கவிதைகள் (All)
இந்திய குடியரசு தினம்
இந்திய குடியரசு தினம்
இனிதாய் கொண்டாடும் மனம்..!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அகிம்சை வழியில் போராட்டம்
அனைத்தும் வெற்றியின் நீரோட்டம்//
ஆங்கிலேயரின் சர்வாதிகார ஆட்சி
ஆணவத்தால் அடிமைப்பட்டு போச்சு//
இந்திய அரசியலமைப்பு சட்டம்
இனிதாய் நிறைவேறியது நித்தம்//
ஈகையில் கிடைத்தது குடியரசு
ஈர்க்கும் நாளாது மக்களரசு//
தியாகிகளின் நினைவுகளை போற்றுகின்ற
தீர்க்கமான தலைவர்களே சமர்ப்பனம்//
ஜனவரி 26-ரில் ஒப்பந்த கைஎழுத்து
ஜனங்களுக்கு மரியாதை தருகின்ற முதலெழுத்து//
வெற்றிக்கு வித்திட்ட பாரதமிது
வெளிப்படையாக உயிர்விட்ட நேரமிது//
சுதந்திர காற்றை சுவாசிப்போம்
சுபிச்சமாய் போராளிகளை நேசிப்போம்//
அபிவிருத்திஸ்வரம்.
தாஜ்.நியாஜ் அஹமது…!துபாய்…!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹