கட்டுரைகள்

கணவன் – மனைவி: நகைச்சுவைகள். சிரிக்காமல் தப்பிக்க முடியாது…

மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க?
கணவன்: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான்!!
———— ——— ——— ——— ——— ——— ——— ——— —–

மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க?
கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு

———— ——— ——— ——— ——— ——— ——— ——— —–

மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?
கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்…ஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது…
நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்…

———— ——— ——— ——— ——— ——— ——— ——— —–

மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்…எனக்கு மாச எவ்வளவு
சம்பளம் கொடுப்பீங்க?
கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்… நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும்
உனக்குத்தானே…!
———— ——— ——— ——— ——— ——— ——— ——— —–

மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு,
நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்ன சொல்லிட்டேன். அதை நினைச்சே அவரு இத்தனை வருஷமா
தண்ணியடிக்கிறாரு.

கணவன்: அவன் கொடுத்து வச்சவன்… அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமா
கொண்டாடிட்டிருக்கானேன்னு தான் ஆச்சர்யமா இருக்கு.
———— ——— ——— ——— ——— ——— ——— ——— —–

மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா… என்ன பண்ணுவீங்க?
கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்.

———— ——— ——— ——— ——— ——— ——— ——— —–

கணவன் மனைவிக்கு கார் கதவை திறந்து கொடுத்தால் அதற்கு மூன்று காரணங்களே இருக்க முடியும்.

1. புது மனைவியாக இருக்கும்
2. புது காராக இருக்கும்
3. அந்த பெண் மனைவியாக இருக்க முடியாது.
———— ——— ——— ——— ——— ——— ——— ——— ——

டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்… இந்தாங்க தூக்க மாத்திரை
மனைவி: இதை எத்தனை தடவை கொடுக்கனும் அவருக்கு
டாக்டர்: இது அவருக்கு இல்லை…உங்களுக்கு
———— ——— ——— ——— ——— ——— ——— ——— ——

புயல் மழையில் ஒருவன் பிஸ்ஸா வாங்க கடைக்கு செல்கிறான்

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா…
வந்தவர்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்க அனுப்புவாங்க…!??
———— ——— ——— ——— ——— ——— ——— ——— ——

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்:

கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே…வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும்
வாங்கிக்கேட்ககூடாது…
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா…?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button