கவிதைகள் (All)
முளைக்குமோ
முளைக்குமோ
காலையில் தொடங்கி காரிருள் வரும்வரை
சாலையோ வீடோ சேர்ந்து உழைக்கும்
ஆலையோ அல்லது அழைத்திடும் சொல்லிலோ
முளைக்குமா முகிழுமா முதுமொழி என்றே
பிள்ளைபோல் தவிக்கிறேன் பேசிட ஒருவரும்
இல்லாத் துடிக்கிறேன் என்தமிழ் நாட்டிலே
பிறப்பு என்பது பர்த்தென சொல்ல
இறப்பை டெத்தென இருப்போர் உரைக்க
சிறப்பு எனும்சொல் சூப்பராய் வெளிப்பட
கற்கும் கூடமோ காலேஜ் ஆகிட
நிற்கிறோம் நாமும் நட்ட கல்போல்
அற்றதை அறியா அடிமைகள் போன்றே
தாய்மொழி வழியிலே துளிர்க்கும் அறிவுதான்
மெய்யென உணர்ந்து முகவரி ஆனோர்
செயல்களை எல்லாம் சற்றே ஆய்ந்துபார்
அயலவர் எல்லாம் அவரவர் மொழியிலே
ஆய்வுகள் நடத்தி ஆன்றோர் ஆனதை
பயின்று உன்றன் பைந்தமிழ் காக்கவா
பரணிப்பாவலன்
தமிழினப் பேரியக்கம் 7871187306