அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கலாம் !!
துபாய் : துபாய் ஈமான் அமைப்பு வருடந்தோறும் மீலாத் பெருவிழாவினையொட்டி நடத்தி வரும் பேச்சுப்போட்டி 27.01.2012 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அல் தவார் ஸ்டார் இண்டர்னேஷல் பள்ளியில் நடைபெற இருப்பதாக பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்.
அண்ணல் நபிகளார் ஓர் அழகிய முன்மாதிரி எனும் தலைப்பில் இல்லறம், வணிகம், வீரம், ஆட்சிமுறை, நட்பு, வணக்கம், பொறுமை, எளிமை, நேர்மை, விஞ்ஞானம் உள்ளிட்ட கருத்துக்களில் உரை நிகழ்த்தலாம்.
அனைத்து சமூகத்தினரும் இப்போட்டியில் பங்கேற்கலாம். போட்டியாளர்கள் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். பேசுவதற்கான நேரம் 5 நிமிடங்கள். மேற்காணும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் தமிழில் மட்டுமே பேச வேண்டும். போட்டி நடைபெறும் அரங்கினுள் போட்டியாளர்கள் 15 நிமிடங்கள் முன்னதாக வந்து தங்களது வருகையை உறுதி செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 15.01.2012
மேலதிக விபரங்களுக்கு 050 51 96 433 / 055 800 7909 / 050 58 53 888 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்நிகழ்விற்கு ஈடிஏ அஸ்கான், லேண்ட்மார்க் ஹோட்டல், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், அல் மஸ்ரிக் இண்டர்னேஷனல், அரபியா டாக்ஸி, அல் ஹஸீனா ஜுவல்லர்ஸ், இந்தியா சில்க் ஹவுஸ், நிக்காஹ்.காம் உள்ளிட்டவை அணுசரனை வழங்கியுள்ளன.