முதுகுளத்தூரில் நடந்த இஸ்லாமிய சமூக கல்வி விழிப்புணர்வு முகாம்

முதுகுளத்தூரில் நடந்த இஸ்லாமிய சமூக கல்வி விழிப்புணர்வு முகாம்

முதுகுளத்தூர் :
முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் சென்னை ஜமாஅத், முதுகுளத்தூர்
வியாபாரிகள் நல அறக்கட்டளை ஆகியவை இணைந்து
22.02.2025 சனிக்கிழமை ஏ.எஸ். மஹாலில் இஸ்லாமிய சமூக கல்வி விழிப்புணர்வு முகாமை நடத்தியது.
இந்த முகாமில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்க நிறுவனர் சி.எம்.என். சலீம் உள்ளிட்டோர் ஆலோசனைகளை வழங்கினர்.
ஜமாஅத்தினர் தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பள்ளிக்கூட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
முதுகுளத்தூர் மற்றும் அருகிலுள்ள ஊர்களின் ஜமாஅத்தார்கள் உலமாக்களுடன் திரளான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
எனது உரையின் சுருக்கம்.
” முஸ்லிம்களின் இன்றைய வாழ்வுரிமை நெருக்கடிகளை விட எதிர்காலத்தில் இன்னும் கடுமையான நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
மூமினான மாணவ மாணவிகளே… இந்த நாட்டில் நீங்கள் கண்ணியத்துடன் வாழவேண்டும் என்றால்; உங்களை, உங்களது குடும்பத்தை, உங்களது உயிரினும் மேலான ஷரீஅத்தை, உங்களது வழிபாட்டுத் தலங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் உங்களை ஆற்றல்படுத்திக் கொள்வதைத் தவிர, உங்களை அதிகாரப்படுத்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
அதிகாரமிக்கத் துறைகளில் கூர்மையான இலக்குடைய ஆராய்ச்சிக்கல்வி அல்லாமல் வேறெதைக் கொண்டும் முஸ்லிம்கள் அதிகாரம் பெற முடியாது. முஸ்லிம்களின் சமூக அரசியல் நெருக்கடிகளை குறைத்துவிட முடியாது.
சங்கை பொருந்திய
ஜமாஅத்தார்களே உலமாக்களே…,
உங்கள் ஊரில் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வெழுதும் எல்லா பிள்ளைகளும் கல்லூரியில் சேர்வதை உறுதிப்படுத்துங்கள். இளநிலை பட்டப்படிப்பு முடிக்கும் அனைவரும் முதுநிலை சேர்வதற்கு ஆர்வப்படுத்துங்கள். முதுநிலை முடிக்கும் மாணவர்கள் ஆராய்ச்சிப் படிப்பை முன்னெடுக்க வலியுறுத்துங்கள்.
இன்ஷா அல்லாஹ் அடுத்த 10 ஆண்டுகளில் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திவிட முடியும்.
மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை ஜுமுஆ சொற்பொழிவை கல்விக்காக ஒதுக்குவது பெரும் ஆர்வத் தூண்டலுக்கு காரணமாக அமையும்.
வருகின்றன ஏப்ரல் 17 அன்று கோவையில் நடைபெறும் உயர்கல்வி மாநாட்டில் உங்கள் ஊர் மாணவர்கள் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள் “
- CMN SALEEM


