சாதனை

  காரைக்குடி பாத்திமாஹமீத், ஷார்ஜா   வானத்தை வில்லாக வளைப்பது சாதனையல்ல, வறியவர்களின் ஏழ்மையைக் களைவதே சாதனை !   தண்ணீர்த் தொட்டிகள் அமைப்பது சாதனையல்ல, ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பதே சாதனை !   இலவச உணவு எப்போதும் வழங்குவது சாதனையல்ல, இல்லாதாரின் கனவுகளை நனவாக்குவதே சாதனை !   கொடிகட்டிப் பறப்பது என்றென்றும் சாதனையல்ல, ஏழையொருவனுக்கு எழுத்தறிவித்தலே உயர்ந்த சாதனை !   பெண்மையை அடக்கி ஆள்வது சாதனையல்ல, நன்மதிப்புக் கொடுத்து மேன்மை காண்பதே சாதனை […]

Read More

இயற்கையைப் பார்ப்போம் !

காரைக்குடி பாத்திமா ஹமீத், சார்ஜா   மது ஒழிப்புப் போராட்டம் மனிதர்களுக்குத்தான் ! எந்தவண்டும் மதுவுண்ட மயக்கத்தில் யாருக்கும் கஷ்டங்கள் கொடுப்பதில்லை !   சாதிச் சண்டைகள் என்றென்றும் மனிதர்களுக்குத்தான் ! எந்தச் சேவல்களும் மதத்திற்காக சண்டைகள் போடுவதில்லை !   தீண்டாமை என்பது மனிதர்களுக்குத்தான் எந்தத் தென்றலும் யாரையும் தீண்டாமல் விடுவதில்லை !   ஏற்றத்தாழ்வுகள் என்றென்றும் மனிதர்களுக்குத்தான் ! எந்த மழையும் பணக்காரனுக்கு மட்டும் பெய்வதில்லை !   ஏமாற்றுதலும் எதிரிகளும் மனிதர்களுக்குத்தான் ! […]

Read More

நிழலும் நிஜமும்

  என்ன இந்த வாழ்க்கையென்று அலுத்துக் கொள்ளும் வேளைகளில் நிழலான சில காட்சிகள் என்கண் முன்னால் !   அடுத்தவீட்டு வாசலில் அணைத்தகைக் குழந்தையோடு அழுக்கடைந்த உடையோடு அன்னம்கேட்டிடும் பெண்ணொருத்தி ! வாழ்க்கையின் நிஜம் உணர்த்தினாள் !   கல்லூரியில் படிக்கும்மகனை காலையில் எழுப்பும்போது கனமான அவன் எதிர்காலம் கண்முன்னே நிழலாக !   தெருவிளக்கின் கீழே திறந்தபுத்தகம் கையோடு தேர்விற்காக படிக்கும் திண்ணைவீட்டுப் பையன் ! வாழ்க்கையின் நிஜம் உணர்த்தினான் !   கையில் பெட்டியுடன் […]

Read More

கல்வி

  கல்லாய் இருந்த மனிதனை உயிர்சிலையாய் மாற்றியது கல்வி ! மரமாய் இருந்த மனிதனை உயிர்ச்சிற்பமாய் மாற்றியது கல்வி !   மண்ணாய் இருந்த மனிதனை மாணிக்கமாய் மாற்றியது கல்வி ! மலையாய் இருந்த மனிதனை மரகதமாய் மாற்றியது கல்வி !   காடாய் இருந்த மனிதனை கலை ஓவியமாய் மாற்றியது கல்வி ! பாலையாய் இருந்த மனிதனை சோலைவனமாய் மாற்றியது கல்வி !   பட்டுப்போய் இருந்த மனிதனை பசுமையாய் மாற்றியது கல்வி ! சேற்று […]

Read More

அன்பு

  அடைக்கும்தாழ் தேடுகிறேன் அழிவில்லா அன்பிற்கு ! மடைதிறந்ததுபோல் வரும் அன்பிற்கு தடுக்கும் சுவர் தேடுகிறேன் !   எல்லாம் வல்ல இறைவன் மேல்கொண்ட அன்பு இப்பூவுலகை விட்டு நீங்கிய பின்பும் !   பெற்றோரிடம் கொண்ட அன்பு பிறந்தது முதல், உடன்பிறந்தோரிடம் கொண்ட அன்பு உயிர்த்தெழுந்தது முதல் !   சிநேகிதிகளிடம் கொண்ட அன்பு சேர்ந்து படித்தநாள் முதல் !   கணவரிடம் கொண்ட அன்பு காதலால் கைபிடித்த நாள் முதல் !   பிள்ளைகளிடம் […]

Read More

உறவுகள்

  வாழ்க்கையெனும் கப்பலில் பயணம்நாம் செய்திட துடுப்பாக வேண்டும் உறவுகள் !   வசந்தமான நம்வாழ்க்கை வளமாக அமைந்திட தென்றலாக வேண்டும் உறவுகள் !   முகத்திற்கு முன்சிரித்து முதுகில் நம்மைக் கொல்லும் மூடத்தனமான உறவுகள் வேண்டாம் நமக்கு !   கலங்கிய பொழுது கைகொடுத்து வாழ்க்கைச் சக்கரம் இனிதாய்ச் சுழல அச்சாணியாக வேண்டும் உறவுகள் ! தொடக்கத்தில் வந்த உறவுகள் தொலைந்து போகலாம், பாதியில் வந்த உறவுகள் மனதில் என்றென்றும் பதிந்து நிற்கலாம் !   […]

Read More

மெளலவி ரஃபீஉத்தீன் பாகவி மறைவு!

    தஞ்சை ஆற்றங்கரை பள்ளிவாசல் தலைமை இமாம் ஆகவும் மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளிலும் இமாம் ஆகவும் பணியாற்றிய மார்க்க அறிஞர் மெளலவி ரஃபீஉத்தீன் பாகவி அவர்கள் இன்று (13-08-2013) காலை கோலாலம்பூரில் வபாத்தானார் (இன்னா லில்லாஹி…) என்ற செய்தி பெருத்த துயரத்தைத் தமிழ்கூறு ந்ல்லுலகில் நிறைத்தது.   அமைதியின் இருப்பிடமாகத் திகழ்ந்த மெளலானாவின் உயிர் உறக்கத்திலேயே அமைதியாகப் பிரிந்தது  குறிப்பிடத்தக்கது. தெளிந்த ஞானம், தீர்க்கமான தொலைநோக்கு, பரந்த அறிவு, செறிந்த சிந்தனை, நேர்கொண்ட பேச்சு, […]

Read More

இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரம்!

கீழை ஜஹாங்கீர் அரூஸி -தம்மாம் . நம் பாரத நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்று 66ஆண்டுகள் நிறைவு பெற்று67வது ஆண்டில் அடி எடுத்து வைப்பதை எண்ணி பெருமிதம் கொள்ளாத இதயங்கள் இருக்க முடியாது !  உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் இனம், மதம், மொழி, கலாச்சாரம் இவைகளில் வேறுபட்டிருந்தாலும் இந்தியன் என்ற உணர்வால் ஒருங்கிணைக்கப்பட்டவர்கள் நாம் ! “வேற்றுமையில் ஒற்றுமையே “ இந்தியாவின் தனிச் சிறப்பாகும். நாட்டின் சுதந்திரத்தைப்பற்றி உலகம் முழுவதும் வாழும் பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், […]

Read More

ஆங்கிலக் கவிதை

Dear All, Assalaamu alaikkum, I would like to inform you that you may see my English Poems in the following blog which was created yesterday. Alhamdulillah. http://gardenofpoem.blogspot.ae/ As my teachers and well-wishers urge me to join with INTERNATIONAL POETS’ ASSOCIATION, I should keep like this separate blog in English Language. My Tamil Kavithaigal will be […]

Read More

மீன் வாங்கப்போறீங்களா?…

ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதைவிடவும் மீன் வகைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்… அது உண்மையும்கூட… மீனில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்களையும் சில பயன்களையும் பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம்… மீனின் மொத்த எடையில் சராசரியாக 18% புரதம் உள்ளது. ஏனைய புரதங்களைப் போன்றே மீன் புரதமும், உடலின் ஆற்றலுக்கு தேவையான சக்தியை அளிக்கவும், உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கு தேவையான அமினோ அமிலங்களைக்கொடுக்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் […]

Read More