கவிதைகள் (All)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி உலக மொழிகளில் எழுதப்பெற்ற உயர்கவிதைகளின் தொகுப்பு

அருளன்பு பண்பில் நிகரற்ற உந்தன் திருப்பெயர் கொண்டு துவக்குகிறோம் அல்லாஹ்!
 
 
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி  உலக மொழிகளில் எழுதப்பெற்ற உயர்கவிதைகளின் தொகுப்பு”
 
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மதுல்லாஹ்).
 
அல்லாஹ்வின் இறுதித்தூதர் – அகிலத்தின் அருட்கொடை – அனைத்துலக  மக்களுக்கும் அழகான முன்மாதிரி – நம் இருலோக இரட்சகர் -ஈமான் கொண்ட இஸ்லாமியர் அனைவருக்கும் உயிருக்கும் மேலான – முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி பாடிப்பாடிப் பரவசம் கொண்டவர்கள் கோடிப்பேர். 
 
உலக மொழிகள் அனைத்திலும் அவர்களைப் பற்றிய கவிதைகளும் காவியங்களும் ஏராளம் ஏராளம்.  அவ்வகையில் உலக மொழிகளில் எழுதப்பெற்ற  உயர்ந்த கவிதைகளின் ஆங்கில – தமிழ் மொழிபெயர்ப்புக்கள் வரவேற்கப்படுகின்றன.
 
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களைப் பற்றி மிகச்சிறந்த கவிதைகள் என்று கருதத்தக்கவைகளைத் தொகுத்து அழகிய நூலாக உருவாக்கும் முயற்சி இறையருளால் நடைபெற்று வருகிறது.
 
ஆர்வம் உடையவர்கள் தாங்கள் படித்த – படித்ததில் பிடித்த – தங்கள் வசம் இருக்கின்ற அத்தகு கவிதைகளை எங்களுக்கு அனுப்பித்தந்தால் நலம்.
தேர்வுக்குழுவினர் தேர்ந்துஎடுக்கும் மிகச்சிறந்த கவிதைகள் நூலில் இடம்பெறும்.  மொழி – சமய பாகுபாடுகள் இல்லை.  எம்மொழி கவிதைகளாயினும் சரியே!
அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் மீது  பற்றுள்ள அனைவருக்கும் இம்மடலை நீங்கள் அனுப்பலாம்.

வஸ்ஸலாம்.
 
அன்புடன்,
அத்தாவுல்லா (vfathavullah@yahoo.com)
திருச்சி சையது (trichysyed@yahoo.com)
(ஒருங்கிணைப்பாளர்கள்)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button