General News

மங்களுர் விமான விபத்து இரங்கல் கவிதை

உதிர்ந்துவிட்ட உயிர்களை எண்ணி
உதிரம் வழிய அழுகின்றேன்

மலரும் மணம் வீசும் என்று எண்ணியிருந்த
மலராத மழலை மொட்டுக்களையும்

விமானம் எரிய+ட்டி விட்டதை எண்ணி
ஓயாமல் துடிக்கின்றேன்

இந்திய விமானிகள் திறமைசாலிகள்
என்றாலும் திறமைக்கும் வாய்ப்பு வேண்டுமே

தரையிறக்கும் போது ஐயம் ஏற்பட்டால்
தரையிறக்காமல் மீண்டும் உயர்த்தி இறக்கலாம்

என்றாலும் விமானிக்கு அது இழுக்காகுமாம்
அவரது பணி உயர்வு தடைபடுமாம்

ஆதலால் ஒரேயடியாக பாதாளத்தில்
இவர் இறக்கி விட்டார் போலும்

கருகி உதிர்ந்த உயிர்களிலே
கனவுகள் எத்தனை இருந்தனவோ

வீட்டையும் உறவையும் பிரிந்து சென்று பொருள்
ஈட்டி திரும்பிய வேளையிலே

பிரிவு மட்டுமே நிலையாகி விட்ட
பொள்ளாத சோகத்தை எப்படி மறந்திட

இறiவா! விபத்துக்களை நிறுத்திடு
இல்லையேல் விபத்து செய்திகள்
எம்மை அணுகிடாமல் செய்திடு

இறப்பிலும் இனியதை தந்திடு இறைவா!
இருப்போருக்கும் இறந்தோருக்கும்
அமைதியை தந்தருள்வாய்!

முதுவை சல்மான், ரியாத்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button