General News

துபாயில் உத்சவ் பாட்டுக்குப் பாட்டு போட்டி

துபாய் : துபாயில் உத்சவ் 2011 எனும் பாட்டுக்கு பாட்டு போட்டி கடந்த அக்டோபர் மாதம் துவங்கியது.

முப்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ஊழியர்கள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதிப் போட்டிக்கான தேர்வு கடந்த வெள்ளிக்கிழமை அல் கூஸ் ஷாப்பிங் மாலில் நடைபெற்றது.

இறுதிப்போட்டிக்கு ஆறு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது ( ETA Dial a Car ) மற்றும் முஹம்மது சாமும் ( ETA MELCO ) ஆகியோரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு பாடல் துறையில் சிறப்பிடம் பெற்றவர்களால் பயிற்சி வழங்கப்பட்டதாக நலத்துறை அலுவலர் காயல் யு. அஹமது சுலைமான் தெரிவித்தார்.

விரைவில் இறுதிப் போட்டி நடைபெற இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். போட்டிக்கான அணுசரனையினை வெஸ்டர்ன் யூனியன், யுனிலீவர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நிகழ்விற்கான அணுசரனை வழங்கியிருந்தன.

தொழிலாளர் முகாம் பகுதியில் நடைபெற்ற இப்போட்டிகள் தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button