  வழியிலே ஒரு குகை தென்படுகிறது. இது போன்ற மலைச்சரிவுகளிலே பாறைகளில் […]

Read More

வாழ்வு மேம்பட ……………

  ( நீடூர் ஏ.எம். சயீத் )   உலகின் மனிதர்கள் யாவரும் சகோதரர்கள் அவர்கள் அனைவரும் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான். பல்வேறு பிரிவினர்களாக சமுதாயத்தினர் வாழ்ந்தாலும் வாழ்க்கையின் நோக்கத்தை அறியாமல் செயல்படுகிற போது தவறுகள் நிகழ்கின்றன. அரசியல்வாதிகளில் பெரும்பாலோர் கொள்கைகளை அறியாதவர்களாக இருக்கிறார்கள். பொருள் சேர்க்கும் துடிப்பில் உள்ளவர்கள் உழைக்க சோம்பல் படுகிறார்கள். மனசாட்சி இல்லாதவர்கள் இன்பத்தைத்தேடி அலைகிறார்கள். கல்விகற்றல் வணிகச் சரக்காகி விட்டதால் ஒழுக்கநெறிகள் உதாசினப்படுத்தப்படுகின்றன. அறிவியல் வளர்ச்சியில் மனிதம் காணாமல் போகிறது. […]

Read More

நெய்வேலி அனல் மின் நிலையம் உருவாக காரணமானவர் காயிதெ மில்லத் !

சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து – நெய்வேலி அனல் மின் நிலையம் உருவாக காரணமானவர் காயிதெ மில்லத் !     தமிழ்நாட்டில் எத்தனையோ மகத்தான தலைவர்கள் உருவானார்கள். ஆனால், அவர்களில் கண்ணியமிகு காயிதெ மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களைப் போல் தீர்க்கதரிசனத்துடன் அரசியல் அரங்கில் வலம் வந்தவர்கள் ஒருசிலர் தான். ஒரு தலைவன் என்பவனின் அடையாளம் காலங்களைக் கடந்த பின்னும் சிந்தனையில் உருவான ஒரு கருத்தின் செயல்களால் அதன் பயன்களால் தன் கருத்தை நிலை பெற்றிருக்கச் […]

Read More

மகத்தானவனின் உதவியை யாசியுங்கள் !

அழைப்பியல் மகத்தானவனின் உதவியை யாசியுங்கள் ! ( இக்வான் அமீர் )   நபிகளார் கொண்டுவந்த சமூகப் புரட்சியின் போது வெறும் ஓராயிரம் பேர் மட்டுமே இருந்தனர். ஆனால் அந்த ஆயிரம் பேரோ இறைவனுக்காகவும், இறைவனின் திருத்தூதருக்காகவும் எதையும், யாரையும், எப்போதும் இழக்கத் தயாராக இருந்தனர். இந்த இறைநம்பிக்கையின் சிகரங்களில் தான் வெற்றி கிடைத்தது. இறைவன் அந்த நல்லடியார்களை ஆட்கொண்டான். அருள் மாரி பொழிந்தான். மாபெரும் வெற்றி தந்தான். பூமியெங்கும் இஸ்லாம் என்னும் சமாதானம் தழைக்கச் செய்தான் […]

Read More