மரபுடைமை நிலையம் சிங்கப்பூர் நாகூர் தர்கா – ஜே.எம். சாலி —

15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித மகான் சையது ஷாஹுல் ஹமீது காதிர் அவர்களின் நினைவு சின்னமாக இந்திய முஸ்லிம் சமூகத்தினர் 1827 – 1830 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தெலுக் ஆயர் ஸ்திரீட்டில் நாகூர் தர்காவைக் கட்டினர். சிங்கப்பூரர் நாகூர் தர்கா  1974-ஆம் ஆண்டு நவம்பர் 29- ஆம் தேதி தேசி நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. தர்காவை மறுசீரமைக்கும் திட்டம் 1994 ஆம் ஆண்டில் பரிந்துரைக்கப்பட்டது. ஹாஜி ஷரஃப்தீன் தலைமையில் அமைந்த 18 உறுப்பினர்களைக் கொண்ட […]

Read More

தியாகத் திருநாள்!

தியாகத் திருநாள்! எண்ணற்ற தியாகங்கள் இவ்வையத்தில் வரலாற்றிலும் வாழ்விலும்!நாட்டுக்காக மொழிக்காக உறவுக்காக நட்புக்காக காதலுக்காகவென! உயிர் உறவுகள் உடமைகள் சொத்துக்கள் சுகங்களெனப் பலவற்றின் தியாகம்! ஆயினும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்ப் போற்றப்பட்டு வரும் ஒரே தியாகம் இப்ராஹீம்(அலை)நபி அவர்களுடையது தான்! தள்ளாத முதுமையில் தனக்குப் பிறந்த ஒரே மகனை இறைவனின் ஆணையேற்றுப் பலிப்பீடம் ஏற்றியது! சுய நலமே சூழ்ந்திருக்கும் இவ்வுலகில் நாம் தியாக உணர்வு பெற்றிட உணர்த்தும் நாளே தியாகத் திருநாள் பக்ரீத்!! -இமாம்.கவுஸ் மொய்தீன் drimamgm@hotmail.com

Read More

மனிதநேயம் பிறக்கட்டும்

புத்தாண்டு ஒவ்வொருமுறையும் பிறந்துக் கொண்டு தானிருக்கிறது மனித வளர்ச்சிகள் மேம்பட்டுக் கொண்டுதானிருக்கிறது… ஆண்டுப்பிறப்பில் ஆனந்தம் காணுமளவு மனித நல்குணம் பிறக்க அது சிறக்க ஒவ்வொருவரும் முனைவோம்… மகிழ்வோம் முன்னேறட்டும் மனிதநேயம்…! வாழ்த்துக்கள் 2009 கிளியனூர் இஸ்மத் kiliyanurismath@gmail.com

Read More

ஒற்றுமைக்கு ஒரு சம்பவம்

ஹஜ் பெருநாள் சிறப்புக் கட்டுரை ஒற்றுமைக்கு ஒரு சம்பவம்                  ( ஹாஜி உமர் ஜஹ்பர் ) அகில உலகம் முழுதும் – ஒவ்வொரு நாட்டில் இருந்தும் புறப்பட்டுச் சென்ற புனித ஹாஜிகள் அனைவரும் இன்று புனித கஃபாவை வலம் வந்து புண்ணியங்களைச் சேர்த்துக் கொண்டிருக்கின்றனர் ! சவூதி அரேபிய நாட்டின் ஹிஜாஸ் மாநிலத்தில் புனித மக்கா நகரில் தான் கஃபா புனித ஆலயம் கம்பீரமாக வீற்றிருக்கிறது. கஃபாவின் நீண்ட நெடிய வரலாற்றில் எத்தனையெத்தனையோ சரித்திரச் சம்பவங்கள் […]

Read More

வெள்ளைப் பூக்களின் … பயணம் !

  ‘பொற்கிழி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி அலைபேசி : 99763 72229 ஹஜ்ஜுக்குச் செல்வோரும் உம்ராவுக்குச் செல்வோரும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள் !     அதன்படி, புனித ஹஜ்ஜுக்குப் புறப்படும் வெள்ளைப் பூக்களே ! எதுவும் எனதில்லை எல்லாமே உனது என்றே எல்லாம் துறந்து ஏகனே கதியென்று செல்லும் இறைக் காதலர்களே …!     உங்கள் தாகம் புரிகிறது பாலைவனமே …….. தாகமாய் படுத்திருக்க அந்தப் பாலைவனச் […]

Read More

இலங்கும் இஸ்லாமிய இல்லறம்

  தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் திருமலர். எம்.எம். மீரான் பிள்ளை முன்னாள் துணை முதல்வர் & தமிழ்த் துறைத் தலைவர் முதனிலை ஆராய்ச்சியாளர் யு.ஜி.சி. முதுநிலை ஆய்வுத் திட்டம் பல்கலைக் கழகக் கல்லூரி திருவனந்தபுரம் செல் : 94950 11317   உள்ளடக்கம் 1 இல்லறம் பற்றிய இறைமறை நிறைமொழிகள் 2. இல்லறம் பற்றிய இறைநபி இன்மொழிகள் 3. திருநபியின் திருமண வாழ்த்து இறைஞ்சுதல் 4. திருமண ஒப்பந்த திருவாய் வாழ்த்து வரிகள் 5. ஆண் பெண் […]

Read More

வசந்த காலம்

  திருமலர் மீரான்   ரமலானுல் முபாரக் புனித காலம் இறையருள் குறிஞ்சிகள் பூத்துக் குலுங்கும் வசந்த காலம் !   விண்ணவர் குயில்கள் தீன் ராகம் இசைக்க மண்ணகம் தேடும் அபூர்வ காலம் !   கருணை மனுக்களைக் கரங்களில் ஏந்தித் தெளபாவிற்காய் வரிசையாய் நிற்கும் பாவாத்மாக்களின் மனுநீதிக் காலம் !   பாதகச் செயல்களைச் சுமந்து தவிக்கும் ஐம்பொறிகளின் ஓய்வின் காலம் !   இதய தாமரைகள், திருமறைக் கதிர்களால் மலர்ந்து சிறக்கும் உதய […]

Read More

ரமளான்

  ( ஆலிம் புலவர் எஸ். ஹுஸைன் முஹம்மது )   ரமளான் பிறை வானில் தெரிந்தது பேஷ் இமாம் தொழுகையை முடித்து ஸலாம் கொடுக்கத் திரும்பினார் முன் வரிசையில் எல்லாமே புதுமுகங்கள் !   தெருத்தெருவாக தப்ஸ் அடித்து மக்களை ஸஹருக்கு எழுப்பிவிட்ட பக்கீர்ஷா வீட்டிற்குள் போய் உறங்கினார் நோன்பு பிடிக்காமல் !   வாழ்நாளில் ஒரு நோன்பு கூட பிடித்திராத மர்ஹூம் ஊனா மூனாவின் நினைவாக அவர் மகன் நோன்பு திறக்க நோன்புக் கஞ்சி […]

Read More

திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிற‌து

ர‌ம‌லான் வ‌ருகிற‌து ! ந‌ல‌ம‌ள்ளி வ‌ருகிற‌து ! க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக் கைகோர்த்து வ‌ருகிறது ! ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்று தீர்மான‌ம் செய்ய திருநோன்பு வ‌ருகிறது அருளாளன் அல்லாஹ்வின் அன்பள்ளி வ‌ருகிறது ! திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிறது ! த‌க்வாவை கொஞ்சம் த‌ட்டிடவே வ‌ருகிறது ! ஹக்கன‌வ‌ன் க‌னிவையும் அறிவிக்க வ‌ருகிறது ! அருமை நாயகம் (ஸல்) அறிவித்த‌ நல் அம‌லை அருமையாய் நாம் ஏற்க அழைப்பாக வ‌ருகிற‌து ! பத்திய மாத‌மென்று பறைசாற்றி […]

Read More

துபையில் பணி வாய்ப்பு – ஒரு பார்வை

  –    முதுவை ஹிதாயத் –   துபை – பெரும்பாலான இளைஞர்களின் கனவு நகரம். உலகில் வளர்ந்து வரும் முன்னணி நகர்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராய் உயர்ந்து நிற்கும் துபையும் ஒன்று. வளைகுடா நாடுகளின் பெரும்பாலான நகரங்கள் எண்ணெய் வளம் மற்றும் அவை சார்ந்த தொழில்துறை நம்பியிருந்தாலும் துபை எண்ணெய் வளம் சார்ந்த தொழில்துறை மட்டுமல்லாது பல்வேறு பிற தொழில்துறைகளில் உயர்ந்து நிற்கிறது. பன்னாட்டுத் தொழிலதிபர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் முகமாக Free […]

Read More