கவிதைகள் (All)
வளைகுடா வாழ்க்கை
விசாரிக்கப்படுவார்!
திரும்ப்பிப் போவதாயிருந்தால்
விரும்பிப் பழகப்படுவார்!
தோசைக்குள்ள மரியாதை
அப்பத்துக்கும் இடியப்பத்துக்கும் இல்லை!
ஆசையை அடக்கி வைத்து
ஆகாயத்தில் பறப்பவனுக்கே பாசவலை!
வெள்ளைக் கைலியின்
வெளுப்பு மஞ்சளாகு முன்பு
முல்லைக் கொடி மனையாளை விட்டும்
முந்திப் பயணமானிகினால் தான் அன்பு!
பசியாறுதலும் பலகாரங்களும்
பளபளப்பு இருக்கும் வரைக்கும் வருகை!
ருசியான உணவுகளும் குறையும்
ரொக்கத்தின் இருப்பும் அருக!
மீண்டும் மீண்டும் தொடரும்
மீளாப் பயணம் வரைக்கும்
வேண்டும் வளங்கள் கிட்டினாலும்
வேகமாய்ப் பறத்தல் படரும்!
வளைகுடா வாழ்க்கை
வரமா? சாபமா? இன்னும்
விளைந்திடா விடையறியா
வினாவாகவே மின்னும்!
—
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பாடசாலை)
அபுதபி(தொழிற்சாலை)
என் வலைப்பூ தோட்டம் http://www.kalaamkathir. blogspot.com (கவிதைச் சோலை)
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
அலை பேசி: 00971-50-8351499 / 056-7822844/ 055 7956007