இராமநாதபுரம்
கீழக்கரை : முஸ்லீம் லீக் சார்பில் புதிய டி.எஸ்.பி.க்கு வாழ்த்து

கீழக்கரை :

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கீழக்கரை நகர் தலைவர் அல்ஹாஜ் ஜமாலுதீன் அவர்கள் வேண்டுகோளின் படி நகர் செயலாளர் பொருளாளர் ஆகியோரின் ஒத்துழைப்போடு மாநில இளைஞரணி துணைத் தலைவர் மற்றும் நகர் நிர்வாகிகள் அனைவரும் புதிதாக பதவியேற்றுள்ள கீழக்கரை துணை காவல்துறை கண்காணிப்பாளர் D.S.P பாஸ்கரன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் கீழக்கரை நகர் பகுதிகளில் இரவு காவல் ரோந்து பணியை விரிவுபடுத்தவும் கோரிக்கை விடுத்தனர்.