வாழ்க்கை காலச்சக்கரம் சுழல்வது உங்கள் கையில்!

(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்.(ஓ) ஒரு ரயில் தன் இலக்கினை நோக்கி நகர்வதிற்கு சக்கரங்கள் தேவைபடுகின்றனவல்லவா? அதேபோன்று ஒரு மனிதன் தன் வழக்கை வெற்றிப் பாதையில் நடை போடுவதிற்கு அடித்தளமாக குறிகோள்கள் தேவைப்படுகின்றன.ஒரு தடகள வீரர் ஒலிம்பிக்கில் 10000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்திருக்கலாம், ஆனால் அவன் ஒலிம்பிக்கில் ஓடுவதிற்க்காக எடுத்துக்கொண்ட பயிற்சியும் முயற்சியுமே பிரதானமாகும்.நாம் சிறியவர்களாக இருந்தபோது சைக்கிள் பழகும்போது கீழே விழுந்து கை, கால்களில் அடிபடுகிறது. அதற்காக சைக்கிள் பழகாமல் இருந்து விடுகிறோமா […]

Read More

வாலிப வயதை வீணாக்காதீர் !

           ( முபல்லிகா ஏ. நஜாத் முனவ்வரா, முதுகுளத்தூர் ) ‘’எவருக்காவது பிள்ளை பிறந்தால் அந்தப் பிள்ளைக்கு அழகிய திருநாமம் சூட்டவும். நல்ல ஒழுக்கங்களை கற்றுக் கொடுக்கவும். அவர் வாலிப வயதை அடைந்துவிட்டால் அவருக்குத் திருமணம் முடித்து வைக்கவும். பருவம் அடைந்த பின்னரும் (அலட்சியமாக இருந்து) மகனுக்கு மணமுடித்து வைக்கவில்லை என்றால் (அதன் காரணமாக) அவன் பாவத்தில் வீழ்ந்து விட்டால் அந்தப் பாவம் அவன் தந்தையையே சாரும்’’   என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் […]

Read More

இதயங்களின் இருப்பிடம் முதுகுளத்தூர்

எத்தனையோ தேசங்கள் இயன்றளவு பார்த்தாகிவிட்டது ஆறோடும் ஊர்களையும் நீரோடும் சோலைகளையும் அருவிபாயும் ஓசைகளையும் அலைபாயும் கடலோரங்களையும் கண்களால் கண்டாகி விட்டது காதுகளால் கேட்டாகி விட்டது எங்களின் இதயத்திற்கு இதமாய் உள்ளங்களின் ஓய்வுத் தலமாய் எங்கள் ஊர்போல் எங்கும் இல என்பேன் சொல்லும்படி ஒன்றும் இல்லை சொல்லா திருப்பதற்கும் இல்லை வறட்சிதான் வறுமைதான் வாழ்வில் தானன்றி இதயங்களில் இல்லை நகரமா என்றால் இல்லை கிராமமா அதுவும் இல்லை இரண்டிலும் இடைப்பட்டது ஏறத்தாழ ஒரு சதுரகிலோ மீட்டர் ஏம் இதயங்கள் […]

Read More

இன்னுமா கைக்கூலி?

 இன்னுமா கைக்கூலி? ****************************************************************************************************************** அல்லாஹ் ஒருவனென         அவன்தூதர் முஹம்மதென சொல்லும் உறுதியினர்@         சுரண்ட நினைப்பதுவோ?       1 ஒப்புக்கோ மார்க்கம்?       ஊருக்கோ உபதேசம்? அப்பழுக்கை நீக்காமல்       அளப்பளக்கும் பேச்செதற்கு?   2 சமுதாய நடுநிலையும்        சன்மார்க்க நெறிமுறையும் அமுதாகும்; அதற்குள்        அழிக்கும் விஷக்கலப்பா?         3 “மார்க்கத்தில் பாதி”$யென         மதிக்கும் திருமணத்தில் பேர்த்துப் பணம்பறித்தல்        பெருங்கயமை ஆகாதோ?         4 நபிவழியாம் திருமணத்தை       நடத்துகையில் அதற்குரிய அபிவிருத்தி%,கைக்கூலி       யாலழுக்காய் ஆவதுவோ?         5 வேசிக்கும் பணம்கொடுப்பார்;          வீட்டு […]

Read More

பதவி ! ——— கவிக்கோ அப்துல் ரஹ்மான்

எத்தனை பதவிவெறி இந்த மனிதருக்கு ? செத்தால் அதையும் சிவலோக பதவியென்பார் ! பத்தெடுத்த மாதங்கள் பாரம் சுமக்காமல் தத்தெடுத்துப் பிள்ளைக்குத் தாயானால் பெருமையுண்டா ? வித்தெடுத்துத் தூவி வியர்க்காமல், உமிச்சிப்பி முத்தெடுக்க முந்தும் மூடர்க்கு உரிமையுண்டா ? தகுதி இலாதார்க்குத் தரலாமா உயர் பதவி? சகதிக்கு எதற்காகத் தங்க மணிக்கிண்ணம் ? தேனூறும் மலர் அமர்ந்தால் சிறப்படையும் கார்கூந்தல் பேனேறி ஆட்சி செய்தால் பெருமையுண்டா ? சேவலைப்போய் முட்டை அடைகாக்க முன்னமர்த்தி, முட்டையிடும் பெட்டைக்குக் கூவுகின்ற […]

Read More

கதிர்கள்

  பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, இளையான்குடி                         காப்பு   பாடிடும் கவிதையும் பற்றிடும் கொள்கையும் படர்ந்து நிற்க   நாடினேன் நின்னருள் நாயனே உதவுவாய் நலம்தா இறையோனே !   திறப்பு   எல்லா உலகும் ஏகமாய் காக்கும் அல்லாஹ் உனக்கே எல்லாப் புகழும் !   வல்லோன் நீயே அருளுடையாளன் ! நல்லோர்க் கென்றும் அன்புடையோனே !   […]

Read More

சேனா ஆனா – ஓர் இலக்கணம்

( ஏம்பல் தஜம்முல் முகம்மது  ) ஆனா ஆவன்னா தமிழுக்கு உயிரெழுத்து சேனா ஆனா? கல்விக்கு உயிரெழுத்து! பலதுறைக் கல்விக்கு உயிரெழுத்து புள்ளியுள்ள எழுத்து மெய்யெழுத்து. சேனா ஆனாவே பெரிய புள்ளி ! மெய்யாகவே வழங்குகிறார் அள்ளி ! அதனால் அவரைக் குறிக்கும் மேலான எழுத்திரண்டும் புள்ளி தேவைப்படாத மெய்யெழுத்து ! மெய்யானவரைக் குறிக்கும் மெய்யெழுத்து ! வள்ளல் இனத்திலும் வல்லினம் உண்டு. சேனா ஆனாவோ மெல்லினம்; நல்லினம் எப்போதும் நடுநிலையான மார்க்கப்படியே நடப்பதால் இவரும் இடையினம் […]

Read More

உலக அரங்கில் ஒரு உண்மை வரலாறு !

           (முதுவைக் கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர்)   ஒரு மனிதன் பிறந்தான், வளர்ந்தான், வாழ்ந்தான், இறந்தான் என்பது சரித்திரமல்ல ! இது ஒரு எதார்த்தம் தான் ! உலகில் பிறந்த மனிதன் எப்படி வாழ்ந்தான்? என்னென்ன சாதித்தான்? என்பது தான் சரித்திரம் ! சரித்திரம் படைத்த மனிதன் உலகம் உள்ளளவும் உலகினர் உள்ளங்களிலே சாகாமல் வாழ்ந்து கொண்டிருப்பான் ! இது நியதி ! உறுதி !! இந்தியப் பூமியைக் கண்டெடுத்த கொலம்பஸ்; விமானத்தைக் கண்டு […]

Read More

இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் – தமிழரும்.

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம்  மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும்  ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம்கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும். சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி பழைய தோற்றம் சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி புதிய  தோற்றம்      கட்டுமான அமைப்பு இந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பே ஒரு உதாரணமாக உள்ளது. இந்து கட்டிடக்கலையை […]

Read More

“நான் செய்தேன்” என்பதை ’நாம் செய்தோம்’ என்று மாற்ற வேண்டும்

“நான் செய்தேன்” என்பதை ’நாம் செய்தோம்’ என்று மாற்ற வேண்டும். ( டத்தோ ஹாஜி முஹம்மது இக்பால் ) ஒரு வியாபார நிறுவனத்தில் வேலையாட்கள் – சிப்பந்திகளைப் பல பகுதிகளாகப் பிரித்து மேலாண்மை நடக்கும். அதாவது, பல அங்கங்களாக நிறுவன நிர்வாகம் நடைபெறும். உதாரணத்திற்கு, விற்பனை, உற்பத்தி, வினியோகம், மனிதவளம், போக்குவரத்து, நிதி நிர்வாகம் என்ற பகுதிகள் இயக்கப்படும். சில அங்கங்கள் குறிப்பாக சந்தைப்படுத்துதல், விற்பனை போன்றவை வியாபாரத்தின் உயிர்நாடி அவை ஒழுங்காக இயங்காவிட்டால், அல்லது முறையாக […]

Read More