கட்டுரைகள்

பேரறிஞர் அண்ணா – என்றென்றைக்கும் தேவைப்படும் அணையா விளக்கு

பேரறிஞர் அண்ணா – என்றென்றைக்கும் தேவைப்படும் அணையா விளக்கு :

  • Dr.ச.தெட்சிணாமூர்த்தி
  • பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று…
  • சேர்த்து வைத்த தம் அறிவால், அவ்வறிவால் சேர்த்துக் கொண்ட ஓர் பரந்துபட்ட இளைஞர் கூட்டத்தால், அதுவரை உலகங்காணாத ஓர் ஒப்பற்ற புதிய தலைமுறை அரசியலுக்கு, வித்திட்டு சென்றவர் அண்ணா.
  • சென்னையின் கண்கள் வழியே டெல்லியைப் பார்த்தவர் அண்ணா.
  • மாநில சுயாட்சியை ‘அண்ணா ஆட்சி ‘ என்று அழைத்தாலும் அரசியல் அறிவியல் அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
  • மொழி வழி ஒருங்கிணைப்பால் சாதியத்தை, மதத்தை தூர வைத்து, மக்களை ஒரு புள்ளியில் பெருஞ் சக்தியாக அணிதிரட்ட முடியும் என்பதற்கு உலக வரலாற்றில் பெருஞ்சாட்சியாய் ஓங்கி உயர்ந்து நிற்பவர் அண்ணா.
  • எளியவனை அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர்த்தி, அமைச்சர்களாக்கி,அவனைக் கொண்டே, அவனுக்கான திட்டங்களை தீட்டச் செய்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியவர் அண்ணா.
  • ஆதித்தமிழனின் வேரான பண்புகளான “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதையும், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதையும் தமிழ் மண்ணிலிருந்து எந்நாளும் மறையாவண்ணம் அழுத்தமாய் அரசியல் வழி பதித்து விட்டுச் சென்றவர் அண்ணா.
  • இந்தியா என்பது தேசிய இனங்களின் கூட்டமைப்பு, பல்வேறு இனம், மொழி, கலாச்சாரம் நிறைந்த பன்மைத்துவம் மிக்க நிலம், இங்கு அனைவரின் உணர்வுகளும் பாரபட்சமின்றி சமமாய் மதிக்கப்பட வேண்டும் என்ற உணர்வு எல்லா மாநிலங்களிலும் இன்று சுடர் விட அண்ணாவே என்றென்றைக்குமான பொறி..
  • அண்ணா என்றென்றைக்கும் தேவைப்படுகிறார்.. இன்று இன்னும் அதிகமாய்…
  • Dr.ச.தெட்சிணாமூர்த்தி,MBBS.,DDVL.,
    தோல் நோய் மற்றும் அழகுக்கலை மருத்துவர்,
    தலைவர்,
    திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு,
    அறந்தாங்கி
    9159969415

03 – 02 – 2025

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button