General News
புகை பிடிப்பதனால் ஏற்படும் தீமைகள் ஏராளமானவை உண்டு. அந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருக்கிறது முடி கொட்டும் பிரச்சினை.
புகை பிடிக்கும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நபர்களை ஆய்வு செய்து பார்த்ததில், அதிகம் புகைபிடிக்கும் நபர்களுக்கு முடி கொட்டுதலுக்கு காரணமான நோய் ஏற்படும் என்று கண்டறிந்துள்ளனர். இதனால் வயதாக வயதாக தலையில் முடி சுத்தமாக இல்லாது போகும். எனவே முடி கொட்டுவதை நிறுத்தி அழகாகவே இருக்க வேண்டுமெனில் புகை பிடிக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்